தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை
|- தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை...
- இயற்கையில் தென்னை மரங்கள் கடல் சார்ந்த பகுதிகளில் தோன்றி, அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்றதால் தான் இதனை யாத்திரை செய்யும் கொட்டை எனவும் கூறுவார்கள்.
- அவ்வாறு நாம் பார்க்கும் பொழுது கடல் சார்ந்த பகுதியில் திகழும் மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இதன் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது என்பது தெரிய வருகிறது.
- தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் தன் வாழ்நாள் முழுவதும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது அதில் வேர்களும் உட்பட. இதை அடிப்படையாக வைத்து தான் இதன் வேர் அமைப்பை அழியும் வேர்கள் மற்றும் அழியா வேர்கள் என வகை படுத்துகிறோம்.
- இந்த அழியும் மற்றும் அழியா வேர்களின் செயல்பாடுகளும், புதுப்பிக்கும் விகிதமும் (Regenerative Capacity) தான் மரத்தின் ஆரோக்கியத்தையும் காய்ப்பு திறனையும் நிர்ணயிக்கிறது.
- தென்னை சாகுபடி செய்யப்படும் மண் அமைப்பு (மணல் பாங்கான இடம்) மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இந்த வேர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது. மணல் பாங்கான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்களின் வேர்கள் ஆழமாகவும் மிக நீண்டு காணப்படுவதால் இவை அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் காய்ப்பு திறனுடன் காணப்படுகிறது. மேலும் இது போன்ற இடத்தில் வளர்க்கப்படும் மரத்தில் வேர்களின் புதுப்பிக்கும் திறன் அதிகம் காணப்படுகிறது எனவே இவை நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மை உடையது.
- ஆனால் அதற்கு மாறாக சாகுபடி செய்யப்படும் இடங்களில் இவை அனைத்துமே கேள்விக்குறிதான்.
- தென்னையில் வேர்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. வேர் வளர்ச்சி அதிகப்படுத்தக்கூடிய இயற்கை மற்றும் இரசாயன உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வரும் பொழுது வாத நோயால் பாதிக்கப்பட்ட மரங்களைக் கூட மீட்டு விடலாம் என பல ஆய்வுகள் கூறுகிறது.
- ஏனெனில், போதுமான அளவு புதுப்பிக்கக்கூடிய அழியும் வேர்களை உற்பத்தி செய்ய தூண்டும் பொழுது இவை அதிக அளவு நீர் மட்டும் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கடத்துகிறது இது மரங்களுக்கு தாங்கி வளரும் சக்தியை தருகிறது.
- Phytoplasma நோய் கிருமிகள் இந்த அழியும் வேர்களை தாக்கி அதன் செயல்பாடுகளை இழக்க வைத்து, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்வதை படிப்படியாக குறைத்து மரங்களை பலவீனமாக்கி பின்னர் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
- பல்வேறு ஆய்வுகளில் அடிமரம் எனப்படும் தண்டுப் பகுதியில் இந்த அழியும் மற்றும் அழியா வேர்களை புதுப்பிக்க இயலும் அதனால் வாடல் நோயால் தாக்கப்பட்ட மரங்களை மீட்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
- எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருபுறம் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதும் மற்றொருபுறம் புது ஊட்டச்சத்து வேர்களை உற்பத்தி செய்யவும் கடைசியாக நோயை பரப்பக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்தவும் கூடிய நடவடிக்கை எடுத்தால் மரங்களை மீட்க சத்திய கூறுகள் அதிகம் உள்ளது.
- இது ஒருபுறம் இருக்க, வாஸ்குலார் கற்றையில் மட்டுமே வாழும் திறன் படைத்த இந்த Phytoplasma நோய் காரணி அந்தப் பகுதியை உண்டு வாழும் பூச்சியினால் மட்டுமே பரப்பப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வெகுவாக பரவுதலை கட்டுப்படுத்தலாம்.
- வாடல் நோயால் தாக்கப்பட்ட மற்றும் தாக்கப்படாத மரங்களின் நீர் உறிஞ்சித் திறன் மற்றும் ஊட்டச்சத்து அளவை கணக்கிடும் பொழுது பாதிக்கப்படாத செடிகள் நல்ல வேர் வளர்ச்சி மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அடிப்படையில் இருப்பதை காண முடிகிறது. எனவே பயிர்களின் ஆரோக்கியத்தன்மை மற்றும் இந்த ஊட்டச்சத்துக்கள் நோயை தாங்கி வளரும் தன்மையை மரத்திற்கு கொடுக்கிறது.
- நோய் காரணிகளின் இருப்பிடமாக திகழும் களைகள் குறிப்பாக ஒருவித்திலை களைகள் அதிக அளவு பைட்டோபிளாஸ்மா நோய்க் கிருமிக்கு அடைக்கலமாக திகழ்கிறது. எனவே தென்னந்தோப்பில் களை மேலாண்மை மிக இன்றியமையாத அகத்தி திகழ்கிறது.
- அந்தந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகங்கள் வாடல் நோய் காரணியை தாங்கி வளரும் தன்மை உடையதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக