வேம்பு கரைசல் (Neemastra) தயாரிப்பு முறையும் பயன்பாடுகளும்...
|முன்னுரை:
- சாயன பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க பொருளாகவும் வேப்ப இலை திகழ்வதால் இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டிகள் தயாரிப்பில் வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டை பிரதான பங்கு வகிக்கிறது.
- வேப்ப இலைகளில் உள்ள பல்வேறு மூலக்கூறுகள் நோய் பூஞ்சைகளின் வளர்ச்சி தடை செய்வதாலும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டி அடிக்க பயன்படுத்த படுவதாலும் இதை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி நான் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
- வேப்ப இலைகளில் உள்ள அஜடிரக்டின், நிம்பின், சலன்னின், மெளியான்றில் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் ஒரு விதமான பணிகளை மேற்கொள்வதால் இயற்கை விவசாயத்தில் வேப்ப இலை இன்றி அமையாதாக திகழ்கிறது.
தேவையான இடுபொருட்கள்:
1. 5 கிலோ வேப்ப இலை
2. 10 லிட்டர் நாட்டு பசு கோமியம்
3. இரண்டு கிலோ நாட்டு பசு சாணம்
4. 200 லிட்டர் தண்ணீர்
5. 250 லிட்டர் கொள்ளளவு உடைய டிரம்
தயாரிக்கும் முறை:
- வேப்ப இலை மற்றும் அதன் உடன் கூடிய சிறு சிறு கிளைகளை அப்படியே அல்லது சிறிதாக நறுக்கி ட்ரம்மில் உள்ள 200 லிட்டர் தண்ணீரில் இடவேண்டும்.
- பின்பு இதில் 10 லிட்டர் நாட்டு பசு கோமியத்தை ஊற்ற வேண்டும். பிறகு இரண்டு கிலோ சாணத்தை நன்றாக கரைத்து அதில் ஊற்றி வலது புறமாக கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை நிழற்பாங்கான இடத்தில் துணி அல்லது கோணி பயன்படுத்தி இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
- சுமார் 48 மணி நேரம் கழித்து இந்த கலவையை எடுத்து நன்றாக வடிகட்டி பயிரில் தெளிக்கலாம். இதனை சுமார் மூன்று முதல் நான்கு மாதம் வரை பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பயன்கள்:
- இலைபேன், அஸ்வினி, தத்துப்பூச்சி வெள்ளை ஈக்கள் போன்ற சாறு உறிஞ்சு பூச்சிகள் இளம் பயிர்களை பாக்காத வண்ணம் பாதுகாக்கிறது.
- பூச்சிகளின் முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.
- இளம் புழுக்களின் தோலுரித்தல் நிகழ்வை தடை செய்வதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
- பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.
- இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.
- பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
- மேலும் இது பயிர்களுக்கு ஒரு சில ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது.
இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக