google-site-verification: googled5cb964f606e7b2f.html எள் பயிருக்கு சல்பேட் உரம் இடுவதன் நன்மைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 27 ஜனவரி, 2025

எள் பயிருக்கு சல்பேட் உரம் இடுவதன் நன்மைகள்

முன்னுரை:

  • சமையல் பயன்பாட்டிற்காக உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இதனால் சமையல் மற்றும் இதர பயன்பாட்டிற்காக சமையலை எண்ணெய் தேவையின் அளவு அதிகரித்த வண்ணமாக உள்ளது. 
  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் வழி நிறைய உள்ளது அதன் அடிப்படையில் சல்பர் (Sulphur) நுண்ணூட்ட சத்து இடுவதால் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

எள் பயிரில் சல்பர் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

  • மற்ற பயிர்களை விட எள் அதிக அளவு சல்பர் ஊட்டச்சத்தை விரும்பி எடுத்துக் கொள்ளக் கூடியது. ஏனெனில் இதை பயன்படுத்தி குறிப்பிட்ட சில அமினோ அமிலங்கள், பல்வேறு நொதித்தல் நிகழ்வுகள் மற்றும் புரத உற்பத்தி நிகழ்வை மேற்கொள்கிறது. 
  • எள் பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையதால் குறைந்த அளவு ஆவியாதல் நிகழ்வை மேற்கொள்வதால் குறிப்பிட்ட அளவுகிரகித்துட்டச்சத்தமட்டுமே எடுத்துக் கொள்ள இயல்கிறது.
  • எனவே தேவையான அளவு சல்பர் ஊட்டச்சத்தை நாம் கொடுக்கும் பொழுது இதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது என பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த ஊட்டச்சத்து மண் தண்ணீர் உரம் மற்றும் காற்றில் இருந்து சிறிதளவு சல்பர் ஊட்டச்சத்தை சல்பேட் வடிவத்திலும் எடுத்துக் கொள்கிறது இருப்பினும் இது போதுமானதாக இல்லை. 

  • இவ்வாறு கிடைக்க பெறும் சல்ஃபர் ஊட்டச்சத்து அமினோ அமிலங்கள் உற்பத்திக்கு போதுமானதாக இல்லாததால் புரத உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் சல்பர் போதுமானதாக இல்லை.
  • போதுமான சல்பர் ஊட்டச்சத்து இதர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து, இரும்புச்சத்து மற்றும் மாலிப்டினம் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை ஊக்கப்படுத்துகிறது.

சல்பர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • இலையின் வளர்ச்சி மற்றும் பரப்பளவு சற்று குறைந்து காணப்படும். 
  • இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் விளிம்புகளில் இருந்து கருக ஆரம்பிக்கும்.
  • இதனால் பூக்களின் எண்ணிக்கை மற்றும் காய்ப்பு திறன் குறையும். 
  • ஒட்டு மொத்தத்தில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • எண்ணெய் அளவு சற்று குறைந்தே இருக்கும் தரத்திலும் சற்று பின்னடைவு காணப்படும். 

சல்பர் இடுவதன் நன்மைகள்:

  • நல்ல பயிர் வளர்ச்சி 
  • இலைகளின் எண்ணிக்கை மட்டும் இலை பரப்பளவு அதிகரித்து காணப்படும். 
  • கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • விதை பையின் நீளம் அதிகமாக இருப்பதால் அதிக விதை எண்ணிக்கை  காணப்படுகிறது. 
  • ஒட்டுமொத்தமாக மகசூல் அதிகரிக்கும் மேலும் எண்ணெய் பிரித்தெடுக்கும் திறனும் அதிகமாக காணப்படும். 
  • போதுமான அளவு சல்பர் ஊட்டச்சத்து கொடுப்பதால் நன்மை செய்யக்கூடிய அமினோ அமிலங்கள் அதிகமாக உற்பத்தி செய்து எண்ணெயில் தரம் மேம்பட்டு காணப்படும்.

சல்பர் தேவைப்படும் அளவு: 

இயற்கை அல்லது இரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ சல்பர் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தால் அதிக விளைச்சல் காண இயலும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts