நெல் பயிரில் பாக்டீரியா இலை கோடு நோய் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தும் முறை
|- நெல் சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்தில் குறிப்பிட்ட சில நோய் அல்லது பூச்சிகள் பிரதானமாக காணப்படும். பருவத்திற்கு ஏற்ப என்ன நோய் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்படலாம் என்பதை அறிந்திருந்தால் சாகுபடி செய்வது மிக எளிது.
- நெல் சாகுபடியில் ஒரே விதமான அறிகுறிகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு காணப்படுவது நாம் அறிந்ததே எனவே அதன் அறிகுறிகளை வேறுபடுத்த தெரிந்து கொண்டால் சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.
பாக்டீரியா இலை கோடு நோய்:
- இந்த நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக பாக்டீரியா இலை கருகல் நோய்
- மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இலையின் நுனிப்பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் வெளிர் பழுப்பு நிற மாற்றம் காணப்படுவது பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி ஆகும்.
- அதேபோன்று இலையின் விளிம்புகள் தெளிவான நிறம் மாற்றம் அதாவது பச்சை முதல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அதனை பொட்டாசியம் சத்து குறைபாடு எனலாம்.
- இதேபோன்று அறிகுறிகளை தோற்று விக்கக் கூடியது தான் இந்த இலை கோடு நோய்.
நோயின் அறிகுறிகள்:
- ஆரம்ப நிலையில் வெளிர் பச்சை நிற நீள் வட்டப் புள்ளிகள் சிறிதாக இலைகளில் காணப்படும்.
- நாளடைவில் இந்த புள்ளிகள் அளவில் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படும். தற்போது பார்க்கும் பொழுது சிறு சிறு கோடுகள் போன்று காணப்படும்.
- படிப்படியாக இந்த கோடுகள் வெளிர் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் தீவிரமடையும் பொழுது பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
- அதிகாலை வேளையில் இந்த நீள் வட்ட புள்ளிகளில் இருந்து பாக்டீரியாக்கள் திரவம் சுரக்கப்படும்.
- பின்பு நிலை முழுவதும் கருகும் அபாயம் ஏற்படும் இதனால் உணவு உற்பத்தி திறன் குறைந்து பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் தொய்வு ஏற்படும்.
சாதகமான சூழ்நிலை:
- மிதமான அல்லது அதிக வெப்பநிலை.
- அதிக காற்று ஈரப்பதம்
- நோயால் தாக்கப்பட்ட வயலில் சாகுபடி செய்தல்
- அதிக மழை, பனிப்பொழிவு, நீர் பாய்ச்சுதல் மற்றும் அதிக காற்று வீசும் தருணம்
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- பருவத்திற்கு ஏற்றவாறு தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ரகத்திற்கு ஏற்றவாறு உரிய பயிர் இடைவெளியுடன் நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க பெறும்.
- சான்றிதழ் பெறப்பட்ட விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அதனை விதை நேர்த்தி பயன்படுத்துவது மிக முக்கியம்.
- நோயால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து விதை நெல்லை தேர்வு செய்ய வேண்டும்.
- விதை நெல்லை சுடு தண்ணீர் பயன்படுத்தி நேர்த்தி செய்தும் விதைக்கலாம்.
- வயலில் அதிக சேர் இருக்க கூடாது அதே சமயம் அதிக அளவு தண்ணீரும் விட கூடாது எனவே காய்ச்சலும் பாய்ச்சலும் நீர் விடுவது சிறந்தது.
- ஏற்கனவே நெல் சாகுபடி செய்த வயதாக இருந்தால் முந்தைய பயிர்களின் கழிவு நன்கு மக்கும் வரை காத்திருந்து பயிர் செய்வது நல்லது.
- கோடை பருவத்தில் வயலை ஆழமாக உளவு செய்து நோய் தாக்கும் கிருமிகளை அழிக்க முயற்சி செய்யலாம்.
- களைகள் இன்றி சுத்தமாக பராமரித்தல் அவசியம்.
- அதிக அளவு உரம் இதுவரை தவிர்க்கவும் இது மேலும் நோய் பரவுதல் ஊக்குவிக்கும்.
- Xanthomonas வகையை சேர்ந்த இந்த பாக்டீரியா எளிதில் கட்டுப்படுத்துவது சற்று கடினம்.
- நோய் தாக்குதலை தொடர்ச்சியாக ஆராய்ந்து ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கலாம்.
- சாகுபடி செலவை குறைக்க Bacillus subtilis மற்றும் Pseudomonas கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பதால் நோயை கட்டுக்குள் வைக்கலாம். அல்லது கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை இலை வழியாக தெளிக்கலாம்.
- Copper oxychloride- 50% - 2-2.5 கி/ 10 liter தண்ணீருக்கு
- Coper hydroxide- 10கி/ 10 liter தண்ணீருக்கு
- Streptomycin sulphate + Tetracycline Hydrochloride 90:10 SP- 20 கி/10 liter தண்ணீருக்கு
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக