google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 22 நவம்பர், 2023

வேப்பங்கொட்டை விதைச்சாறு 5 சதவீதம் தயார் செய்யும் முறை:

 

வேப்பங்கொட்டை விதைச்சாறு 5 சதவீதம் கரைசல்:

 

       செயற்கை பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதால் பரவலாக இது விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேப்பங்கொட்டை விதையில் காணப்படும் பல்வேறு உயிரியல் கலவைகள் பூச்சி விரட்டியாக பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

வேப்பங்கொட்டை விதையில் காணப்படும் சில முக்கிய உயிரியல் கலவைகள்:

1.    அஜடிரக்டின் (Azadiractin):  நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட உயிரிப்பொருள் இது. இது சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2. நிம்பின் (Nimbin): இது பாக்டீரியா மற்றும் பூஞ்சான் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவதுடன் அலர்ஜக்கு எதிராக செயல்படுகிறது.

3.   சலன்னின் (Salannin) மற்றும் மெளியான்றில் (Meliantriol) போன்ற வகையிலும் பூச்சிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

 

செயல்படும் விதம்:

1.  முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.

2. லார்வாக்கள் மற்றும் களின் தோலுரித்தல் கிழ்வை தடை செய்வதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

3.       பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.

4.       இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.

5.       பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

 

தேவையான பொருட்கள்:

1.       வேப்பங்கொட்டை விதை கர்னல் – 5 கிலோ

2.       துணி சலவை பவுடர் -100 கிராம்

3.       சாக்கு துணி

4.       தண்ணீர் -200 லிட்டர்

 

தயார் செய்யும் முறை:

நன்கு காய்ந்த வேப்பங்கொட்டை விதைகளை 5 கிலோ எடுத்துக் கொள்ளவும். இது நன்றாக தூள் செய்து ஒரு சாக்குத் துணியில் கட்டி 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மூட்டையை எடுத்துவிட்டு கரைசலை நன்றாக கலக்கி மெல்லிய துணி மூலம் வடிகட்டவும். இவற்றுடன் 190 லிட்டர்  தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கலவையாக மாற்றவும். இதனுடன் போதுமான அளவு ஒட்டும் திரவத்தை பயன்படுத்தி ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.

 பயன்பாடுகள்:

  • பூச்சிகளை கட்டுப்படுத்தி நிர்வகிக்க உதவுகிறது. உதாரணமாக, அசுவினி, கம்பளி பூச்சிகள், வண்டுகள், வெள்ளை ஈக்கள் மற்றும் பேன்களுக்கு எதிராக செயல்படுகிறது.
  • வேப்பங்கொட்டை விதைச்சாறு பூச்சிக்கொல்லி பண்புகளைத் தவிர சில பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, பல்வேறு இலைப்புள்ளி நோய்கள், இலை துரு மற்றும் சாம்பல் நோயை தடுத்தும், கட்டுப்படுத்தியாகவும்  செயல்படுகிறது.
  • பல்வேறு ஆய்வுகளில் வேப்பங்கொட்டை விதைச்சாறு நூற்புழுக்களை குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • பூச்சிகளுக்கான விரட்டியாக செயல்படுகிறது.
  • அங்கக வேளாண்மையில் வேப்பங்கொட்டை விதைச்சாறு ஒரு மதிப்புமிக்க கருவியாக கருதப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைப்பதுடன் நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
  • விதைகளை நடுவதற்கு முன் வேப்ப விதை சாற்றுடன் விதை நேர்த்தி செய்யும் போது மண்ணில் பரவும் நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. 

மக்காச்சோளத்தில் சத்து குறைபாட்டு அறிகுறிகள்...

மக்காச்சோளத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள்:

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தற்பொழுது மக்காச்சோளம் சாகுபடி தொடங்கி உள்ளதால் அதில் ஏற்படும் ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக இந்த தகவல்கள் பதிவிடப்படுகிறது.

 

தலைச்சத்து பற்றாக்குறைகள்:  

 

செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளின் நுனியில் இருந்து கீழ்நோக்கி V வடிவில் இலைகள்  பச்சை நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு முதல் மஞ்சள் நிறத்தில் மாற்றம் அடையும். போதுமான தழைச்சத்து இல்லாமை, அதிகப்படியான வறட்சி அல்லது ஈரப்பதம் காரணமாக மண்ணில் உள்ள தலைச்சத்துக்கள் செடிகளால் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும்.file:///C:/Users/ddhtv/Downloads/TB12013NutrientDeficiencysymptomsinMaize.pdf

 

மணிசத்து பற்றாக்குறைகள்:

 

இது பெரும்பான்மையாக இளம் செடிகளில் காணப்படுகிறது. செடிகள்  அடர் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் சிகப்பு அல்லது ஊதா நிறத்தில் மாற்றம் அடையும். நாளடைவில் அறிகுறிகள் மறைந்து விடும்.  போதுமான வேர் வளர்ச்சி இல்லாமை, அதிகப்படியான உரங்களை வேரில் இடுவது அல்லது களைகொள்ளிகள் காரணமாக இந்த வகை அறிகுறிகள் காணப்படுகிறது. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8826957/

 

சாம்பல்சத்து பற்றாக்குறைகள்:

 

செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலை ஓரங்களில் மஞ்சள் முதல் வெளிர் சிகப்பு நிறத்தில் மாற்றமடையும். தாக்குதல் தீவிரமடையும் போது செடிகளின் தண்டுகள் பலவீனம் அடைவதால் காற்று அல்லது அதிக மழையின் போது சாயும் தன்மை கொண்டது. போதுமான வேர் வளர்ச்சியின்மை, இறுக்கமான மண் தன்மை, அதிகப்படியான வறட்சி அல்லது ஈரப்பதம் இதற்கு காரணமாகிறது. மேலும் முந்தைய பயிர்களின் சாம்பல்சத்து பயன்பாடு அதிகமாகும் போது இவ்வகையான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

 

கால்சியம் சத்து குறைபாடுகள்:

 

பொதுவாக கால்சியம் சத்து குறைபாடுகள் மக்காச்சோளத்தில் தென்படுவதில்லை. இருப்பினும் சில நேரங்களில் கணு இடைவெளிகள் குறைந்து அடுத்தடுத்து இலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து படிக்கட்டுகள் போன்ற தோற்றத்தில் காணப்படும். மண்ணின் அமிலத்தன்மை, அதிகப்படியான சாம்பல் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் காணப்படுவதாலும் இவ்வகை அறிகுறிகள் தோன்றுகிறது.file:///C:/Users/ddhtv/Downloads/TB12013NutrientDeficiencysymptomsinMaize.pdf 


மெக்னீசியம் சத்து குறைபாடுகள்:

 

அதிகப்படியான மண் அமிலத்தன்மை, மழைப்பொழிவு மற்றும் சாம்பல்சத்து காரணங்களால் ஏற்படுகிறது. செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளில் வெள்ளை முதல் மஞ்சள் நிறத்தில் கோடு கோடுகளாக  காணப்படும்.

 

கந்தக சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் நுனியில் உள்ள இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் அடையும். மண்ணின் அமிலத்தன்மை மற்றும் குறைந்த தொழு உரம் பயன்பாட்டினால் ஏற்படுகிறது.https://www.yara.co.uk/crop-nutrition/forage-maize/nutrient-deficiencies-maize/

 

மாலிப்டினம் சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளின் நுனி மற்றும் ஓரங்களில் காணப்படும் பச்சையங்கள் செங்கல் நிறத்தில் மாற்றம் அடைவதுடன் இலை நரம்புகளுக்கு இடையே வெளிர் மஞ்சள் நிறம் காணப்படும்.

 

தாமிர சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் குருத்துகளில் இருந்து வரக்கூடிய இலைகள் மஞ்சள் நிற கோடுகளால் காணப்படும். இந்த அறிகுறிகள் இரும்பு சத்து குறைபாடு போன்றே காணப்படும்.

 

இரும்பு சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் நுனியில் காணப்படும் இலைகளின் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிற மாற்றம் அடையும். மண்ணில் போதுமான இரும்புச்சத்து இருந்தாலுமே காரத்தன்மை காரணமாக இது செடிகளுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.

 

துத்தநாகம் குறைபாடுகள்: 

 

இலைகளின் ஓரம் மற்றும் நடுப்பகுதி பச்சையாகவே காணப்படும் இருப்பினும் இலையில் மஞ்சள் நிற பட்டைகள் காணப்படும் இவைகள் ஆரம்பத்தில் வெள்ளை நிற பட்டையாக காணப்படும். https://www.yara.co.uk/crop-nutrition/forage-maize/nutrient-deficiencies-maize/



செவ்வாய், 21 நவம்பர், 2023

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை...

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாக கொண்ட எண்ணெய் பனை சிவப்பு எண்ணெய் பனை எனவும் அழைக்கப்படுகிறது. தற்பொழுது இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்தல் விவசாயிகளுக்கு எவ்வாறு லாபகரமான பயிராக திகழ்கிறது:

  • எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் தற்சமயம் குறைந்த செலவில் தோட்டம் அமைக்க சரியான தருணம் இது.
  • ஊடு பயிர் செய்தல் மற்றும் பராமரிப்பிற்கும் அரசிடமிருந்து போதுமான சலுகைகள் தற்பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
  • விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் இதன் இடுபொருள்களை சார்ந்து இயங்கக்கூடிய தொழில்  நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
  • எண்ணெய் பனை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை நோக்கி பயணிப்பதால் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சமையல் எண்ணெய் கிடைக்கப்பெறும்.
  • விவசாயிகள் இதனை முதன்மை பயிராகவும் மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஊடுபயிர்  செய்வதால் வருமானம் இரட்டிப்பாகும்.
  • பெரிய விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் செய்திட ஏதுவானதாக எண்ணெய் பனை திகழ்கிறது.
  • குறைந்தபட்ச ஆதார விலை போன்று இந்தப் பயிருக்கு VGF-Viability Gap Funding என்ற முறையில் ஆதார விலை கிடைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே இப்பயிரினல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • 30 வருடங்கள் வரை குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.


இவற்றையெல்லாம் எவ்வாறு நேரடியாக உறுதி செய்வது:

  • சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தில் மட்டும் கீழ்க்கண்ட இனங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் தரமான எண்ணெய் பனை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
  • ஊடு பயிர் செய்வதற்கும் பராமரிப்பு மேற்கொள்வதற்கும் மானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விதைத்தோட்டம் மற்றும் நாற்றங்கால்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய்  செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைத்திடவும், மழை நீர் சேகரிப்பு குளங்கள் வெட்டிடவும் மானியம் தரப்படுகிறது.
  • மண்புழு உர கூடாரங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் உதவுகிறது.
  • இதைத் தவிர பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல இனங்களில் அரசு உதவி புரிகிறது.


அரசின் உதவிக்கரம் நீட்டப்படுமா? எண்ணெய் பனை லாபகரமான பயிர் தான் என்பதை உறுதி செய்திட சில மறைமுக அதிகாரப்பூர்வ தகவல்கள்:

  • சமையல் பயன்பாட்டிற்கு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனவே இதன் தேவை எப்பொழுதும் குறைய போவதில்லை.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் எண்ணெய் பனைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய்யின் பயன்பாடு சுமார் 55 லிருந்து 60% ஆகும். பயன்பாட்டின் சதவீதம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
  • பல்லாண்டு எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் அதிகமாக மகசூல் தரக்கூடியது இப்பயிராகும்.
  • இந்தியாவின் ஆண்டு பாமாயில் எண்ணெய் தேவை சுமார் 250 லட்சம் டன் உள்ளது.
  • தற்பொழுது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 125 முதல் 130 லட்ச டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள தேவைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது இதன் சராசரி மதிப்பு சுமார் 80000 கோடியாகும். எனவே இதன் தேவை குறைந்தாலும் மதிப்பு குறைய போவதில்லை.
  • மேலும் மறைமுகமாக பாமாயில் பல்வேறு எண்ணெய்களில் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
  • 2015- 16 ஆண்டுகளில் இந்தியாவில் வசிக்கும் தனி நபருக்கு ஆண்டுக்கு 19.10 கிலோ வரை பாமாயில் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது இது 18 புள்ளி 20 கிலோவாக குறைந்துள்ளது. எனவே சாகுபடி செய்வது லாபகரமானது.
  • பாமாயிலில் உள்ள Vit-A, Oleic acid, Linoleic acid  மற்றும் Beta carotene சரியான அளவில் பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு உகந்ததே ஆகும்.
  • இது மட்டும் அல்லாமல் எண்ணெய் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது சோப்பு, சலவை பவுடர், தலைக்கழுவு உதவும் நீர்மம், அழகு சாதன பொருட்கள் மற்றும் சில நாடுகளில் பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது.
  • இவைகளின் தேவையை உணரும் போது குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதால் இப்பயிரை சாகுபடி செய்தல் முக்கியமானதாகும். சுமார் 4-5 டன் பாமாயில் மற்றும் 0.4-0.5 டன் எண்ணெய் பனை கர்னல் எண்ணெய் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறலாம்.
  • மற்ற எண்ணெய் வித்து பயிர்களை விட இதில் சுமார் ஐந்து மடங்கு அதிகமான விளைச்சல் பெறப்படுகிறது. எனவே அரசு இப்பயிரை ஊக்குவிப்பதில் தவறில்லை.

கவனிக்கப்பட வேண்டியவை:

  •  தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • இப்பயிரின் நீர் தேவை சற்று அதிகம் அதாவது 200 - 300 லிட்டர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
  • நடவு செய்த 3-4  வருடங்களுக்கு மகசூல் பெற இயலாது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் காய்ப்பு திறன் மிகவும் முக்கியமானதாகும்.
  • வளமான செடிகளை உருவாக்கிட முதல் மூன்று வருடங்களுக்கு பயிரில் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும்.
  • சந்தைப்படுத்துதல்.

மேற்கொள்ளப்பட வேண்டியவை:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக கன்றுகளை பெறும் போது அவற்றின் தரம் உறுதியானதாக இருக்கும்.
  • பயிரின் நீர் தேவையை சரியாக பூர்த்தி செய்திட சொட்டுநீர் பாசனத்தை அமைத்து சரியாக பராமரித்தால் மட்டுமே போதுமானதாகும்.
  • இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு ஊடு பயிர் செய்திட உதவுகிறது.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு பண்ணையில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் வண்டுகளை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதை சரியான முறையில் மேற்கொள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம்.
  • அரசு, விவசாயி மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை:

    இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இதன் பயன்பாட்டினை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கும் போதும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போதும் மேலும் கிடைக்கப்பெறும் கிடைக்கபெறும் தகவல்களை கூர்ந்தாய்வு செய்யும்போதும் எண்ணெய் பனை சாகுபடி செய்தல் ஒரு லாபகரமான பயிராகவே கருதப்படுகிறது.

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.   https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

x

திங்கள், 20 நவம்பர், 2023

மல்லிகை மலர்கள் ஏன் இளஞ்சிவப்பு நிறமாக மாறி உதிர்கிறது... அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்??

மல்லிகை மலரில் மிட்ஜ் (Midge) பூச்சி தாக்குதல் :

    மல்லிகை மலரானது உலகில் உள்ள வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகைப் பூ உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் நடப்பில் சுமார் 12000 எக்டர் நிலப்பரப்பில் மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
   தற்போது நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் Contarinia maculipennis எனப்படும் மிட்ஜ் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. file:///C:/Users/ddhtv/Downloads/Bioecology_of_Blossom_Midge_of_Jasmine_Contarinia_.pdf


பூச்சியின் விவரம்:

  • இவ்வகைப் பூச்சிகள் இதழ்களின் உட்புறம் முட்டைகளை இடுகின்றன. சுமார் 24-48 மணி நேரத்திற்குள் முட்டைகளை பொறித்து லார்வா நிலைக்கு மாறுகிறது.
  • லார்வாக்கள் ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலும், பின்னர் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இவ்வகைப் புழுக்கள் மொட்டுகளுக்கு உள்ளே சென்று இதழ்களில் உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன.
  • சுமார் 4-5 நாட்களுக்குள் பியூபா நிலையை அடைந்து, செடிகளிலிருந்து தரையை சென்றடைகிறது. பியூபா நிலையில் 7-8 நாட்கள் நீடித்து, பின்னர் மிகவும் சிறிய மற்றும் மென்மையாக ஈக்களாக மாறுகிறது.
  • பெண் ஈக்கள் கறுப்பு தலை மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலைக் கொண்டும், ஆண் ஈக்கள் பழுப்பு நிறத்தில் பெண் ஈக்களை விட சற்று சிறியதாக காணப்படும்.
  • குண்டுமல்லி மொட்டுக்களின் வடிவம், அளவு மற்றும் அதனுள் உள்ள வேதியியல் பொருட்களே இவ்வகை பூச்சித் தாக்குதல் மற்ற மல்லிகை இனங்களை விட குண்டுமல்லியில் அதிகம் காணப்படுகிறது.

அறிகுறிகள்

  • லார்வாக்கள் மொட்டுகளின் அடிப்பகுதியை துளைப்பதால் பூக்களின் காம்புகள் சற்று வீக்கத்துடன்  காணப்படும்.
  • புழுக்கள் மொட்டுகளின் உள்ளே சென்று சாறை உறிஞ்சுவதால் மொட்டுக்களின் வடிவம் சிதைக்கப்பட்டு இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடைகிறது.
  • கடுமையான பூச்சி தாக்குதலின் போது மொட்டுகள் காய்ந்து உதிர்கின்றன.https://agritech.tnau.ac.in/horticulture/horti_flower%20crops_malligai.html


கட்டுப்படுத்தும் முறைகள்

  • சரியான தருணத்தில் கவாத்து மேற்கொள்வதால் சூரிய ஒளி போதுமான அளவு செடிகளில் ஊடுருவி வளமான பயிரை ஊக்குவிக்கிறது.
  • பருவமல்லாத காலத்தில் போதுமான அளவு  வேப்பம்புண்ணாக்கு அல்லது குளோரிபைரிபாஸ் குருணையை மண்ணிலிட்டு மண்ணை கிளறுவதால் பியூபாக்கள் அழிக்கப்படும்.
  • நல்ல வடிகால் வசதியுடன் களைகள் இல்லாமல் வயல்களை பராமரிக்கவும்.
  • பூச்சித் தாக்குதல்களில் மிட்ஜ் பூச்சி தாக்குதல் குறைவாக உள்ள மல்லிகை ரகங்களை தேர்வு செய்து நடவும்.
  • பிச்சி மற்றும் காக்கர்டான் ரக மல்லிகைகள் இப்பூச்சிகளை தாங்கி வளரக்கூடியது.
  • தாக்கப்பட்ட மொட்டுகள் மற்றும் செடிகளின் பாகங்களை சேகரித்து அழிக்கவும்.
  • ஊடுபயிராக சாமந்தி, எள் அல்லது கொத்தமல்லியை பயிரிடுவதால் பூச்சித் தாக்குதல் 30% வரை குறைக்கப்படும். பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதை தவிர்க்கவும்.
  • பொறி பயிராக சாமந்தி செடிகளை வயலை சுற்றி நடுவதால், பூச்சித் தாக்குதலின் அளவு அளவு குறையும்.
  • வேப்பம்கொட்டை வடிநீர் கரைசல் 5% தெளிக்கலாம்.https://agritech.tnau.ac.in/horticulture/horti_flower%20crops_malligai.html
  • மிதமிஞ்சிய ஈரப்பதம் பூச்சித் தாக்குதலை அதிகரிக்கும். எனவே, அதிகமான ஈரப்பதத்தைத் தவிர்க்கவும்.
  • இயற்கை பூச்சியுண்ணிகளான லேடி பக்ஸ், லேஸ்விங்ஸ் மற்றும் ஒட்டுண்ணி குழவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
  • மஞ்சள் ஒட்டுப்பொறி 5 எண்கள் / 1 ஏக்கர்  பயன்படுத்துவதால் முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • பேவேரியானா பேசியானா – 5கி/லி தண்ணீரில் கலந்து 7 நாட்கள் இடைவெளியில்  மூன்று முறை தெளிக்கவும்.
  • டிரைக்கோடெர்மா சிலோனிஸ் ஒட்டுண்ணியை எக்டருக்கு 1 இலட்சம் எண்கள் விடுவிப்பதால் 61-79 % வரை பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோடெர்மா சிலோனிஸ், மெட்டாரைசம் அனினோபிளியே கலந்து தெளிப்பதால் 67 % வரை நோய்த் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.https://www.agrifarming.in/jasmine-farming

 

1.    Spinosad - 0.5 ml/1 lit.

2.    Thialoprid  2 ml/ 1 lit.

3.    Chlorantraniliprole - 0.3ml/ 1 lit

4.    Novaluron + Emamectin- 2 ml + 0.5g / 1 lit.

5.    Spirotetramet - 2.5 ml/ 1 lit.

6.    Rynaxypyr- 0.5 ml/1 lit.

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 

 

சின்ன வெங்காயத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறை...

முன்னுரை:

  • சின்ன வெங்காயம் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவது நம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
  • தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 45,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையாக சின்ன வெங்காயம் விதை காய்களை கொண்டே சாகுபடி செய்து வருகிறார்கள். இது குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயனைக் கொண்டு இருந்தாலும் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. 
  • இதைத் தவிர்த்திட சின்ன வெங்காயம் விதைகளை நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்து அதை பிடுங்கி நடுவது மிகவும் செலவு குறைவான முறையாகும். மேலும் இதற்கு தேவையான விதை மற்றும் இடு பொருட்களை அரசு மானியத்தில் வழங்குவது மேலும் விவசாயிகளின் செலவினத்தை குறைக்கிறது.

இரகத்தை தேர்வு செய்தல் மற்றும் விதை அளவு:

  • அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு சின்ன வெங்காய இரகங்கள் இருந்தாலும் அதில் கோ-5(On), புல்லட், டெய்லர்...... போன்ற இரகங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் உகந்தது.http://ecoursesonline.iasri.res.in/Courses/Production%20Technology%20of%20Vegetables%20&%20Flowers/HORT281/Data%20Files/lec15.html
  • விதையின் தரம், தேர்வு செய்யப்படும் இரகம், மாற்றங்கள் அமைக்கும் முறை, நிலத்தின் தன்மை மற்றும் பருவம் முதலியவற்றைப் பொறுத்து ஏக்கருக்கு 1-1.50 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure
நாற்றங்கால் அமைக்கும் முறை:

  • ஒரு ஏக்கர் நடவு செய்திட சுமார் 200 முதல் 250 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படுகிறது. இது சற்று நிழல் பாங்கான இடத்தில் இருந்தால் உகந்தது. இல்லையெனில் 50 சதவீதம் நிழல் வலை கூடாரம் அமைத்து அதில் நாற்று விடலாம்.
  • தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்/கம்போஸ்ட் அல்லது மண்புழு உரத்துடன் தலா 100 கிராம் Trichoderma harzianum, Pseudomonas fluorescence, 2 கிலோ DAP மற்றும் இரண்டு கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு நன்கு உழுவு செய்து மண்வெட்டியால் கொத்தி விட வேண்டும்.
  • 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் நில அமைப்பை பொருத்து போதுமான அளவு நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்திட வேண்டும். அப்போது தான் பாத்தியின் ஒரு புறத்திலிருந்து விதைகளை விதைப்பு செய்தல், நீர் பாய்ச்சல், உரமிடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.
  • இவ்வாறாக அமைக்கப்பட்ட மேட்டுப்பத்தியில் ஏழு முதல் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் கையால் 2-3 சென்டிமீட்டர் ஆழமுள்ள கோடுகள் இடவேண்டும். தேர்வு செய்யப்பட்ட விதைகளை இதில் பரவலாக இட வேண்டும். பின்னர் இதில் மக்கிய தொழு உரத்தினை தூவி விடுவதால் விதைகள் மூடிவிடும்.
  • விதைப்பு செய்த மேட்டுப்பாத்தியில் வைக்கோல், காய்ந்த புல், இலை சருகுகள்.. இதர இது போன்று ஏதேனும் ஒரு பொருட்களை மேட்டுப்பத்தியில் பரவலாக இட்டு மூடி விட வேண்டும். இது கதகதப்பு தன்மையை ஏற்படுத்தி விதைகளை எளிதில் முளைக்க செய்கிறது. விதையின் தன்மையை பொறுத்து விதைகள் விதைப்பு செய்த 6 நாட்களில் முளைக்க தொடங்கிவிடும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure

நாற்றுகளை எப்போது பிடுங்கி நட வேண்டும்:

  • ஜூன்- ஜூலை மாதங்களில் விதைப்பு மேற்கொண்ட மேட்டுப்பத்தியில் இருந்து 38-42 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நிலத்தில் நட வேண்டும். பிடுங்கி நடும் போது மிளகு வடிவ சிறு காய்கள்  நாற்றுகளில் இருப்பதை உறுதி செய்திடவும்.

  • செப்டம்பர் முதல் நவம்பர் காலங்களில் விதைப்பு  மேற்கொள்ளும் தருணத்தில் 45 லிருந்து 50 நாட்கள் கழித்து நாற்றுகளை பிடுங்கி நட வேண்டும்.

நாற்றுகளை பராமரிக்கும் முறை:

  • நாற்றுகளில் அழுகல் அல்லது ஏதேனும் நோய்கள் தென்பட்டால் Trichoderma harzianum அல்லது Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10  கிராம் பத்து லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • விதைப்பு மேற்கொண்ட 15 மற்றும் 30ஆம் நாளில் 19:19:19/20:20:20 என்ற நீரில் கரையும் உரத்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் நீரில் கரைத்து மாலை நேரங்களில் ஊற்றி விடவும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இலாபம் தரும் ஆமணக்கு பயிர் சாகுபடி...

ஆமணக்கு சாகுபடி எவ்வாறு உகந்தது :

    அதிக வறட்சி, வளமற்ற மண், குறைந்த மழைப்பொழிவு, அதிக களைகள் வளரக்கூடிய நிலம், வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நோய் /பூச்சி தாக்குதல் அதிகம் உள்ள இடம் என எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வளரக்கூடியதாக திகழ்கிறது. எனவே தான் இதை சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறேன்.

விதைதேர்வு மற்றும் நேர்த்தி :

    கோ1, TMV-5, TMV-6, YRCH-1, YTP-1, GAUCH -4, TMVCH என பல்வேறு அரசு வெளியிடப்பட்ட ரகங்களும் அதைத் தவிர பல்வேறு தனியார் நிறுவன ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டு கிலோ விதை தேவைப்படும். தனியார் நிறுவன விதைகள் நேர்த்தி செய்தே வரும். உள்ளூர் ரகங்களை தேர்வு செய்யும் போது அதனை Pseudomonas மற்றும் Trichoderma கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.https://oilseeds.dac.gov.in/Castor.aspx

நிலம் தயார் செய்தல் மற்றும் விதைப்பு மேற்கொள்ளுதல் :

    கோடைகாலத்தில் நன்கு உழவு செய்து மண் கட்டிகளை உடைத்து மண் கடினத்தன்மை இல்லாமல் இருந்தால் தான் நன்கு வேர் வளர்ச்சி காணப்படும். ஆமணக்கு வேர்கள் படர்ந்து வளரும் தன்மை கொண்டது எனவே மண் பொலபொலப்புடன்இருக்க வேண்டும் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு அடையும். அதிக மழை அல்லது நீர் தேங்கும் பகுதிகளில் பார் அமைத்து பயிரிடுதல் உகந்தது. ராகங்களை பொறுத்து பயிர் இடைவெளி 5 முதல் 8 அடி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/Agriculture/oilseeds_castor_ta.html

உர மேலாண்மை :

    ஏக்கருக்கு நான்கு முதல் எட்டு டன் மக்கிய தொழு உரம். முடிந்தால் உயிர் பூஞ்சான் கொல்லி கொண்டு உட்டமேற்றி இடலாம். அடி உரமாக -DAP/காம்ப்ளக்ஸ் -100 கிலோ + Gypsum -50 கிலோ + நுண்ணூட்ட உரம் -10 கிலோ. நடவு செய்த 45 நாட்கள் கழித்து மேல் உரமாக காம்ப்ளக்ஸ் இரண்டு மூட்டை.

களை மேலாண்மை:

    ஆமணக்கு விதைகள் சற்று விரைவாக முளைப்பு திறன் கூடியது என்பதால் நடவு செய்த இரண்டாம் நாளில் களை கொல்லி அடிக்க வேண்டும். நடவு செய்த 45 நாட்களில் கை களை எடுக்க வேண்டும்.

அறுவடை செய்தல்:

    தேர்வு செய்யப்படும் ரகங்களை பொறுத்து 120 முதல் 175 நாட்கள்  கழித்து அறுவடை செய்யலாம். குளையில் காணப்படும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு காய்கள் பழுப்பு நிறம்  மாறும் போது கொத்தை  வெட்டி  மூன்று நாட்கள் சாக்கியில் மூடி வைத்திருந்து பின்னர் நன்கு காய வைக்க வேண்டும்.https://agritech.tnau.ac.in/ta/post_harvest/pht_oilseeds_ta.html

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

    அதில் பெரிதாக நோய் அல்லது பூச்சிகள் வருவதில்லை. அவ்வாறு தோன்றும் பட்சத்தில் இயற்கை முறையில் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_crop_insect_oil_castor_ta.html

மகசூல் மற்றும் விலை:

    ஏக்கருக்கு 1 டன் வரை கூட மகசூல் எடுக்கலாம். கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்கும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD 

Recent Posts

Popular Posts