வேப்பங்கொட்டை விதைச்சாறு 5 சதவீதம் தயார் செய்யும் முறை:
|
வேப்பங்கொட்டை
விதைச்சாறு 5 சதவீதம் கரைசல்:
செயற்கை பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும்
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதால் பரவலாக இது விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. வேப்பங்கொட்டை விதையில் காணப்படும் பல்வேறு உயிரியல் கலவைகள் பூச்சி விரட்டியாக
பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேப்பங்கொட்டை
விதையில் காணப்படும் சில முக்கிய உயிரியல் கலவைகள்:
1. அஜடிரக்டின் (Azadiractin): நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட உயிரிப்பொருள் இது.
இது சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2. நிம்பின் (Nimbin): இது பாக்டீரியா மற்றும் பூஞ்சான் போன்றவற்றிற்கு
எதிராக செயல்படுவதுடன் அலர்ஜக்கு எதிராக செயல்படுகிறது.
3. சலன்னின் (Salannin) மற்றும் மெளியான்றில் (Meliantriol)
போன்ற வகையிலும் பூச்சிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
செயல்படும்
விதம்:
1. முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை
தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.
2. லார்வாக்கள் மற்றும் களின் தோலுரித்தல் கிழ்வை தடை செய்வதால்
பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
3.
பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.
4.
இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.
5.
பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள்
வைக்கப்படுகிறது.
தேவையான
பொருட்கள்:
1.
வேப்பங்கொட்டை விதை கர்னல் – 5 கிலோ
2.
துணி சலவை பவுடர் -100 கிராம்
3.
சாக்கு துணி
4.
தண்ணீர் -200 லிட்டர்
தயார்
செய்யும் முறை:
நன்கு காய்ந்த வேப்பங்கொட்டை விதைகளை 5 கிலோ எடுத்துக்
கொள்ளவும். இது நன்றாக தூள் செய்து ஒரு சாக்குத் துணியில் கட்டி 10 லிட்டர் தண்ணீரில்
12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மூட்டையை எடுத்துவிட்டு கரைசலை நன்றாக கலக்கி மெல்லிய
துணி மூலம் வடிகட்டவும். இவற்றுடன் 190 லிட்டர்
தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கலவையாக மாற்றவும். இதனுடன் போதுமான அளவு ஒட்டும்
திரவத்தை பயன்படுத்தி ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.
- பூச்சிகளை கட்டுப்படுத்தி நிர்வகிக்க உதவுகிறது. உதாரணமாக, அசுவினி, கம்பளி பூச்சிகள், வண்டுகள், வெள்ளை ஈக்கள் மற்றும் பேன்களுக்கு எதிராக செயல்படுகிறது.
- வேப்பங்கொட்டை விதைச்சாறு பூச்சிக்கொல்லி பண்புகளைத் தவிர சில பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, பல்வேறு இலைப்புள்ளி நோய்கள், இலை துரு மற்றும் சாம்பல் நோயை தடுத்தும், கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகிறது.
- பல்வேறு ஆய்வுகளில் வேப்பங்கொட்டை விதைச்சாறு நூற்புழுக்களை குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
- பூச்சிகளுக்கான விரட்டியாக செயல்படுகிறது.
- அங்கக வேளாண்மையில் வேப்பங்கொட்டை விதைச்சாறு ஒரு மதிப்புமிக்க கருவியாக கருதப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைப்பதுடன் நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
- விதைகளை நடுவதற்கு முன் வேப்ப விதை சாற்றுடன் விதை நேர்த்தி செய்யும் போது மண்ணில் பரவும் நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.
0 Comments:
கருத்துரையிடுக