google-site-verification: googled5cb964f606e7b2f.html சின்ன வெங்காயத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 20 நவம்பர், 2023

சின்ன வெங்காயத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறை...

முன்னுரை:

  • சின்ன வெங்காயம் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவது நம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
  • தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 45,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையாக சின்ன வெங்காயம் விதை காய்களை கொண்டே சாகுபடி செய்து வருகிறார்கள். இது குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயனைக் கொண்டு இருந்தாலும் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது
  • இதைத் தவிர்த்திட சின்ன வெங்காயம் விதைகளை நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்து அதை பிடுங்கி நடுவது மிகவும் செலவு குறைவான முறையாகும். மேலும் இதற்கு தேவையான விதை மற்றும் இடு பொருட்களை அரசு மானியத்தில் வழங்குவது மேலும் விவசாயிகளின் செலவினத்தை குறைக்கிறது.

இரகத்தை தேர்வு செய்தல் மற்றும் விதை அளவு:

  • அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு சின்ன வெங்காய இரகங்கள் இருந்தாலும் அதில் கோ-5(On), புல்லட், டெய்லர்...... போன்ற இரகங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் உகந்தது.http://ecoursesonline.iasri.res.in/Courses/Production%20Technology%20of%20Vegetables%20&%20Flowers/HORT281/Data%20Files/lec15.html
  • விதையின் தரம், தேர்வு செய்யப்படும் இரகம், மாற்றங்கள் அமைக்கும் முறை, நிலத்தின் தன்மை மற்றும் பருவம் முதலியவற்றைப் பொறுத்து ஏக்கருக்கு 1-1.50 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure
நாற்றங்கால் அமைக்கும் முறை:

  • ஒரு ஏக்கர் நடவு செய்திட சுமார் 200 முதல் 250 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படுகிறது. இது சற்று நிழல் பாங்கான இடத்தில் இருந்தால் உகந்தது. இல்லையெனில் 50 சதவீதம் நிழல் வலை கூடாரம் அமைத்து அதில் நாற்று விடலாம்.
  • தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்/கம்போஸ்ட் அல்லது மண்புழு உரத்துடன் தலா 100 கிராம் Trichoderma harzianum, Pseudomonas fluorescence, 2 கிலோ DAP மற்றும் இரண்டு கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு நன்கு உழுவு செய்து மண்வெட்டியால் கொத்தி விட வேண்டும்.
  • 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் நில அமைப்பை பொருத்து போதுமான அளவு நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்திட வேண்டும். அப்போது தான் பாத்தியின் ஒரு புறத்திலிருந்து விதைகளை விதைப்பு செய்தல், நீர் பாய்ச்சல், உரமிடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.
  • இவ்வாறாக அமைக்கப்பட்ட மேட்டுப்பத்தியில் ஏழு முதல் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் கையால் 2-3 சென்டிமீட்டர் ஆழமுள்ள கோடுகள் இடவேண்டும். தேர்வு செய்யப்பட்ட விதைகளை இதில் பரவலாக இட வேண்டும். பின்னர் இதில் மக்கிய தொழு உரத்தினை தூவி விடுவதால் விதைகள் மூடிவிடும்.
  • விதைப்பு செய்த மேட்டுப்பாத்தியில் வைக்கோல், காய்ந்த புல், இலை சருகுகள்.. இதர இது போன்று ஏதேனும் ஒரு பொருட்களை மேட்டுப்பத்தியில் பரவலாக இட்டு மூடி விட வேண்டும். இது கதகதப்பு தன்மையை ஏற்படுத்தி விதைகளை எளிதில் முளைக்க செய்கிறது. விதையின் தன்மையை பொறுத்து விதைகள் விதைப்பு செய்த 6 நாட்களில் முளைக்க தொடங்கிவிடும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure

நாற்றுகளை எப்போது பிடுங்கி நட வேண்டும்:

  • ஜூன்- ஜூலை மாதங்களில் விதைப்பு மேற்கொண்ட மேட்டுப்பத்தியில் இருந்து 38-42 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நிலத்தில் நட வேண்டும். பிடுங்கி நடும் போது மிளகு வடிவ சிறு காய்கள்  நாற்றுகளில் இருப்பதை உறுதி செய்திடவும்.

  • செப்டம்பர் முதல் நவம்பர் காலங்களில் விதைப்பு  மேற்கொள்ளும் தருணத்தில் 45 லிருந்து 50 நாட்கள் கழித்து நாற்றுகளை பிடுங்கி நட வேண்டும்.

நாற்றுகளை பராமரிக்கும் முறை:

  • நாற்றுகளில் அழுகல் அல்லது ஏதேனும் நோய்கள் தென்பட்டால் Trichoderma harzianum அல்லது Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10  கிராம் பத்து லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • விதைப்பு மேற்கொண்ட 15 மற்றும் 30ஆம் நாளில் 19:19:19/20:20:20 என்ற நீரில் கரையும் உரத்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் நீரில் கரைத்து மாலை நேரங்களில் ஊற்றி விடவும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts