மக்காச்சோளத்தில் சத்து குறைபாட்டு அறிகுறிகள்...
|மக்காச்சோளத்தில்
ஊட்டச்சத்து குறைபாடுகள்:
தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில்
தற்பொழுது மக்காச்சோளம் சாகுபடி தொடங்கி உள்ளதால் அதில் ஏற்படும்
ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக இந்த தகவல்கள்
பதிவிடப்படுகிறது.
தலைச்சத்து பற்றாக்குறைகள்:
செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள
இலைகளின் நுனியில் இருந்து கீழ்நோக்கி V வடிவில் இலைகள்
பச்சை நிறத்தில் இருந்து
வெளிர் பழுப்பு முதல் மஞ்சள் நிறத்தில் மாற்றம் அடையும். போதுமான தழைச்சத்து இல்லாமை,
அதிகப்படியான வறட்சி அல்லது ஈரப்பதம் காரணமாக மண்ணில் உள்ள
தலைச்சத்துக்கள் செடிகளால் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும்.file:///C:/Users/ddhtv/Downloads/TB12013NutrientDeficiencysymptomsinMaize.pdf
மணிசத்து பற்றாக்குறைகள்:
இது பெரும்பான்மையாக இளம்
செடிகளில் காணப்படுகிறது. செடிகள் அடர்
பச்சை நிறத்தில் இருந்து வெளிர் சிகப்பு அல்லது ஊதா நிறத்தில் மாற்றம் அடையும்.
நாளடைவில் அறிகுறிகள் மறைந்து விடும். போதுமான வேர் வளர்ச்சி இல்லாமை,
அதிகப்படியான உரங்களை வேரில் இடுவது அல்லது
களைகொள்ளிகள் காரணமாக இந்த வகை அறிகுறிகள் காணப்படுகிறது. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8826957/
சாம்பல்சத்து பற்றாக்குறைகள்:
செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள
இலை ஓரங்களில் மஞ்சள் முதல் வெளிர் சிகப்பு நிறத்தில் மாற்றமடையும். தாக்குதல்
தீவிரமடையும் போது செடிகளின் தண்டுகள் பலவீனம் அடைவதால் காற்று அல்லது அதிக
மழையின் போது சாயும் தன்மை கொண்டது. போதுமான வேர் வளர்ச்சியின்மை, இறுக்கமான மண் தன்மை, அதிகப்படியான வறட்சி அல்லது ஈரப்பதம் இதற்கு
காரணமாகிறது. மேலும் முந்தைய பயிர்களின் சாம்பல்சத்து பயன்பாடு அதிகமாகும் போது இவ்வகையான
அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
கால்சியம் சத்து குறைபாடுகள்:
பொதுவாக கால்சியம் சத்து குறைபாடுகள் மக்காச்சோளத்தில் தென்படுவதில்லை. இருப்பினும் சில நேரங்களில் கணு இடைவெளிகள் குறைந்து அடுத்தடுத்து இலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து படிக்கட்டுகள் போன்ற தோற்றத்தில் காணப்படும். மண்ணின் அமிலத்தன்மை, அதிகப்படியான சாம்பல் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் காணப்படுவதாலும் இவ்வகை அறிகுறிகள் தோன்றுகிறது.file:///C:/Users/ddhtv/Downloads/TB12013NutrientDeficiencysymptomsinMaize.pdf
மெக்னீசியம் சத்து குறைபாடுகள்:
அதிகப்படியான மண் அமிலத்தன்மை, மழைப்பொழிவு மற்றும் சாம்பல்சத்து
காரணங்களால் ஏற்படுகிறது. செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளில் வெள்ளை முதல் மஞ்சள்
நிறத்தில் கோடு கோடுகளாக காணப்படும்.
கந்தக சத்து குறைபாடுகள்:
செடிகளின் நுனியில் உள்ள இலைகள்
பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் அடையும். மண்ணின்
அமிலத்தன்மை மற்றும் குறைந்த தொழு உரம் பயன்பாட்டினால் ஏற்படுகிறது.https://www.yara.co.uk/crop-nutrition/forage-maize/nutrient-deficiencies-maize/
மாலிப்டினம் சத்து குறைபாடுகள்:
செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள
இலைகளின் நுனி மற்றும் ஓரங்களில் காணப்படும் பச்சையங்கள் செங்கல் நிறத்தில்
மாற்றம் அடைவதுடன் இலை நரம்புகளுக்கு இடையே வெளிர் மஞ்சள் நிறம் காணப்படும்.
தாமிர சத்து குறைபாடுகள்:
செடிகளின் குருத்துகளில் இருந்து வரக்கூடிய இலைகள் மஞ்சள்
நிற கோடுகளால் காணப்படும். இந்த அறிகுறிகள் இரும்பு சத்து குறைபாடு போன்றே
காணப்படும்.
இரும்பு சத்து குறைபாடுகள்:
செடிகளின் நுனியில் காணப்படும்
இலைகளின் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிற மாற்றம் அடையும். மண்ணில் போதுமான
இரும்புச்சத்து இருந்தாலுமே காரத்தன்மை காரணமாக இது செடிகளுக்கு
கிடைக்கப்பெறுவதில்லை.
துத்தநாகம் குறைபாடுகள்:
இலைகளின் ஓரம் மற்றும் நடுப்பகுதி பச்சையாகவே காணப்படும் இருப்பினும் இலையில் மஞ்சள் நிற பட்டைகள் காணப்படும் இவைகள் ஆரம்பத்தில் வெள்ளை நிற பட்டையாக காணப்படும். https://www.yara.co.uk/crop-nutrition/forage-maize/nutrient-deficiencies-maize/
0 Comments:
கருத்துரையிடுக