google-site-verification: googled5cb964f606e7b2f.html செப்டம்பர் 2026 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

நீரின் உப்பு தன்மையை குறைக்கும் நெல்லி மர கட்டைகள் ( பெருநெல்லி )

  • பாசன நீரில் உள்ள உப்பு தன்மையை ஓரளவிற்கு குறைக்கவும், கடின நீரை மென்னீராக மாற்றுவதற்கும் நெல்லி மர கட்டைகளை ( பெருநெல்லி ) தண்ணீரில் ஊற வைத்து பின்னர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நமது பாரம்பரிய விவசாயத்தில் கடைபிடிக்கப்பட்ட ஒரு மரபுத் தொழில்நுட்பமாகும் .
  • நெல்லி மரக்கட்டைகள் நீரின் உப்புத்தன்மையை எவ்வாறு குறைக்கின்றன என்பதற்கான அறிவியல் பூர்வமான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
  • நெல்லி மரக்கட்டைகளில் உள்ள தனித்துவமான வேதிப்பண்புகள் நீரின் உப்புத்தன்மை மற்றும் கடினத்தன்மையைக் குறைக்கின்றன.
  • நெல்லி மரத்தின் செல்லுலோஸ் மற்றும் லிக்னின் அமைப்புகள் நீரில் கரைந்துள்ள அதிகப்படியான சோடியம் (Na⁺), குளோரைடு (Cl⁻), கால்சியம் (Ca²⁺), மற்றும் மெக்னீசியம் (Mg²⁺) போன்ற உப்புக்களை தன்னுடைய மேற்பரப்பில் ஈர்த்து ஒட்டிக்கொள்ளும் (Adsorb) திறன் கொண்டவை. இந்த நிகழ்வு பயோ-அட்ஸார்ப்ஷன் (Bio-adsorption) என்று அழைக்கப்படுகிறது. 
  • நெல்லி மரத்தின் வைரப்பகுதியில் (Heartwood) இயற்கையாகவே டானின்கள் (Tannins), பாலிபினால்கள் (Polyphenols) மற்றும் கரிம அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நீரில் உள்ள கடினமான உப்புகளுடன் வினைபுரிந்து, அவற்றை நீரில் கரையாத கூட்டுப் பொருட்களாக மாற்றி அடியில் படிய (Precipitate) வைக்கின்றன. இதனால் நீரின் மேல் அடுக்கில் உப்பின் அடர்த்தி குறைகிறது.
  • தண்ணீரில் உள்ள உப்பின் அளவு மற்றும் நெல்லி மர கட்டைகளை ஊற வைக்கும் கால இடைவெளி ஆகிவற்றைப் பொறுத்து சுமார் 50 சதவீதம் வரை கூட உப்பின் தன்மையை குறைக்கும் என ஆய்வு கட்டுரைகள் விவரிக்கின்றன. 
  • இதன் காரணமாக தண்ணீரின் காரத்தன்மை குறைந்து நடுநிலைத் தன்மை பெறுகிறது. 
  • இது மட்டும் இன்றி தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறது. 
  • இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரை மென்மையாக்கி அந்த நீரை நாம் பருகலாம் இதனால் எந்த தீங்கும் ஏற்படாது.
  • பாசனக் கிணறுகள் அல்லது தண்ணீர்த் தொட்டிகளில் நெல்லி மரக் கட்டைகளை  போடுவதன் மூலம், நீரிலுள்ள சோடியம்,  குளோரை, கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் அளவை குறைத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம். 
  • நீரின் உப்பு தன்மை குறைவதால் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பயிர்கள் மிக எளிதாக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக விளைச்சலைத் தரும். 


மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து பயன்பெறலாம்... https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u

பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • தற்போது பூசணி சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. 
  • தற்சமயம் சாகுபடி செய்யப்படும் பூசணிக்காய்கள் பெரும்பான்மையாக திருஷ்டிக்காக பயன்படுத்தப்படுவதால் மிக எளிதாக தூக்கி உடைக்கக்கூடிய எடை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அழகிய வடிவில் இருக்க வேண்டும்.
  • அதற்கு ஏற்றவாறு ஒரு சில தனியார் ரகங்கள் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • உதாரணத்திற்கு Suguna 316 (East West seed), Seema super (Chia Tai seeds), MAHY 1(Mahyco), Sowmya (Kalash seeds), VNR AG(VNR seeds)
  • சாகுபடியில் மண் தன்மையை பொறுத்த வரையில் மிதமான அமில முதல் நடுநிலைத் தன்மையுடன் மிகவும் ஏற்றது. 
  • விதை அளவு ஏக்கருக்கு 5 (50 கிராம்) பாக்கெட்டுகள் போதுமானது. 
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரத்தினை உயிர் உரங்களுடன் ஊட்டமேற்றி இடவேண்டும்.
  • ஒரு ஏக்கர் சாகுபடிக்கு தேவையான 40 கிலோ தழைச்சத்து மற்றும் தலா 20 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை 45 நாட்களுக்கு முன்னதாக முழுமையாக கொடுத்து விட வேண்டும். 
  • பரவலாக பூக்கள் தென்படும் பொழுது காய் பிடிப்பு திறனை மேம்படுத்த Ethrel என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு நான்கு முதல் ஐந்து மில்லி கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் தேமோர் கரைசல்/ கடல்பாசி உரம் அல்லது நன்கு புளித்த மோரை தெளிக்கலாம். 
  • முதல் அறுவடை 60 முதல் 65 நாட்களில் கிடைக்கும்... அதிகபட்சமாக மூன்று முறை அறுவடை செய்யும் போது சுமார் 10 முதல் 12 டன் வரை ஏக்கருக்கு கிடைக்கும். 
  • தற்சமயம் சராசரியாக ஒரு கிலோ ரூபாய் 10 முதல் 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
  • அறுவடை காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்ட இன்னும் சற்று விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • அதிக வெப்பநிலை இருப்பதால் இலை சுரங்க ஈக்கள், வைரஸ் தொற்று, பழ ஈ மற்றும் இலை உண்ணும் புழுக்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u

சூரியகாந்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான சூரியகாந்தி விதைகளில் இருந்து  கிடைக்கக்கூடிய எண்ணெய் குறைந்த கொழுப்புத் தன்மை உடையதால் இருதய நோயாளிக்கு உகந்ததாக திகழ்கிறது. 
  • சமீப காலங்களாக எண்ணெய் வித்து பயிர்களுக்கு *நல்ல விலை* கிடைப்பதால் விவசாயிகள் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றி அதிக மகசூல் பெற முடியும். 
  • சூரியகாந்தி மானாவரி பயிராக *கார்த்திகை* மற்றும் *ஆடிப்பட்டத்தில்* சாகுபடி செய்யப்படுகிறது. போதுமான தண்ணீர் வசதி இருந்தால் இதர பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.
  • *ரகம் தேர்வு செய்தல்* : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, 100 நாட்களில் அறுவடைக்கு தயாராக கூடிய *COH 3* அல்லது *COH 4* தேர்வு செய்து விதைக்கலாம் அல்லது வணிக ரீதியாக விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் *Veda*, *Vanitha* (Kurnool seeds) , *Rising Sun* போன்ற தனியார் ரகங்களையும் தேர்வு செய்து விதைக்கலாம். 

  • *விதை அளவு* - ஏக்கருக்கு *இரண்டு* கிலோ
  • ஓரளவிற்கு அனைத்து வகையான மண்ணிலும் நன்கு வளரக்கூடியது. பொதுவான வடிகால் வசதி இருக்க வேண்டியது இன்றியமையாது. 

  • அதிக அளவிலான *தொழு உரம் உரத்தை அடி* *உரமாக* இடுவது அவசியம். இதனுடன் தேவையான அளவு ரசாயன உரங்களையும் கலந்து அடிஉரமாக இடவேண்டும். 
  • *பயிர் இடைவெளி* - வரிசைக்கும் வரிசைக்கும் 2 அடி செடிக்கும் செடிக்கும் ஒரு அடி பயிர் இடைவெளி அவசியம்.
  • மிதமான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது விதைகளை சுமார் ஒரு inch ஆழத்தில், குழிக்கு இரண்டு விதை என்ற முறையில் விதைக்க வேண்டும். 
  • சராசரியாக *பத்து* நாட்களில் முளைப்புத்திறன் தெரியும் அப்போது விடுபட்ட இடங்கள் அல்லது விதைகள் முளைக்காத இடத்தில் *தப்பு* *விதைகளை* விதைக்க வேண்டும்.

  • முளைத்து வரும் இரண்டு செடிகளில் ஆரோக்கியமான செடியை விட்டு விட்டு மற்ற செடியை நீக்கி விடவும். 
  • வளர்ச்சி பருவம் அல்லது பூக்கும் தருணத்தில் அதிக மழை பெய்தால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். 
  • அதேபோன்று இரசாயன முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்துக்களை பிரித்து சிறிது சிறிதாக அளிக்க வேண்டும் சற்று கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும் நேரத்தில் வேர்கள் பாதித்து வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கும்.

  • சுமார் 25 நாட்கள் கழித்து களைகளை அகற்றிவிட்டு, தேவையான மேல் உரங்களை இட்டு நீர் பாய்ச்சவும். மானவரிமுறையில் சாகுபடி செய்யும் பொழுது ஈரப்பதம் இருக்கும் பொழுது உரம் இடவேண்டும். 
  • பூக்கள் வெளிவரும் தருணத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பஞ்சகாவியா / தேமோர் கரைசல் அல்லது போரான் தெளிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெற இயலும்.
  • ரகங்களைப் பொறுத்து அறுவடை சுமார் 95 நாள் முதல் சுமார் 140 நாட்கள் வரை தேவைப்படும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...

https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u?s=cl&p=a&mlu=4&ilr=4

Recent Posts

Popular Posts