google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 28 நவம்பர், 2023

எலுமிச்சையில் மரப்பட்டை உதிர்ந்து செடிகள் இறக்க காரணம்...



எலுமிச்சையில் கால் அழுகல் / கம்மோசிஸ் :

  • Phytopthora என்றழைக்கப்படும் பூஞ்சாணத்தால் இந்த நோய் தோற்றுவிக்கப்படுகிறது.

  • இந்த நோய் பொதுவாக சற்று வயதான மரங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.

  • பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டு, இலை மற்றும் வேரில் நீர்த்த வெளிர் பழுப்பு நிற புண்கள் தோன்றும்.

  • நாளடைவில் தண்டு, வேர் மற்றும் கிளையில் காணப்படும் புண்களில் வெடிப்புகள் (நீள்வாக்கில்) தோன்றும். 

  • இவ்வெடிப்புகளிலிருந்து பழுப்பு நிற கோந்து வெளிவரும்.

  • கிளைகளில் வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிற தடித்த கோடுகள் காணப்படும்.

  • வெடித்த இடங்களில் பட்டைகள் உதிர்ந்து பிற பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்துவதால் மரங்கள் ஒடிந்தோ அல்லது அழுகியோ இறக்க நேரிடும்.

  • பூஞ்சாணம் வேர் பகுதியை தாக்கி வேர் பட்டைகளை உதிர செய்தால் இலைகள் மஞ்சளாகி அதிகமாக உதிரும்.


ஏன் ஏற்படுகிறது :

  • எளிதில் தாக்கக்கூடிய இரகங்கள் வேர் செடிகளை பயன்படுத்துதல்.

  • அதிகமாக நீர்பாய்ச்சுதல் (அல்லது) தண்டுகளில் தொடர்ந்து நீர் தேங்குதல்.

  • அதிக காற்று ஈரப்பதம்/ மழை / மண்கடினத்தன்மை

  • வேர் பகுதியில் உப்பு தோன்றுதல் / உப்பு நீரை பயன்படுத்துதல்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • அதிக நீர்பாய்ச்சுதலை தவிர்க்கவும்.

  • உப்பு நீர்/ மண் இருக்கும் இடத்தில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துதல் உகந்தது.

  • ஒட்டு இரகங்களை தவிர்த்து நாட்டு இரகத்தை பயிரிடலாம்.

  • ஒட்டு இரகத்தை பயன்படுத்த விரும்பினால் வேர் செடிகளை தேர்வில் கவனம் தேவை.

  • கவாத்து செய்வதை தவிர்க்கவும்.

  • அmதிக வெப்பம் தண்டுகளில் படும்போதும் வெடிப்புகள் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் தரையிலிருந்து 1-2 அடி உயரத்திற்கு பெயிண்ட் அடிக்கவும்.

  • அதிக மழை பொழிவு / நீர் தேக்கம் இருக்ககூடிய இடங்களில் வட்ட பாத்தி அமைக்க வேண்டும்.

  • இப்பூஞ்சாணம் மண்ணில் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனம் உபயோகிக்கலாம்.

  • பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பட்டைகளை நன்றாக சுத்தம் செய்து 1% பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்து COC/ Bordeaes  கலவையை பூசி விட வேண்டும்.

  • டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் தலா 50 கிராம் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தொடர்ச்சியாக வேரில் ஊற்றுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.

  • கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றின் கலவையை தண்டு / கிளையில் பூசி விடுதல் மற்றும் வேரில் ஊற்ற வேண்டும். (வெயில் மாதங்களில்)

  • Fosetyl Aluminium 25 g + Chlorpyiphos – 25 g / 10 Lit water

  • COC-30 g + Chlorpyriphos – 25 ml -/10 lit water

  • Copper Hydroxite 10g + Chlorpyriphos -25 ml/ 10 Lit water

  • Thiophenate Methyl 25g + Chlorpyriphos – 25 ml/ 10 Lit water

திங்கள், 27 நவம்பர், 2023

நெற்பயிரில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...

எதனால் ஏற்படுகிறது:

   இது ஒரு பூஞ்சான நோய். பருவத்திற்கு பின் நடவு செய்யப்பட்ட பயிர்கள், அதிக தழைச்சத்து கொண்ட மண்,அதிக காற்றின் ஈரப்பதம், அடிக்கடி மழைப்பொழிவு மற்றும் சராசரி வெப்பநிலை இந்நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலைகள் ஆகும்.  நெற் பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்பட்டாலும்.

அறிகுறிகள் நெல் மணிகளில் பால் பிடிக்கும் தருணத்தில் மட்டும் தென்படுகிறது. இந்நோயின் மூலம் 25-75% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.


அறிகுறிகள்:

  1. நெல் மணிகளில்  1cm அகலத்தில் மென்மையான மஞ்சள் நிற பந்து போன்ற அமைப்பு காணப்படும்.

  2. இந்த வெல்வெட் போன்ற பந்துகள் நாளடைவில் மஞ்சள் கலந்த பச்சை அல்லது பச்சை கலந்த கருப்பு நிறத்தில் மாறுகிறது.

  3. நெற் கதிர்களின் ஒரு சில மணிகளில் மட்டும் இவ்வகை பூஞ்சானத்தின் அறிகுறிகள் தென்படும்.

  4. நெல் மணிகளில் நிறமாற்றம், எடை குறைவு மற்றும் முளைப்பு திறன் பாதிப்படைதல்.


கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  1. தரமான மற்றும் சான்றிதழ் பெற்ற விதைகளை தேர்வு செய்து பயிரிடலாம்.

  2. நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யவும். (improved samba, swarna samba மற்றும் BPT 5204)

  3. சரியான பருவத்தில் அல்லது பருவத்திற்கு முன் நடவு மேற்கொள்ளுதல்.

  4. Trichoderma viridae + Pseudomonas fluorescene கொண்டு விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நட வேண்டும்.

  5. பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து உரத்தினை மட்டும் இரண்டு அல்லது மூன்று முறையாக பிரித்து இட வேண்டும்.

  6. காய்ச்சலும் பாய்ச்சலுமாக  நீர் பாய்ச்ச வேண்டும்.

  7. களைகள் மற்றும் இதர குப்பைகள் இன்றி நிலத்தை பராமரிக்கவும்.

  8. அறுவடைக்குப் பின் வயலை ஆழமாக உழுது சூரிய ஒளியில் உலர வைப்பதால் மண்ணில் உள்ள பூஞ்சனங்களை அழிக்கலாம்.

  9. விதைகளை 52 டிகிரி வெப்ப நிலையில் 10 நிமிடங்கள் உலர வைத்து  பின்பு நாற்று விடவும்.

  10. CO 43, ADT 38, ADT 39 போன்ற ரகங்கள் இந்நோய் தாக்குதலுக்கு உகந்தது

  11. கீழ்க்கண்ட பூஞ்சாணக் கொல்லிகளில்  ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.

1. Copper hydroxide -1 g per litre

2. Tebuconazole + Trifloxystrobin - 1 g per litre water 

3. Fluopyram+Tebuconazole -1ml lit water

4 Hexaconazole - 1 ml per lit

5. Chlorothalonil- 2.5 g per lit water

6. Metiram+ Pyroclostrobin - 2 g per litre 

7. Azoxystrobin+ Diffenacozole - 1 ml per lit water

சனி, 25 நவம்பர், 2023

காய்கறி பயிர்களில் உப்பு தன்மையினால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

   உலக அளவில் 20% சாகுபடிக்கு உகந்த நிலங்கள் உப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் நிலப்பரப்பில் 33% உப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு தன்மையினால் மொத்த நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை 2050 ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. 

   உப்பு தன்மை அதிகமாகும் போது சோடியம் மற்றும் குளோரைடு ஊட்டச்சத்துக்களை செடிகள் அதிகமாக மண் மற்றும் நீரில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இதனால் மற்ற ஊட்டச் சத்துக்களை உட் கொள்வதில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

எவ்வாறு உப்பு தன்மை ஏற்படுகிறது:

  • இயற்கையாகவே மண்ணில் உப்புத்தன்மை உருவாகும். இதற்கு நீண்டகால வருடங்கள் தேவைப்படும்.
  • தொடர்ச்சியாக உப்புத்தன்மை நிறைந்த நீரை பயன்படுத்துதல். உதாரணம் கடல் நீர்
  • காற்று மற்றும் நீரினால் கடலோரங்களில் உள்ள மண் மற்றும் செடிகளில் உப்பு படிதல்.
  • அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுவதால்.
  • கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதால்.
  • மிகவும் குறைந்த மழைப்பொழிவு
  • கடல் மற்றும் நிலத்தடி நீர் மனிதர்களின் வாழ்க்கை முறையினால் மாசு அடைவதாலும் பாதிக்கப்படுகிறது.
  • முறையற்ற நீர்ப்பாசனம் மற்றும் யுக்திகள்.
  • தொழில் துறையில் இருந்து வெளியிடப்படும் கழிவுகளும் நிலத்தடி நீரை மாசு படுத்துகிறது.

எப்போது மண் உப்புத்தன்மை நிறைந்ததாக கருதப்படுகிறது:

  • Ec- below 0.6 நன்னீர்
  • Ec- 0.6-1.5 சற்று உப்பான நீர்
  • Ec- 1.5- 3 சிறிது உப்பான நீர்
  • Ec- 3-8 மிதமான உப்பு நீர்
  • Ec- 8-15 உப்பு நீர்
  • Ec- 15- 45 அதிகமான உப்பு நீர் 

எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது:

  • சவ்வுடுபரவல்- இதனால் பயிர்கள் சுவாசிக்க முடியாமல் குன்றிய வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.
  • Ion toxicity (சோடியம் மற்றும் குளோரைடு) - ஆக்சிஜனேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுவதால் செடிகள் பாதிப்படைகிறது.

அறிகுறிகள்:

  • உப்பு தன்மை காரணமாக பல ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை அதில் முக்கியமான ஒன்று கால்சியம்.
  • குன்றிய வளர்ச்சி மற்றும் பயிர்களின் இலை பரப்பளவு குறைந்து காணப்படும்.
  • செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள முதிர்ந்த இலைகளில் நுனி கருகள் ஏற்படும்.
  • இலையின் விளிம்புகள் மஞ்சள் நிறத்தில் மாறும் பின்னர் கருகி காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் முற்றிலும் மஞ்சளாக மாறி பின்னர் கருகி விடும்.
  • செடிகளின் கிளைகள் கருகி பின்னர் நிலத்தில் அங்கங்கே செடிகள் இறந்து காணப்படும்.
  • செடிகளின் கிளைகள் கீழிருந்து மேலாக கருதுவதால் பார்ப்பதற்கு தொடப்ப குச்சி போன்று காட்சி அளிக்கும்.



கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மண்ணை தேவையான அளவிற்கு மாற்றலாம்.
  • போதுமான மணல் மற்றும் மரத் தூள்களை அவ்வப்போது மண்ணில் இடுவதால் உப்பின் தன்மை குறையும்.
  • நண்ணீரை வயலில் பாய்ச்சி உப்பு தன்மையை வெளியேற்றலாம்.
  • நிலத்தில் வடிகால் வசதியை சீரமைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது இயற்கை உரங்களை அதிகமாக இட்டு பயிரிடவும்.
  • பயிரிடும் போது மேட்டு பாத்திகள் அமைத்து சாகுபடி செய்தால் ஓரளவு உப்புத் தன்மையை தவிர்க்கலாம்.
  • கடலோரமாக சாகுபடி செய்யப்படும் இடத்தில் காற்று வீசும் எதிர் திசைக்கு செடிகளை நடவு நடவு செய்வதால் இலைகளில் உப்பு படிவத்தை தவிர்க்கலாம்.
  • உப்பு தன்மையை தவிர்த்து/உட்கொள்ளாமை /வெளியேற்றும் தன்மை கொண்ட/தாங்கி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து பெயரிடலாம்.
  • உதாரணத்திற்கு பல்வேறு மரப்பயிர்கள், சோளம், கோதுமை, ஓட்ஸ், கொய்யா, சப்போட்டா, நெல்லி, கொடுக்காப்புளி பார்லி, அஸ்பராகஸ் பீட்ரூட், கேரட் மற்றும் இதர பயிர்கள்.
  • மேம்படுத்தப்பட்ட நீர் பாசன முறையை பின்பற்றலாம். நீர் பயன்பாட்டை குறைக்கவும் மண்ணில் உப்பு படிவதை தவிர்த்திடவும் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடலாம்.
  • மண்ணின் கட்டமைப்பை மாற்றிடவும் கால்சியம் சத்து அளவை அதிகப் படுத்திடவும் ஜிப்சம் இடலாம்.
  • சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துதல் நல்லது மழை நீரை சேகரித்து திறன் பட பயன்படுத்துவதால் தன்மையை தவிர்க்கலாம்.
  • பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை நீரில் கரையும் உரங்களைக் கொண்டு தெளிப்பதால் உப்பு தன்மையினால் ஏற்படும் அறிகுறிகளை தவிர்க்கலாம்

முந்திரியில் காணப்படும் தேயிலை கொசுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...


முந்திரியில் தேயிலை கொசு:

  முந்திரியை தாக்கக்கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளில் மிக முக்கியமானதாக தேயிலை கொசு கருதப்படுகிறது. இதனால் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. 

  இந்தியாவில் மூன்று வகையான கொசுக்கள் தேயிலையே தாக்கினாலும் தென்னிந்தியாவில் ஹீலோவெல்டிஸ் ஏன்டோனி என்ற கொசுவே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பூச்சியின் விவரம்:

முட்டை:

  சிறிய முட்டைகள் தளிர்கள், இலைகள், பூ கொத்துகளின் தண்டுகள் மற்றும் இலைக் காம்புகளில் தனித் தனியாக அல்லது இரண்டு முதல் ஐந்து குழுக்களாக காணப்படும்.

இளம் புழுக்கள்:

  8-10 நாட்களுக்கு பிறகு வெளிவரும் இவை தளிர்கள் மற்றும் இளம் பழங்களை உண்டு செழிப்பாக வளர்கிறது.

வளர்ந்த பூச்சிகள்:

  வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் கருப்பு தலையுடனும், முதுகுப் பகுதியில் குமில் போன்ற அமைப்பு காணப்படும். இதன் மொத்த வாழ்நாள் 24- 30 நாட்களாகும்.

அறிகுறிகள்:

  • இது சாற்றை உறிஞ்சும் பகுதியில் வெளிர் நிற புண்கள் காணப்படும். நாளடைவில் இது வெளிர் கருப்பு நிறத்தில் மாறும்.
  • இலைக்காம்பு மற்றும் இளம் பழங்களிலிருந்து காவி நிற திரவம் வெளிவரும்.
  • தயிர் மற்றும் இலைகளில் உள்ள புண்கள் பெரிதாகி, ஒன்றிணைந்து கருகி காணப்படும்.
  • பூ மற்றும் பூ கொத்துகளில் ஏற்படும் தாக்குதலால் கருகி பின் கறுகல் நோய் போன்று காணப்படும்.
  • பழம் மற்றும் கொட்டைகளில் ஏற்படும் தாக்குதலால் முதிர்ச்சி அடையும் முன்பே உதிரும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தீவிரமாக தாக்கப்பட்ட பகுதியில் சேகரித்து அழிக்கவும்.
  • எதிர்ப்பு திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • இவ்வகை கொசுக்களுக்கு எதிராக தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட beauveria bassiana ஐ அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் தெளிக்கலாம்.
  • சிலந்தி, எறும்பு மற்றும் பருத்தி கறை பூச்சிகளின் நடமாட்டத்தை அதிகரிப்பதால் இவ்வகை கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.
  • புங்கம் விதை சாறு அல்லது இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தெளிப்பதால் கொசுக்களை அழிக்கலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.


1. Lambda cyhalothrin- 1.2 ml per lit water

2. Beta cyfluthrin+ Imidacloprid - 1 ml per litre water

3. Buprofezin - 3 ml per lit water 

4. Thiamethoxam - 1 g per litre water

5. Triazophose - 1 ml per lit water

6. Deltamethrin -1.5 ml per lit water 




புதன், 22 நவம்பர், 2023

வேப்பங்கொட்டை விதைச்சாறு 5 சதவீதம் தயார் செய்யும் முறை:

 

வேப்பங்கொட்டை விதைச்சாறு 5 சதவீதம் கரைசல்:

 

       செயற்கை பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதால் பரவலாக இது விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேப்பங்கொட்டை விதையில் காணப்படும் பல்வேறு உயிரியல் கலவைகள் பூச்சி விரட்டியாக பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

வேப்பங்கொட்டை விதையில் காணப்படும் சில முக்கிய உயிரியல் கலவைகள்:

1.    அஜடிரக்டின் (Azadiractin):  நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட உயிரிப்பொருள் இது. இது சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2. நிம்பின் (Nimbin): இது பாக்டீரியா மற்றும் பூஞ்சான் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவதுடன் அலர்ஜக்கு எதிராக செயல்படுகிறது.

3.   சலன்னின் (Salannin) மற்றும் மெளியான்றில் (Meliantriol) போன்ற வகையிலும் பூச்சிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

 

செயல்படும் விதம்:

1.  முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.

2. லார்வாக்கள் மற்றும் களின் தோலுரித்தல் கிழ்வை தடை செய்வதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

3.       பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.

4.       இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.

5.       பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

 

தேவையான பொருட்கள்:

1.       வேப்பங்கொட்டை விதை கர்னல் – 5 கிலோ

2.       துணி சலவை பவுடர் -100 கிராம்

3.       சாக்கு துணி

4.       தண்ணீர் -200 லிட்டர்

 

தயார் செய்யும் முறை:

நன்கு காய்ந்த வேப்பங்கொட்டை விதைகளை 5 கிலோ எடுத்துக் கொள்ளவும். இது நன்றாக தூள் செய்து ஒரு சாக்குத் துணியில் கட்டி 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மூட்டையை எடுத்துவிட்டு கரைசலை நன்றாக கலக்கி மெல்லிய துணி மூலம் வடிகட்டவும். இவற்றுடன் 190 லிட்டர்  தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கலவையாக மாற்றவும். இதனுடன் போதுமான அளவு ஒட்டும் திரவத்தை பயன்படுத்தி ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.

 பயன்பாடுகள்:

  • பூச்சிகளை கட்டுப்படுத்தி நிர்வகிக்க உதவுகிறது. உதாரணமாக, அசுவினி, கம்பளி பூச்சிகள், வண்டுகள், வெள்ளை ஈக்கள் மற்றும் பேன்களுக்கு எதிராக செயல்படுகிறது.
  • வேப்பங்கொட்டை விதைச்சாறு பூச்சிக்கொல்லி பண்புகளைத் தவிர சில பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, பல்வேறு இலைப்புள்ளி நோய்கள், இலை துரு மற்றும் சாம்பல் நோயை தடுத்தும், கட்டுப்படுத்தியாகவும்  செயல்படுகிறது.
  • பல்வேறு ஆய்வுகளில் வேப்பங்கொட்டை விதைச்சாறு நூற்புழுக்களை குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • பூச்சிகளுக்கான விரட்டியாக செயல்படுகிறது.
  • அங்கக வேளாண்மையில் வேப்பங்கொட்டை விதைச்சாறு ஒரு மதிப்புமிக்க கருவியாக கருதப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைப்பதுடன் நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
  • விதைகளை நடுவதற்கு முன் வேப்ப விதை சாற்றுடன் விதை நேர்த்தி செய்யும் போது மண்ணில் பரவும் நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. 

மக்காச்சோளத்தில் சத்து குறைபாட்டு அறிகுறிகள்...

மக்காச்சோளத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள்:

மிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தற்பொழுது மக்காச்சோளம் சாகுபடி தொடங்கி உள்ளதால் அதில் ஏற்படும் ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக இந்த தகவல்கள் பதிவிடப்படுகிறது.

 

தலைச்சத்து பற்றாக்குறைகள்:  

 

செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளின் நுனியில் இருந்து கீழ்நோக்கி V வடிவில் இலைகள்  பச்சை நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு முதல் மஞ்சள் நிறத்தில் மாற்றம் அடையும். போதுமான தழைச்சத்து இல்லாமை, அதிகப்படியான வறட்சி அல்லது ஈரப்பதம் காரணமாக மண்ணில் உள்ள தலைச்சத்துக்கள் செடிகளால் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும்.file:///C:/Users/ddhtv/Downloads/TB12013NutrientDeficiencysymptomsinMaize.pdf

 

மணிசத்து பற்றாக்குறைகள்:

 

இது பெரும்பான்மையாக இளம் செடிகளில் காணப்படுகிறது. செடிகள்  அடர் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் சிகப்பு அல்லது ஊதா நிறத்தில் மாற்றம் அடையும். நாளடைவில் அறிகுறிகள் மறைந்து விடும்.  போதுமான வேர் வளர்ச்சி இல்லாமை, அதிகப்படியான உரங்களை வேரில் இடுவது அல்லது களைகொள்ளிகள் காரணமாக இந்த வகை அறிகுறிகள் காணப்படுகிறதுhttps://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8826957/

 

சாம்பல்சத்து பற்றாக்குறைகள்:

 

செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலை ஓரங்களில் மஞ்சள் முதல் வெளிர் சிகப்பு நிறத்தில் மாற்றமடையும். தாக்குதல் தீவிரமடையும் போது செடிகளின் தண்டுகள் பலவீனம் அடைவதால் காற்று அல்லது அதிக மழையின் போது சாயும் தன்மை கொண்டது. போதுமான வேர் வளர்ச்சியின்மை, இறுக்கமான மண் தன்மை, அதிகப்படியான வறட்சி அல்லது ஈரப்பதம் இதற்கு காரணமாகிறது. மேலும் முந்தைய பயிர்களின் சாம்பல்சத்து பயன்பாடு அதிகமாகும் போது இவ்வகையான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

 

கால்சியம் சத்து குறைபாடுகள்:

 

பொதுவாக கால்சியம் சத்து குறைபாடுகள் மக்காச்சோளத்தில் தென்படுவதில்லை. இருப்பினும் சில நேரங்களில் கணு இடைவெளிகள் குறைந்து அடுத்தடுத்து இலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து படிக்கட்டுகள் போன்ற தோற்றத்தில் காணப்படும். மண்ணின் அமிலத்தன்மை, அதிகப்படியான சாம்பல் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் காணப்படுவதாலும் இவ்வகை அறிகுறிகள் தோன்றுகிறது.file:///C:/Users/ddhtv/Downloads/TB12013NutrientDeficiencysymptomsinMaize.pdf 


மெக்னீசியம் சத்து குறைபாடுகள்:

 

அதிகப்படியான மண் அமிலத்தன்மை, மழைப்பொழிவு மற்றும் சாம்பல்சத்து காரணங்களால் ஏற்படுகிறது. செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளில் வெள்ளை முதல் மஞ்சள் நிறத்தில் கோடு கோடுகளாக  காணப்படும்.

 

கந்தக சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் நுனியில் உள்ள இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் அடையும். மண்ணின் அமிலத்தன்மை மற்றும் குறைந்த தொழு உரம் பயன்பாட்டினால் ஏற்படுகிறது.https://www.yara.co.uk/crop-nutrition/forage-maize/nutrient-deficiencies-maize/

 

மாலிப்டினம் சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள இலைகளின் நுனி மற்றும் ஓரங்களில் காணப்படும் பச்சையங்கள் செங்கல் நிறத்தில் மாற்றம் அடைவதுடன் இலை நரம்புகளுக்கு இடையே வெளிர் மஞ்சள் நிறம் காணப்படும்.

 

தாமிர சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் குருத்துகளில் இருந்து வரக்கூடிய இலைகள் மஞ்சள் நிற கோடுகளால் காணப்படும். இந்த அறிகுறிகள் இரும்பு சத்து குறைபாடு போன்றே காணப்படும்.

 

இரும்பு சத்து குறைபாடுகள்:

 

செடிகளின் நுனியில் காணப்படும் இலைகளின் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிற மாற்றம் அடையும். மண்ணில் போதுமான இரும்புச்சத்து இருந்தாலுமே காரத்தன்மை காரணமாக இது செடிகளுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.

 

துத்தநாகம் குறைபாடுகள்: 

 

இலைகளின் ஓரம் மற்றும் நடுப்பகுதி பச்சையாகவே காணப்படும் இருப்பினும் இலையில் மஞ்சள் நிற பட்டைகள் காணப்படும் இவைகள் ஆரம்பத்தில் வெள்ளை நிற பட்டையாக காணப்படும். https://www.yara.co.uk/crop-nutrition/forage-maize/nutrient-deficiencies-maize/



செவ்வாய், 21 நவம்பர், 2023

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை...

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாக கொண்ட எண்ணெய் பனை சிவப்பு எண்ணெய் பனை எனவும் அழைக்கப்படுகிறது. தற்பொழுது இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்தல் விவசாயிகளுக்கு எவ்வாறு லாபகரமான பயிராக திகழ்கிறது:

  • எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் தற்சமயம் குறைந்த செலவில் தோட்டம் அமைக்க சரியான தருணம் இது.
  • ஊடு பயிர் செய்தல் மற்றும் பராமரிப்பிற்கும் அரசிடமிருந்து போதுமான சலுகைகள் தற்பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
  • விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் இதன் இடுபொருள்களை சார்ந்து இயங்கக்கூடிய தொழில்  நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
  • எண்ணெய் பனை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை நோக்கி பயணிப்பதால் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சமையல் எண்ணெய் கிடைக்கப்பெறும்.
  • விவசாயிகள் இதனை முதன்மை பயிராகவும் மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஊடுபயிர்  செய்வதால் வருமானம் இரட்டிப்பாகும்.
  • பெரிய விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் செய்திட ஏதுவானதாக எண்ணெய் பனை திகழ்கிறது.
  • குறைந்தபட்ச ஆதார விலை போன்று இந்தப் பயிருக்கு VGF-Viability Gap Funding என்ற முறையில் ஆதார விலை கிடைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே இப்பயிரினல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • 30 வருடங்கள் வரை குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.


இவற்றையெல்லாம் எவ்வாறு நேரடியாக உறுதி செய்வது:

  • சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தில் மட்டும் கீழ்க்கண்ட இனங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் தரமான எண்ணெய் பனை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
  • ஊடு பயிர் செய்வதற்கும் பராமரிப்பு மேற்கொள்வதற்கும் மானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விதைத்தோட்டம் மற்றும் நாற்றங்கால்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய்  செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைத்திடவும், மழை நீர் சேகரிப்பு குளங்கள் வெட்டிடவும் மானியம் தரப்படுகிறது.
  • மண்புழு உர கூடாரங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் உதவுகிறது.
  • இதைத் தவிர பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல இனங்களில் அரசு உதவி புரிகிறது.


அரசின் உதவிக்கரம் நீட்டப்படுமா? எண்ணெய் பனை லாபகரமான பயிர் தான் என்பதை உறுதி செய்திட சில மறைமுக அதிகாரப்பூர்வ தகவல்கள்:

  • சமையல் பயன்பாட்டிற்கு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனவே இதன் தேவை எப்பொழுதும் குறைய போவதில்லை.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் எண்ணெய் பனைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய்யின் பயன்பாடு சுமார் 55 லிருந்து 60% ஆகும். பயன்பாட்டின் சதவீதம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
  • பல்லாண்டு எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் அதிகமாக மகசூல் தரக்கூடியது இப்பயிராகும்.
  • இந்தியாவின் ஆண்டு பாமாயில் எண்ணெய் தேவை சுமார் 250 லட்சம் டன் உள்ளது.
  • தற்பொழுது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 125 முதல் 130 லட்ச டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள தேவைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது இதன் சராசரி மதிப்பு சுமார் 80000 கோடியாகும். எனவே இதன் தேவை குறைந்தாலும் மதிப்பு குறைய போவதில்லை.
  • மேலும் மறைமுகமாக பாமாயில் பல்வேறு எண்ணெய்களில் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
  • 2015- 16 ஆண்டுகளில் இந்தியாவில் வசிக்கும் தனி நபருக்கு ஆண்டுக்கு 19.10 கிலோ வரை பாமாயில் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது இது 18 புள்ளி 20 கிலோவாக குறைந்துள்ளது. எனவே சாகுபடி செய்வது லாபகரமானது.
  • பாமாயிலில் உள்ள Vit-A, Oleic acid, Linoleic acid  மற்றும் Beta carotene சரியான அளவில் பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு உகந்ததே ஆகும்.
  • இது மட்டும் அல்லாமல் எண்ணெய் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது சோப்பு, சலவை பவுடர், தலைக்கழுவு உதவும் நீர்மம், அழகு சாதன பொருட்கள் மற்றும் சில நாடுகளில் பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது.
  • இவைகளின் தேவையை உணரும் போது குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதால் இப்பயிரை சாகுபடி செய்தல் முக்கியமானதாகும். சுமார் 4-5 டன் பாமாயில் மற்றும் 0.4-0.5 டன் எண்ணெய் பனை கர்னல் எண்ணெய் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறலாம்.
  • மற்ற எண்ணெய் வித்து பயிர்களை விட இதில் சுமார் ஐந்து மடங்கு அதிகமான விளைச்சல் பெறப்படுகிறது. எனவே அரசு இப்பயிரை ஊக்குவிப்பதில் தவறில்லை.

கவனிக்கப்பட வேண்டியவை:

  •  தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • இப்பயிரின் நீர் தேவை சற்று அதிகம் அதாவது 200 - 300 லிட்டர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
  • நடவு செய்த 3-4  வருடங்களுக்கு மகசூல் பெற இயலாது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் காய்ப்பு திறன் மிகவும் முக்கியமானதாகும்.
  • வளமான செடிகளை உருவாக்கிட முதல் மூன்று வருடங்களுக்கு பயிரில் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும்.
  • சந்தைப்படுத்துதல்.

மேற்கொள்ளப்பட வேண்டியவை:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக கன்றுகளை பெறும் போது அவற்றின் தரம் உறுதியானதாக இருக்கும்.
  • பயிரின் நீர் தேவையை சரியாக பூர்த்தி செய்திட சொட்டுநீர் பாசனத்தை அமைத்து சரியாக பராமரித்தால் மட்டுமே போதுமானதாகும்.
  • இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு ஊடு பயிர் செய்திட உதவுகிறது.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு பண்ணையில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் வண்டுகளை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதை சரியான முறையில் மேற்கொள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம்.
  • அரசு, விவசாயி மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை:

    இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இதன் பயன்பாட்டினை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கும் போதும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போதும் மேலும் கிடைக்கப்பெறும் கிடைக்கபெறும் தகவல்களை கூர்ந்தாய்வு செய்யும்போதும் எண்ணெய் பனை சாகுபடி செய்தல் ஒரு லாபகரமான பயிராகவே கருதப்படுகிறது.

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.   https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

x

Recent Posts

Popular Posts