முந்திரியில் காணப்படும் தேயிலை கொசுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...
|முந்திரியில் தேயிலை கொசு:
முந்திரியை தாக்கக்கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளில் மிக முக்கியமானதாக தேயிலை கொசு கருதப்படுகிறது. இதனால் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் மூன்று வகையான கொசுக்கள் தேயிலையே தாக்கினாலும் தென்னிந்தியாவில் ஹீலோவெல்டிஸ் ஏன்டோனி என்ற கொசுவே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பூச்சியின் விவரம்:
முட்டை:
சிறிய முட்டைகள் தளிர்கள், இலைகள், பூ கொத்துகளின் தண்டுகள் மற்றும் இலைக் காம்புகளில் தனித் தனியாக அல்லது இரண்டு முதல் ஐந்து குழுக்களாக காணப்படும்.
இளம் புழுக்கள்:
8-10 நாட்களுக்கு பிறகு வெளிவரும் இவை தளிர்கள் மற்றும் இளம் பழங்களை உண்டு செழிப்பாக வளர்கிறது.
வளர்ந்த பூச்சிகள்:
வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் கருப்பு தலையுடனும், முதுகுப் பகுதியில் குமில் போன்ற அமைப்பு காணப்படும். இதன் மொத்த வாழ்நாள் 24- 30 நாட்களாகும்.
அறிகுறிகள்:
- இது சாற்றை உறிஞ்சும் பகுதியில் வெளிர் நிற புண்கள் காணப்படும். நாளடைவில் இது வெளிர் கருப்பு நிறத்தில் மாறும்.
- இலைக்காம்பு மற்றும் இளம் பழங்களிலிருந்து காவி நிற திரவம் வெளிவரும்.
- தயிர் மற்றும் இலைகளில் உள்ள புண்கள் பெரிதாகி, ஒன்றிணைந்து கருகி காணப்படும்.
- பூ மற்றும் பூ கொத்துகளில் ஏற்படும் தாக்குதலால் கருகி பின் கறுகல் நோய் போன்று காணப்படும்.
- பழம் மற்றும் கொட்டைகளில் ஏற்படும் தாக்குதலால் முதிர்ச்சி அடையும் முன்பே உதிரும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தீவிரமாக தாக்கப்பட்ட பகுதியில் சேகரித்து அழிக்கவும்.
- எதிர்ப்பு திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம்.
- இவ்வகை கொசுக்களுக்கு எதிராக தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட beauveria bassiana ஐ அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் தெளிக்கலாம்.
- சிலந்தி, எறும்பு மற்றும் பருத்தி கறை பூச்சிகளின் நடமாட்டத்தை அதிகரிப்பதால் இவ்வகை கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.
- புங்கம் விதை சாறு அல்லது இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தெளிப்பதால் கொசுக்களை அழிக்கலாம்.
- கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
1. Lambda cyhalothrin- 1.2 ml per lit water
2. Beta cyfluthrin+ Imidacloprid - 1 ml per litre water
3. Buprofezin - 3 ml per lit water
4. Thiamethoxam - 1 g per litre water
5. Triazophose - 1 ml per lit water
6. Deltamethrin -1.5 ml per lit water
0 Comments:
கருத்துரையிடுக