எலுமிச்சையில் மரப்பட்டை உதிர்ந்து செடிகள் இறக்க காரணம்...
|எலுமிச்சையில் கால் அழுகல் / கம்மோசிஸ் :
Phytopthora என்றழைக்கப்படும் பூஞ்சாணத்தால் இந்த நோய் தோற்றுவிக்கப்படுகிறது.
இந்த நோய் பொதுவாக சற்று வயதான மரங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டு, இலை மற்றும் வேரில் நீர்த்த வெளிர் பழுப்பு நிற புண்கள் தோன்றும்.
நாளடைவில் தண்டு, வேர் மற்றும் கிளையில் காணப்படும் புண்களில் வெடிப்புகள் (நீள்வாக்கில்) தோன்றும்.
இவ்வெடிப்புகளிலிருந்து பழுப்பு நிற கோந்து வெளிவரும்.
கிளைகளில் வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிற தடித்த கோடுகள் காணப்படும்.
வெடித்த இடங்களில் பட்டைகள் உதிர்ந்து பிற பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்துவதால் மரங்கள் ஒடிந்தோ அல்லது அழுகியோ இறக்க நேரிடும்.
பூஞ்சாணம் வேர் பகுதியை தாக்கி வேர் பட்டைகளை உதிர செய்தால் இலைகள் மஞ்சளாகி அதிகமாக உதிரும்.
ஏன் ஏற்படுகிறது :
எளிதில் தாக்கக்கூடிய இரகங்கள் வேர் செடிகளை பயன்படுத்துதல்.
அதிகமாக நீர்பாய்ச்சுதல் (அல்லது) தண்டுகளில் தொடர்ந்து நீர் தேங்குதல்.
அதிக காற்று ஈரப்பதம்/ மழை / மண்கடினத்தன்மை
வேர் பகுதியில் உப்பு தோன்றுதல் / உப்பு நீரை பயன்படுத்துதல்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
அதிக நீர்பாய்ச்சுதலை தவிர்க்கவும்.
உப்பு நீர்/ மண் இருக்கும் இடத்தில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துதல் உகந்தது.
ஒட்டு இரகங்களை தவிர்த்து நாட்டு இரகத்தை பயிரிடலாம்.
ஒட்டு இரகத்தை பயன்படுத்த விரும்பினால் வேர் செடிகளை தேர்வில் கவனம் தேவை.
கவாத்து செய்வதை தவிர்க்கவும்.
அmதிக வெப்பம் தண்டுகளில் படும்போதும் வெடிப்புகள் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் தரையிலிருந்து 1-2 அடி உயரத்திற்கு பெயிண்ட் அடிக்கவும்.
அதிக மழை பொழிவு / நீர் தேக்கம் இருக்ககூடிய இடங்களில் வட்ட பாத்தி அமைக்க வேண்டும்.
இப்பூஞ்சாணம் மண்ணில் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனம் உபயோகிக்கலாம்.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பட்டைகளை நன்றாக சுத்தம் செய்து 1% பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்து COC/ Bordeaes கலவையை பூசி விட வேண்டும்.
டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் தலா 50 கிராம் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தொடர்ச்சியாக வேரில் ஊற்றுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.
கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றின் கலவையை தண்டு / கிளையில் பூசி விடுதல் மற்றும் வேரில் ஊற்ற வேண்டும். (வெயில் மாதங்களில்)
Fosetyl Aluminium 25 g + Chlorpyiphos – 25 g / 10 Lit water
COC-30 g + Chlorpyriphos – 25 ml -/10 lit water
Copper Hydroxite 10g + Chlorpyriphos -25 ml/ 10 Lit water
Thiophenate Methyl 25g + Chlorpyriphos – 25 ml/ 10 Lit water
0 Comments:
கருத்துரையிடுக