காய்கறி பயிர்களில் உப்பு தன்மையினால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
உலக அளவில் 20% சாகுபடிக்கு உகந்த நிலங்கள் உப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் நிலப்பரப்பில் 33% உப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு தன்மையினால் மொத்த நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை 2050 ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.
உப்பு தன்மை அதிகமாகும் போது சோடியம் மற்றும் குளோரைடு ஊட்டச்சத்துக்களை செடிகள் அதிகமாக மண் மற்றும் நீரில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இதனால் மற்ற ஊட்டச் சத்துக்களை உட் கொள்வதில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
எவ்வாறு உப்பு தன்மை ஏற்படுகிறது:
- இயற்கையாகவே மண்ணில் உப்புத்தன்மை உருவாகும். இதற்கு நீண்டகால வருடங்கள் தேவைப்படும்.
- தொடர்ச்சியாக உப்புத்தன்மை நிறைந்த நீரை பயன்படுத்துதல். உதாரணம் கடல் நீர்
- காற்று மற்றும் நீரினால் கடலோரங்களில் உள்ள மண் மற்றும் செடிகளில் உப்பு படிதல்.
- அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுவதால்.
- கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதால்.
- மிகவும் குறைந்த மழைப்பொழிவு
- கடல் மற்றும் நிலத்தடி நீர் மனிதர்களின் வாழ்க்கை முறையினால் மாசு அடைவதாலும் பாதிக்கப்படுகிறது.
- முறையற்ற நீர்ப்பாசனம் மற்றும் யுக்திகள்.
- தொழில் துறையில் இருந்து வெளியிடப்படும் கழிவுகளும் நிலத்தடி நீரை மாசு படுத்துகிறது.
எப்போது மண் உப்புத்தன்மை நிறைந்ததாக கருதப்படுகிறது:
- Ec- below 0.6 நன்னீர்
- Ec- 0.6-1.5 சற்று உப்பான நீர்
- Ec- 1.5- 3 சிறிது உப்பான நீர்
- Ec- 3-8 மிதமான உப்பு நீர்
- Ec- 8-15 உப்பு நீர்
- Ec- 15- 45 அதிகமான உப்பு நீர்
எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது:
- சவ்வுடுபரவல்- இதனால் பயிர்கள் சுவாசிக்க முடியாமல் குன்றிய வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.
- Ion toxicity (சோடியம் மற்றும் குளோரைடு) - ஆக்சிஜனேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுவதால் செடிகள் பாதிப்படைகிறது.
அறிகுறிகள்:
- உப்பு தன்மை காரணமாக பல ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை அதில் முக்கியமான ஒன்று கால்சியம்.
- குன்றிய வளர்ச்சி மற்றும் பயிர்களின் இலை பரப்பளவு குறைந்து காணப்படும்.
- செடிகளின் அடிப்பாகத்தில் உள்ள முதிர்ந்த இலைகளில் நுனி கருகள் ஏற்படும்.
- இலையின் விளிம்புகள் மஞ்சள் நிறத்தில் மாறும் பின்னர் கருகி காணப்படும்.
- நாளடைவில் இலைகள் முற்றிலும் மஞ்சளாக மாறி பின்னர் கருகி விடும்.
- செடிகளின் கிளைகள் கருகி பின்னர் நிலத்தில் அங்கங்கே செடிகள் இறந்து காணப்படும்.
- செடிகளின் கிளைகள் கீழிருந்து மேலாக கருதுவதால் பார்ப்பதற்கு தொடப்ப குச்சி போன்று காட்சி அளிக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மண்ணை தேவையான அளவிற்கு மாற்றலாம்.
- போதுமான மணல் மற்றும் மரத் தூள்களை அவ்வப்போது மண்ணில் இடுவதால் உப்பின் தன்மை குறையும்.
- நண்ணீரை வயலில் பாய்ச்சி உப்பு தன்மையை வெளியேற்றலாம்.
- நிலத்தில் வடிகால் வசதியை சீரமைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது இயற்கை உரங்களை அதிகமாக இட்டு பயிரிடவும்.
- பயிரிடும் போது மேட்டு பாத்திகள் அமைத்து சாகுபடி செய்தால் ஓரளவு உப்புத் தன்மையை தவிர்க்கலாம்.
- கடலோரமாக சாகுபடி செய்யப்படும் இடத்தில் காற்று வீசும் எதிர் திசைக்கு செடிகளை நடவு நடவு செய்வதால் இலைகளில் உப்பு படிவத்தை தவிர்க்கலாம்.
- உப்பு தன்மையை தவிர்த்து/உட்கொள்ளாமை /வெளியேற்றும் தன்மை கொண்ட/தாங்கி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து பெயரிடலாம்.
- உதாரணத்திற்கு பல்வேறு மரப்பயிர்கள், சோளம், கோதுமை, ஓட்ஸ், கொய்யா, சப்போட்டா, நெல்லி, கொடுக்காப்புளி பார்லி, அஸ்பராகஸ் பீட்ரூட், கேரட் மற்றும் இதர பயிர்கள்.
- மேம்படுத்தப்பட்ட நீர் பாசன முறையை பின்பற்றலாம். நீர் பயன்பாட்டை குறைக்கவும் மண்ணில் உப்பு படிவதை தவிர்த்திடவும் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடலாம்.
- மண்ணின் கட்டமைப்பை மாற்றிடவும் கால்சியம் சத்து அளவை அதிகப் படுத்திடவும் ஜிப்சம் இடலாம்.
- சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துதல் நல்லது மழை நீரை சேகரித்து திறன் பட பயன்படுத்துவதால் தன்மையை தவிர்க்கலாம்.
- பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை நீரில் கரையும் உரங்களைக் கொண்டு தெளிப்பதால் உப்பு தன்மையினால் ஏற்படும் அறிகுறிகளை தவிர்க்கலாம்
0 Comments:
கருத்துரையிடுக