தற்போது பூசணி சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் சாகுபடி செய்யப்படும் பூசணிக்காய்கள் பெரும்பான்மையாக திருஷ்டிக்காக பயன்படுத்தப்படுவதால் மிக எளிதாக தூக்கி உடைக்கக்கூடிய எடை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அழகிய வடிவில் இருக்க வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு ஒரு சில தனியார் ரகங்கள் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
உதாரணத்திற்கு Suguna 316 (East West seed), Seema super (Chia Tai seeds), MAHY 1(Mahyco), Sowmya (Kalash seeds), VNR AG(VNR seeds)
சாகுபடியில் மண் தன்மையை பொறுத்த வரையில் மிதமான அமில முதல் நடுநிலைத் தன்மையுடன் மிகவும் ஏற்றது.
விதை அளவு ஏக்கருக்கு 5 (50 கிராம்) பாக்கெட்டுகள் போதுமானது.
அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரத்தினை உயிர் உரங்களுடன் ஊட்டமேற்றி இடவேண்டும்.
ஒரு ஏக்கர் சாகுபடிக்கு தேவையான 40 கிலோ தழைச்சத்து மற்றும் தலா 20 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை 45 நாட்களுக்கு முன்னதாக முழுமையாக கொடுத்து விட வேண்டும்.
பரவலாக பூக்கள் தென்படும் பொழுது காய் பிடிப்பு திறனை மேம்படுத்த Ethrel என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு நான்கு முதல் ஐந்து மில்லி கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் தேமோர் கரைசல்/ கடல்பாசி உரம் அல்லது நன்கு புளித்த மோரை தெளிக்கலாம்.
முதல் அறுவடை 60 முதல் 65 நாட்களில் கிடைக்கும்... அதிகபட்சமாக மூன்று முறை அறுவடை செய்யும் போது சுமார் 10 முதல் 12 டன் வரை ஏக்கருக்கு கிடைக்கும்.
தற்சமயம் சராசரியாக ஒரு கிலோ ரூபாய் 10 முதல் 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அறுவடை காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்ட இன்னும் சற்று விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதிக வெப்பநிலை இருப்பதால் இலை சுரங்க ஈக்கள், வைரஸ் தொற்று, பழ ஈ மற்றும் இலை உண்ணும் புழுக்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
0 Comments:
கருத்துரையிடுக