நீரின் உப்பு தன்மையை குறைக்கும் நெல்லி மர கட்டைகள் ( பெருநெல்லி )
|
செப்டம்பர் 06, 2026
In மற்றவைகள் |
- பாசன நீரில் உள்ள உப்பு தன்மையை ஓரளவிற்கு குறைக்கவும், கடின நீரை மென்னீராக மாற்றுவதற்கும் நெல்லி மர கட்டைகளை ( பெருநெல்லி ) தண்ணீரில் ஊற வைத்து பின்னர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நமது பாரம்பரிய விவசாயத்தில் கடைபிடிக்கப்பட்ட ஒரு மரபுத் தொழில்நுட்பமாகும் .
- நெல்லி மரக்கட்டைகள் நீரின் உப்புத்தன்மையை எவ்வாறு குறைக்கின்றன என்பதற்கான அறிவியல் பூர்வமான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
- நெல்லி மரக்கட்டைகளில் உள்ள தனித்துவமான வேதிப்பண்புகள் நீரின் உப்புத்தன்மை மற்றும் கடினத்தன்மையைக் குறைக்கின்றன.
- நெல்லி மரத்தின் செல்லுலோஸ் மற்றும் லிக்னின் அமைப்புகள் நீரில் கரைந்துள்ள அதிகப்படியான சோடியம் (Na⁺), குளோரைடு (Cl⁻), கால்சியம் (Ca²⁺), மற்றும் மெக்னீசியம் (Mg²⁺) போன்ற உப்புக்களை தன்னுடைய மேற்பரப்பில் ஈர்த்து ஒட்டிக்கொள்ளும் (Adsorb) திறன் கொண்டவை. இந்த நிகழ்வு பயோ-அட்ஸார்ப்ஷன் (Bio-adsorption) என்று அழைக்கப்படுகிறது.
- நெல்லி மரத்தின் வைரப்பகுதியில் (Heartwood) இயற்கையாகவே டானின்கள் (Tannins), பாலிபினால்கள் (Polyphenols) மற்றும் கரிம அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நீரில் உள்ள கடினமான உப்புகளுடன் வினைபுரிந்து, அவற்றை நீரில் கரையாத கூட்டுப் பொருட்களாக மாற்றி அடியில் படிய (Precipitate) வைக்கின்றன. இதனால் நீரின் மேல் அடுக்கில் உப்பின் அடர்த்தி குறைகிறது.
- தண்ணீரில் உள்ள உப்பின் அளவு மற்றும் நெல்லி மர கட்டைகளை ஊற வைக்கும் கால இடைவெளி ஆகிவற்றைப் பொறுத்து சுமார் 50 சதவீதம் வரை கூட உப்பின் தன்மையை குறைக்கும் என ஆய்வு கட்டுரைகள் விவரிக்கின்றன.
- இதன் காரணமாக தண்ணீரின் காரத்தன்மை குறைந்து நடுநிலைத் தன்மை பெறுகிறது.
- இது மட்டும் இன்றி தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறது.
- இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரை மென்மையாக்கி அந்த நீரை நாம் பருகலாம் இதனால் எந்த தீங்கும் ஏற்படாது.
- பாசனக் கிணறுகள் அல்லது தண்ணீர்த் தொட்டிகளில் நெல்லி மரக் கட்டைகளை போடுவதன் மூலம், நீரிலுள்ள சோடியம், குளோரை, கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் அளவை குறைத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
- நீரின் உப்பு தன்மை குறைவதால் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பயிர்கள் மிக எளிதாக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக விளைச்சலைத் தரும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்... https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u
0 Comments:
கருத்துரையிடுக