பார்த்தீனியம் களையும் அதன் மேலாண்மையும்...
|
பிப்ரவரி 10, 2026
In மற்றவைகள் |
- பார்த்தீனியம் செடிகளின் விதைகள் மண்ணில் பல வருடங்கள் கெடாமல் இருக்கும். சாதகமான சூழ்நிலை அமையும் போது விதைகள் முளைத்து வருகிறது.
- சராசரியாக 40 முதல் 45 நாட்களில் செடிகள் பூ பிடிக்கிறது. ராபி பருவத்தில் மட்டும் 30 முதல் 35 நாட்களில் பூ பூக்கிறது.
- ஒரு பார்த்தீனியம் செடி சராசரியாக அதன் வாழ்நாளில் 15000 முதல் 18000 வரை விதைகளை உற்பத்தி செய்கிறது.
- இந்த விதைகள் வெடித்து காற்றின் மூலமாகவும் கால்நடை மூலமாகவும் மனிதர்களின் செயல்பாடு காரணமாகவும் மிக எளிதாக பரவுகிறது.
- இதனை பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள் உதாரணத்திற்கு கேரட் புல், காங்கிரஸ் களை.
- பார்த்தீனியம் செடிகளின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே இதை அப்புறப்படுத்தும் போது செடிகளை தொடாமல் இருப்பது நல்லது.
- இதன் விரைந்து வளரும் தன்மை, அதிக வறட்சி அதிக மழை போன்ற சாதாரண சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன், இதன் இனப்பெருக்க வேகம் போன்ற காரணத்தினால் மண்ணில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களை விரைந்து எடுத்துக்க கூடியது இதனால் செடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுவதில்லை.
- இச்செடிகளில் இருந்து சுரக்கப்படும் வேதியல் பொருட்கள் பயிரின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது.
- பயிர்களுக்கு தேவைப்படும் மிக முக்கிய ஊட்டச்சத்துக்கான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இந்த பார்த்தீனியம் செடியில் இருப்பதால் இதனை மக்க வைத்து பயன்படுத்துவதால் உரப் பயன்பாட்டை குறைக்கலாம்.
- பல்வேறு ஆய்வு அறிக்கையின்படி பார்க்கும் பொழுது பார்த்தீனியம் செடிகளை மக்க வைத்து பயன்படுத்துவதால் இது மண்புழு உரத்திற்கு ஈடான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பது தெரிய வருகிறது.
- பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்த மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது களை முளைப்பதற்கு முன்னதாக தெளிக்க கூடிய களை கொல்லிகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு Atrazine, Oxyflurofen, Pendimethlin, Metolachlor ஏதேனும் ஒன்றை தேவையான அளவு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து களைகள் முளைப்பதற்கு முன்பதாக தெளிக்கலாம்.
- செடிகள் பூ பூப்பதற்கு முன்பதாக வேரோடு பிடுங்கி எடுப்பதால் வெகுவாக அதன் எண்ணிக்கையை வயலில் இருந்து குறைக்கலாம்.
- 10 லிட்டர் தண்ணீருக்கு 200 முதல் 250 கிராம் உப்பு மற்றும் சிறிதளவு சோப்பு துண்டு ஆகியவற்றை கலந்து செடிகள் பூ பூப்பதற்கு முன்பு தெளிப்பதால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
- களைகள் முளைத்த பிறகு தெளிப்பதற்கு பல்வேறு களை கொல்லிகள் உள்ளது. உதாரணத்திற்கு Glyphosate, Gulfosinate ammonium, Metribuzine, 2,4-D முதலியவற்றை பயன்படுத்தலாம் பயிர்கள் இல்லாத நிலத்திற்கு மட்டும்.
- பார்த்தீனியம் அதிகம் வளரும் நிலத்தில் தொடர்ச்சியாக இது பூ பூப்பதற்கு முன்பாக வேரோடு பிடுங்கி மண்ணில் இட்டு உழவு செய்வதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். அவ்வாறு 20 நாட்களுக்கு ஒரு முறை பின்பற்ற வேண்டும்.
- சோளம், தட்ட பயிறு, பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் இதனை நிலத்திலிருந்து வெகுவாக குறைக்கலாம். மாற்று பயிராக சாமந்தி பயிரிடும்போது இதனால் சுரக்கப்படும் திரவத்தால் இதன் விதைகள் மற்றும் செடிகள் பாதிக்கப்படுகிறது.
- மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t

0 Comments:
கருத்துரையிடுக