மா சாகுபடியில் தத்துப்பூச்சி மேலாண்மை
தத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
1. சரியான நேரத்தில் நமது மா பயிரை தாக்கி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிகப் பெரிய அளவில் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவது தான் இந்த தத்துப்பூச்சி.
2. இது ஒரு வகை சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது ஆகும்.
3. எப்போதெல்லாம் நமது மா மரங்களில் இளம் இலைகள், பூங்கொத்துகள் மற்றும் இளம் காய்கள் காணப்படுகிறதோ அப்போதெல்லாம் நமது பயிரை வெகுவாக பாதிக்கும்.
4. பூங்கொத்துகள் தோன்றும் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால் சுமார் 60 முதல் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.
5. இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த தத்துப்பூச்சிகள் பூங்கொத்துகளில் சாற்றை தொடர்ச்சியாக உறிஞ்சும்.
6. இதனால் பூக்கள் கருகி ஒன்றன் பின் ஒன்றாக உதிர ஆரம்பிக்கும். இதனால் அதிக அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
7. இவை சுரக்கும் இனிப்பு திரவக்கழிவு இலை மற்றும் பூங்கொத்து பகுதிகளில் படும் பொழுது அங்கு கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுகிறது.
8. இதனால் பயிர்கள் உணவு உற்பத்தி செய்யும் திறன் குறையும் அது மேலும் பயிர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
9. வருடம் முழுவதும் நமது மாமரங்களில் இந்த பூச்சிகள் காணப்பட்டாலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஜூன் ஜூலை மாதத்தில் அதிகம் காணப்படும்.
10. மிதமான வெப்பம், அதிக காற்று ஈரப்பதம், அதிக அளவு நிழல் போன்ற சூழ்நிலைகள் தகுந்த சீதோசன நிலையை ஏற்படுத்தி பூச்சியின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
1. முறையான கவாத்து செய்தல். அக்டோபர் மாதத்தில்.
2. மரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி மிக முக்கியம்.
3. மிதமான அளவு தழைச்சத்து உரத்தை இட வேண்டும்.
4. தோப்பில் களைகள் அதிகம் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
5. ஊடுபயிராக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம் இது நன்மை செய்யும் பூச்சிகளை வரவேற்கும்.
6. பொட்டாசியம் ஊட்டச்சத்தை சற்று கூடுதலாக பூங்கொத்து வரும் முன் கொடுக்க வேண்டும். மாமரங்கள் சற்று பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை பெரும்.
7. பூச்சி தாக்குதல் ஏற்படுவதற்கு முன்னதாக தொடர்ச்சியாக பூச்சி விரட்டு திரவங்களை தெளித்து வர வேண்டும்.
8. ஆரம்ப நிலை பூச்சி தாக்குதலின் பொழுது Verticillium மற்றும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.
9. பஞ்சகாவியா, Verticillium மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து தெளிப்பது நல்ல பயனளிக்கும்.
10. கண்டிப்பாக ரசாயன மருந்துகளை பயன்படுத்தக் கூடாது இது மகரந்தச் சேர்க்கையை பாதிக்கும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

0 Comments:
கருத்துரையிடுக