google-site-verification: googled5cb964f606e7b2f.html தர்பூசணியில் நீர் வடியும் தண்டுக்கருகல் நோய் மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 30 டிசம்பர், 2025

தர்பூசணியில் நீர் வடியும் தண்டுக்கருகல் நோய் மேலாண்மை

முன்னுரை:

பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நோய் பூஞ்சை தொற்றால் ஏற்படக் கூடியதாகும். மிகத் தீவிரமாக பரவி மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை மகசூலை இலக்க நேரிடும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

1. தொடர்ச்சியாக ஒரே வயலில் தர்பூசணி சாகுபடி செய்தல் 

2. அதிக காற்று ஈரப்பதம் 

3. மிதமான அல்லது சராசரி வெப்பநிலை 

4. அதிக பனிப்பொழிவு 

5. அவ்வப்போது மழை அல்லது தூறல் காணப்படுதல்.

6. தொடர்ச்சியாக மேக மூட்டமான சூழ்நிலை

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இந்த நோயின் பெயருக்கு ஏற்றவாறு தண்டுப் பகுதியில் வெடிப்புகள் காணப்படுதல். 
  • வெடிப்புகளில் இருந்து இளஞ் சிகப்பு நிற சாறு வெளியேறுதல். எனவே தான் இதனை Gummy stem blight அதாவது நீர் வடியும் தண்டு கருகல் நோய் என்று அழைக்கப்படுகிறது.
  • இதனால் மண்ணிலிருந்து போதிய ஊட்டச்சத்து மற்றும் நீர் பயிர்களுக்கு கிடைக்காது இதனால் பயிர்கள் இறந்துவிடும். 
  • அதேபோன்று இலைப்பகுதியில் ஒழுங்கற்ற வடிவ கருகல் காணப்படும் நாளடைவில் பயிர் வளர்ச்சி பாதிப்படைந்து மகசூல் குறையும்.
  • நோய் தாக்குதலின் தீவிர நிலையில் காய்களிலும் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட காய்களில் வெடிப்புகள் மற்றும் அந்த பகுதி அழுகி காட்சியளிக்கும்.

நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தரமான மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் தர்பூசணி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். 
  • முந்தைய பயிர் கழிவுகள் மற்றும் அல்லது பாதிப்படைந்த காய்கள் வயலில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இது நோய் தாக்கவில்லை எளிமைப்படுத்தும். 
  • வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்த பயிர்களை ஊடுபயிராகவோ அல்லது பக்கத்து வயலில் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • களைகள் இன்றி முறையாக பராமரிக்க வேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி கொடுக்க வேண்டும். 
  • முன்னெச்சரிக்கையாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தெளித்து வரவேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் சூடோமோனஸ் அல்லது பேஸ்இல்லெஸ் திரவத்தை வாரம் ஒரு முறை தண்டுப் பகுதி நனையும் படி தெளிக்க வேண்டும்.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் இலை வழி தெளிப்பு மற்றும் வேர் வழியாகவும் மருந்துகள் கொடுக்க வேண்டும். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை நோயின் தீவிரத்தை பொறுத்து தெளிக்க வேண்டும். 
  • Zineb
  • Chlorothalonil
  • Azoxystrobin Mancozeb
  • Azoxystrobin+ difenaconazole
  • Fluxapyraxad+pyroclostrobin
  • thiophenate meyhyl 
  • Fosteyl aluminium
  • Cymoxanil+ Mancozeb 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts