பொட்டாசியம் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை சாம்பல்
|பொட்டாசியம் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை சாம்பல்...
- PDM என்பது Potash Derived from Molasses என்பதாகும்.
- சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் Molasses ஐ பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்யப்படும் பொழுது அதிக அளவிலான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
- இந்த கழிவு நீர் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பதால் இதனை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி சாம்பல் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்த சாம்பலில் போதுமான அளவு பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் இதனை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
- சுமார் 14.5% பொட்டாசியம் சத்து நிறைந்த இந்த சாம்பல் ரசாயன உரங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது.
- இந்த சாம்பலை இயற்கை விவசாயத்தில் உரமாக பயன்படுத்த மத்திய அரசும் சர்க்கரை தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்குகிறது.
- பொட்டாசியம் ஊட்டச்சத்து தவிர சிறிதளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்தும் இதில் அடங்கியுள்ளது.
- இதன் சராசரி ஈரப்பதம் அளவு சுமார் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருக்கும்.
இதன் நன்மைகள்:
- மறுசுழற்சி காரணமாக சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உப பொருட்களாக மாற்றப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவது வெகுவாக தடுக்கப்படுகிறது.
- ரசாயன உரத்திற்கு மாற்றாக திகழ்வதால் மண் தன்மை மேம்படுவதுடன், நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மேம்படும்.
- இதை பயன்படுத்துவதால் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும்.
- பொதுவாக பொட்டாசியம் உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டின் இறக்குமதி செலவினம் குறையும்.
- பயிர்களில் பூ பிடிப்பு மற்றும் காய்ப்பு திறன் மேம்படுவதால் உயிர் விளைச்சல் பெறலாம்.
- இதன் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 10 ஆகும்.
- மண் தன்மை மற்றும் பயிருக்கு ஏற்றவாறு ஏக்கருக்கு சுமார் 200 முதல் 250 கிலோ பயன்படுத்தலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX