வாழை சாகுடியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறி மற்றும் சரி செய்யும் வழிமுறை
|வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களில் கால்சியமும் ஒன்று. வாழை பயிர் அதிகளவு விரும்பி எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக தழைச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் திகழ்கிறது. எனவே வாழை பயிரில் கால்சியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஏன் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது:
- போதுமான அளவு கால்சியம் சத்து கொடுக்காமல் இருத்தல்
- மண்ணின் அமிலத்தன்மை
- அதிகளவு தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மெக்னீசியம் இடுதல்
- மிகைப்படியான மண் ஈரப்பதம்
- தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன
பற்றாக்குறை அறிகுறிகள்:
- கால்சியம் ஊட்டச்சத்து பயிரில் அதிகம் கடந்து செல்லாததால் நுனி பகுதியில் இதன் பற்றாக்குறை அறிகுறி காணப்படும்.
- இளம் இலைகள் போதுமான வளர்ச்சி இன்றி காணப்படும் இதனால் இலைகள் சிறிதாக இருக்கும்.
- குருத்து கிளைகள் சரியாக பிரியாமல் ஒழுங்கற்று காட்சியளிக்கும் சில நேரங்களில் குச்சி போன்று காணப்படும்.
- இலை விளிம்புகள் பலவீனம் இல்லாமலும், சுருண்டு ஒழுங்கற்று காணப்படும்.
- இலைகள், இலை காம்புகள் மற்றும் இலை நரம்பு பகுதி எளிதில் உடைந்து விடும்.
- காய்கள் சிறுத்து காணப்படும். எளிதில் வெடிப்புகள் தோன்றும்.
மேலாண்மை முறைகள்:
- மண்ணின் கார அமிலத்தன்மை கால்சியம் ஊட்டச்சத்து கிடைப்பதற்கு முக்கிய பங்கு வைக்கிறது. 6-7.5 உகந்தது.
- தேவையின் அடிப்படையில் சுண்ணாம்பு கரைசல் தயார் செய்து விடலாம்.
- மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு கால்சியம் ஊட்டச்சத்து இடவும்.
- இலை வழி ஊட்டத்திற்கு கால்சியம் நைட்ரேட் ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் தெளிக்கலாம். சொட்டுநீர் பாசனம் வழியாக விடுவதற்கு 200 மீட்டர் தண்ணீர் மூன்று கிலோ கலந்து விடலாம்.
- போதுமான அளவு மக்கிய தொழு உரம் இடுதல், முறையான நீர்ப்பாசனம் மற்றும் சமச்சீர் உர நிர்வாகம் கால்சியம் ஊட்டச்சத்தை கிடைப்பதை உறுதி செய்யும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக