google-site-verification: googled5cb964f606e7b2f.html தக்காளியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 23 ஜூலை, 2025

தக்காளியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மேலாண்மை

விளக்கம்:

  • கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் இந்த அறிகுறி பூ முனை அழுகல் நோய் என அழைக்கப்படுகிறது. 
  • கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 
  • குறிப்பாக கோடை பருவத்தில் பல்வேறு காரணங்களால் பயிர்களுக்கு  கால்சியம் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கப் பெறாமல் இருப்பதால் இந்த பூனை அழுகல் நோய் ஏற்படுகிறது. 

கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்: 

  • அதிக வெப்பநிலை 
  • நீர் பற்றாக்குறை, நீண்டகால வறட்சிக்கு பிறகு கிடைக்கப்பெறும் அதிக நீர்
  • அளவுக்கு அதிகமா தழைச்சத்து உரம் இடுதல் 
  • முறையற்ற வடிகால் மேலாண்மை 
  • மண்ணின்  அமிலத்தன்மை
  • மேற்கண்ட பல்வேறு காரணங்களால் போதுமான கால்சியம் சத்து மண்ணில் இருந்தாலும் பயிர்களால் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள இயலாமல் அல்லது போதுமான அளவு பயிரின் குருத்துப் பகுதி மற்றும் காய்களுக்கு சென்றடைவதில்லை   இதன் காரணமாக பூ முனை அழுகல் நோய் ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்: 

  • காய்களின் அடி புறத்தில் நீர்த்த புள்ளிகள் காணப்படும். 
  • நாளடைவில் இதை விரிவடைந்து காய்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு பரவும்.
  • பார்ப்பதற்கு அதிக வெப்பநிலை காரணமாக தோன்றிய அறிகுறி போன்று தெரியும்.

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • தேவையான அளவு கால்சியம் ஊட்டச்சத்து அடி உரமாக கொடுக்கப்பட வேண்டும். 
  • கோடை பருவத்தில் போதுமான அளவு நீர் குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்க வேண்டும் 
  • அப்போதுதான் எளிதில் கால்சியம் பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்டிப்பாக அறிகுறி தெரியும். 
  • பயிர்களை அதிக வறட்சிக்கு உட்படுத்தாமல் நீர் கொடுக்க வேண்டும்.
  • கோடை பருவத்தில் கண்டிப்பாக இலை வழியாக கால்சியம் ஊட்டச்சத்தை தெளித்து வர வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து இட வேண்டும்.
  • தோல் தடிமனாக உள்ள தக்காளி ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம்.
  • அதிக அமிலத்தன்மை உடைய மண்ணில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதனை சரி செய்ய வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts