google-site-verification: googled5cb964f606e7b2f.html மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 23 ஜூலை, 2025

மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது

  • மண் வளம் என்பது நீடித்த பயிர் வளர்ச்சி மற்றும் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதாகும். மேலும் பயிர் வளர்ச்சிக்கு உகந்த பௌதீக, ரசாயன மற்றும் உயிரியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகும்.
  • அளவுக்கு அதிகமான ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மறந்து பயன்பாட்டால் மண் வளம் குன்றி வருகிறது. இதனால் மண்ணின் தன்மை, ஊட்டச்சத்து மற்றும் நீர் பிடிப்பு திறன், கார அமிலத்தன்மை, நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை போன்ற பல்வேறு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் காரணிகள் பாதிப்படைந்து மண்வளம் குன்றி வருகிறது.
  • அமிலத்தன்மை கொண்ட மண் என்பது அமிலத்தன்மை 5.5 க்கு குறைவாக உடைய மண் ஆகும். இந்த மண்ணில் நாம் சாகுபடி செய்யும் பொழுது ஏற்படும் சவால்களைப்பற்றி விரிவாக பார்ப்போம். 

அமிலத்தன்மை உடைய மண்ணில் ஏற்படும் சவால்கள்:

  • நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மற்றும் பெருக்கும் படிப்படியாக குறைந்து தீமை செய்யும் அதாவது நோய் தாக்குதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு ஓங்கி காணப்படும். 
  • இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் குறைவதால், ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலை நிறுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு மணிச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம்.
  • அதிக அமிலத்தன்மை காரணமாக மண்ணில் உள்ள அலுமினியம் மற்றும் மாங்கனிசு சத்துக்கள் கரைந்து விடுவதால் தேவைக்கும் அதிகமான இந்த ஊட்டச்சத்துக்கள் வேர்ப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக வேர் வளர்ச்சி குன்றி ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
  • மண் இறுக்கத்தன்மை மற்றும் போதுமான வடிகால் வசதி இல்லாத நில அமைப்பில் குன்றிய வேர்  மற்றும் பயிர் வளர்ச்சி, ஆக்சிஜன் பற்றாக்குறை, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில் பின்னடைவு போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவதால் பயிர் மற்றும் இதர கழிவுகளை மக்கச் செய்வது தொய்வு ஏற்படுகிறது. இதனால் மண்ணின் தன்மை பாதிப்படைவதுடன் மண் அரிமானம் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஊட்டச்சத்து மிகுந்த மேல் மண்ணை இலக்க நேரிடும். 
  • இதன் காரணமாக பயிர்கள் பல்வேறு விதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதால் மகசூல் ஏற்படும் அபாயம் உள்ளது. 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • மண்ணின் அமிலத்தன்மையை உயர்த்தி நடு நிலைத் தன்மைக்கு கொண்டு வர போதுமான அளவு சுண்ணாம்பு இடலாம்.
  • அதிக அளவு இயற்கை இடுபொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் மண் தன்மை மற்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.
  • மண் இறுக்கத்தன்மையை போக்க மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்க பசுந்தாள் உர பயிர்கள் அல்லது பல தானிய பயிர்களை விதைத்து மடக்கி உழவு செய்யலாம். 
  • ரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் குறிப்பாக அமிலத்தன்மை உடைய உரங்களை. 
  • அதிக அளவிலான மண்புழு உரம்/ தொழு உரம்/கடற்பாசி உரங்களை விடுவதன் மூலம் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பிரிந்து பயிர்களுக்கு கிடைக்க உதவி புரியும். மேலும் இது மண்ணின் இறுக்க  தன்மையை சரி செய்து வேறு வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
  • அமிலத்தன்மையை தாங்கி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். 
  • வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts