மல்லிகை மலர்கள் ஏன் இளஞ்சிவப்பு நிறமாக மாறி உதிர்கிறது... அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்??
|மல்லிகை மலரில் மிட்ஜ் (Midge) பூச்சி தாக்குதல் :
தற்போது நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் Contarinia maculipennis எனப்படும் மிட்ஜ் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. file:///C:/Users/ddhtv/Downloads/Bioecology_of_Blossom_Midge_of_Jasmine_Contarinia_.pdf
- இவ்வகைப் பூச்சிகள் இதழ்களின் உட்புறம் முட்டைகளை இடுகின்றன. சுமார் 24-48 மணி நேரத்திற்குள் முட்டைகளை பொறித்து லார்வா நிலைக்கு மாறுகிறது.
- லார்வாக்கள் ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலும், பின்னர் மஞ்சள் நிறமாக
மாறுகிறது. இவ்வகைப் புழுக்கள் மொட்டுகளுக்கு உள்ளே சென்று இதழ்களில் உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன.
- சுமார் 4-5 நாட்களுக்குள் பியூபா நிலையை அடைந்து, செடிகளிலிருந்து
தரையை சென்றடைகிறது. பியூபா நிலையில் 7-8 நாட்கள் நீடித்து, பின்னர் மிகவும் சிறிய
மற்றும் மென்மையாக ஈக்களாக மாறுகிறது.
- பெண் ஈக்கள் கறுப்பு தலை மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலைக்
கொண்டும், ஆண் ஈக்கள் பழுப்பு நிறத்தில் பெண் ஈக்களை விட சற்று சிறியதாக காணப்படும்.
- குண்டுமல்லி மொட்டுக்களின் வடிவம், அளவு மற்றும் அதனுள் உள்ள வேதியியல் பொருட்களே இவ்வகை பூச்சித் தாக்குதல் மற்ற மல்லிகை இனங்களை விட குண்டுமல்லியில் அதிகம் காணப்படுகிறது.
அறிகுறிகள்
- லார்வாக்கள் மொட்டுகளின் அடிப்பகுதியை துளைப்பதால் பூக்களின் காம்புகள் சற்று வீக்கத்துடன் காணப்படும்.
- புழுக்கள் மொட்டுகளின் உள்ளே சென்று சாறை உறிஞ்சுவதால் மொட்டுக்களின் வடிவம் சிதைக்கப்பட்டு இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடைகிறது.
- கடுமையான பூச்சி தாக்குதலின் போது மொட்டுகள் காய்ந்து உதிர்கின்றன.https://agritech.tnau.ac.in/horticulture/horti_flower%20crops_malligai.html
கட்டுப்படுத்தும் முறைகள்
- சரியான தருணத்தில் கவாத்து மேற்கொள்வதால் சூரிய ஒளி போதுமான அளவு செடிகளில் ஊடுருவி வளமான பயிரை ஊக்குவிக்கிறது.
- பருவமல்லாத காலத்தில் போதுமான அளவு வேப்பம்புண்ணாக்கு அல்லது குளோரிபைரிபாஸ் குருணையை மண்ணிலிட்டு மண்ணை கிளறுவதால் பியூபாக்கள் அழிக்கப்படும்.
- நல்ல வடிகால் வசதியுடன் களைகள் இல்லாமல் வயல்களை பராமரிக்கவும்.
- பூச்சித் தாக்குதல்களில் மிட்ஜ் பூச்சி தாக்குதல் குறைவாக உள்ள மல்லிகை ரகங்களை தேர்வு செய்து நடவும்.
- பிச்சி மற்றும் காக்கர்டான் ரக மல்லிகைகள் இப்பூச்சிகளை தாங்கி வளரக்கூடியது.
- தாக்கப்பட்ட மொட்டுகள் மற்றும் செடிகளின் பாகங்களை சேகரித்து அழிக்கவும்.
- ஊடுபயிராக சாமந்தி, எள் அல்லது கொத்தமல்லியை பயிரிடுவதால் பூச்சித் தாக்குதல் 30% வரை குறைக்கப்படும். பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதை தவிர்க்கவும்.
- பொறி பயிராக சாமந்தி செடிகளை வயலை சுற்றி நடுவதால், பூச்சித் தாக்குதலின் அளவு அளவு குறையும்.
- வேப்பம்கொட்டை வடிநீர் கரைசல் 5% தெளிக்கலாம்.https://agritech.tnau.ac.in/horticulture/horti_flower%20crops_malligai.html
- மிதமிஞ்சிய ஈரப்பதம் பூச்சித் தாக்குதலை அதிகரிக்கும். எனவே, அதிகமான ஈரப்பதத்தைத் தவிர்க்கவும்.
- இயற்கை பூச்சியுண்ணிகளான லேடி பக்ஸ், லேஸ்விங்ஸ் மற்றும் ஒட்டுண்ணி குழவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
- மஞ்சள் ஒட்டுப்பொறி 5 எண்கள் / 1 ஏக்கர் பயன்படுத்துவதால் முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- பேவேரியானா பேசியானா – 5கி/லி தண்ணீரில் கலந்து 7 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
- டிரைக்கோடெர்மா சிலோனிஸ் ஒட்டுண்ணியை எக்டருக்கு 1 இலட்சம் எண்கள் விடுவிப்பதால் 61-79 % வரை பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
- டிரைக்கோடெர்மா சிலோனிஸ், மெட்டாரைசம் அனினோபிளியே கலந்து தெளிப்பதால் 67 % வரை நோய்த் தாக்குதலை தவிர்க்கலாம்.
- கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.https://www.agrifarming.in/jasmine-farming
1. Spinosad
- 0.5 ml/1 lit.
2. Thialoprid 2 ml/ 1 lit.
3. Chlorantraniliprole
- 0.3ml/ 1 lit
4. Novaluron + Emamectin- 2 ml + 0.5g / 1 lit.
5. Spirotetramet - 2.5 ml/ 1 lit.
6. Rynaxypyr-
0.5 ml/1 lit.
மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.