சின்ன வெங்காயத்தில் கோழிகால்/திருகல் /தவளை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...
| சின்ன
வெங்காயத்தில் திருகல் நோய் /கோழிக்கால் நோய் /ஆந்த்ரோனாக்ஸ் / தவளை நோய்:
சின்ன வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு
அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடம் வகித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார்
30 மில்லியன் டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வெங்காய உற்பத்தியில் விவசாயிகளுக்கு மிகவும் சவாலான நோயாக கொலெட்டோட்ரிகம் எனப்படும்
ஆந்த்ரோனாக்ஸ் நோய் திகழ்கிறது. இந்நோயானது திருகல் நோய் அல்லது கோழிக்கால் நோய்
அல்லது தவளை நோய் என்று விவசாயிகளால் அழைக்கப்படுகிறது. மூலக்கூறு ஆராய்ச்சியில்
(Molecular Research) சுமார் 29
Fusariun மற்றும் 6 Colletotrichum பூஞ்சாண
வகைகள் இந்நோய் தாக்குதலுக்கு காரணமாக கருதப்படுகிறது.
நோய் காரணிகள் :
இந்நோயானது Colletotrichum gloeosporiodes எனப்படும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. ஆனால் பல்வேறு வயல் மற்றும் ஆய்வக ஆராய்ச்சியில் இந்நோயானது பலவகையான பூஞ்சாணங்களின் தாக்குதலால் ஏற்படுகிறது என தெரிய வருகிறது. அவற்றில் முக்கியமான சில பூஞ்சாணங்களாக Gibberella moniliformis, Colletotrichum acutatum, Colletotrichum coccodes, Colletotrichum siamense, Fusariun oxysporum, Fusariun fujikuroi, Sclerotium rolfsii, Allium ledebourianun, Allium spathianum கருதப்படுகிறது.
இந்நோயானது
சுமார் 50% முதல் 100% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் வல்லமைப்படைத்தது.
நோய் தொற்று காரணிகள் :
இந்நோய் தாக்குதலை உண்டாக்கும் பூஞ்சாணம் உறக்க நிலையில் சுமார் 4 ஆண்டு காலம் வரை மண்ணில் அல்லது செடிகளில் வாழும் தன்மை கொண்டது. இவ்வகை பூஞ்சாணத்தைச் சுற்றியுள்ள திரவ உறை மற்றும் அதனுள் இருக்கும் மிகையான புரதச்சத்து காரணமாக நீண்ட நாள் வாழும். நோய்த் தொற்று கீழ்க்கண்ட காரணங்களால் பரவுகிறது.
அதிக மழை, போதுமான வெப்பநிலை (20-35c) மற்றும் காற்றின் ஈரப்பதம் (75-100) பூஞ்சாணம் பரவுவதற்கு ஏற்ற சூழல். தரைவழி நீர்ப்பாய்ச்சுதல், தெளிப்பு நீர் பாசன முறை பயன்படுத்துதல், பண்ணை உபகரணங்கள், வேளாண் குப்பைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிழங்குகள் மூலம் பரவுகிறது.

Ø தொடக்கத்தில் இலையில் வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் நிற சற்று பள்ளத்துடன் கூடிய புண்கள் காணப்படும்.
Ø நோய்த்தொற்று இல்லாத விதை / விதை கிழங்குகளை பயன்படுத்த வேண்டும்.
2. Thiophanate methyl + Thiram
3. Any Triazoles + Paclobutrazol
4. Chlorothalanil + Strobilurin fungicide
5. Propiconazole + Iprobenfos
6. Propiconazole + Thiophanate methyl
7. Pyraclostrobin + Metiram + Fluzinam
மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக