நிலக்கடலையில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும்
|முன்னுரை:
- இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25-28 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- இதன் சராசரி உற்பத்தி திறன் ஹெக்டேர் ஒன்றிற்கு சுமார் 1.4 டன் திகழ்கிறது. நிலக்கடலையில் சுமார் 50 சதவீதம் எண்ணெய் மற்றும் 26% சதவீதம் புரத சத்து நிறைந்துள்ளது. இதன் அனைத்து பகுதிகளும் ஏதேனும் ஒரு வழியில் பயன்படுவதால் இது விவசாயிகளுக்கு லாபகரமான பயிராகவே திகழ்கிறது.
பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை:
- நிலக்கடலை சாகுபடி செய்ய இருக்கும் போது நிலத்தை மிக ஆழமாக உழவு செய்யக்கூடாது. அதாவது 20 சென்டிமீட்டர் மேல் ஆழமாக போகும்போது விழுதுகள் இறங்குவது சற்று கடினம் மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும்.
- நிலக்கடலை பொதுவாக முந்தைய பயிர்களுக்கு இடப்பட்ட உரங்களை தான் அதிகம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்திற்கு தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம் என்றால் அதற்கு இடப்படும் உரங்கள் மண்ணில் இருக்கும் அதை தான் அடுத்து நாம் சாகுபடி செய்யும் நிலக்கடலை எளிதில் எடுத்துக் கொண்டு வளர்கிறது. குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஸ் உரம்.
- ஒரு வயலில் நிலக்கடலை சாகுபடி செய்துவிட்டு மீண்டும் அதே வயலில் நிலக்கடலை சாகுபடி செய்யும் போது அதன் பயிர் எச்சங்களை (குப்பைகளை) முழுமையாக அகற்ற வேண்டும் இல்லையெனில் அடுத்த பயிரில் வேர் அழுகல் அல்லது கழுத்து அழுகல் நோய் அதிகம் காணப்படும்.
- பொதுவாக நிலக்கடலை விதைகளை விதைப்பதற்கு தேவையான விதைகளை நாம் பயிரிட்ட பயிரிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது அதிகபட்சமாக நான்கு வருடங்களுக்கு மேல் மீண்டும் மீண்டும் அதே விதையை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அது குறிப்பிட்ட ரகத்தின் தரத்தை குறைக்கிறது, நோய் தாக்குதலை அதிகப்படுத்துகிறது மற்றும் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
- விதையை நிலத்தில் விதைப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாக மட்டும் விதை கடலையை உடைத்து பருப்புகளை எடுக்கவும். இல்லையெனில் முளைப்பு திறனில் பாதிப்பு ஏற்படும்.
- நடுத்தர அளவு உள்ள விதைகளை மட்டும் விதைக்க வேண்டும் அப்போதுதான் முளைப்பு திறன் மற்றும் செடிகளின் வளர்ச்சி ஒருமித்து காணப்படும். பெரிய விதைகளை விதைக்கும் போது அதில் வேர் வளர்ச்சி போதுமானதாக இருக்காது மற்றும் சிறிய விதைகளை விதைக்கும் போது முளைப்பு திறன் சிக்கல்கள் ஏற்படும்.
- நாம் பயிர்களுக்கு இடம் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்தினை சுமார் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவேண்டும். இந்த உரத்தினை மேலாக இடும் பொழுது விழுதுகள் போதுமான அளவு கால்சியம் சத்துக்களை எடுக்காமல் இருப்பதால் மகசூல் குறையும்.
- மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 இருக்க வேண்டும் இல்லையெனில் செடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது இதனால் செடிகள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும் அது மட்டுமின்றி நிலக்கடலை வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதால் மண்ணின் கார அமிலத்தன்மை 7 மேல் இல்லாமல் இருக்க வேண்டும்.
- மண்ணிற்கு தேவையான காற்றோட்ட வசதி, நிலக்கடலையின் விழுதுகள் நன்றாக வளர்வதற்கும் காய்கள் பிடிப்பதற்கும் மாற்றும் அதில் சொத்துக்கள் வராமல் இருப்பதற்கு தேவையான கால்சியம் சத்தை நாம் ஜிப்சம் வடிவில் தருகிறோம்.
- பூ பிடித்தலை ஊக்குவிக்க, ஒரே நேரத்தில் அதிக பூக்கள் பூப்பதை உறுதி செய்ய, பூக்கள் உதிராமல் இருத்தல் போன்றவற்றிற்கு டி ஏ பி கரைசல் இரண்டு சதவீதம் தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது உடன் பிளானோ பிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி என்ற வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
- ஜிப்சம் இடும் பொழுது அதை மேல் மண்ணில் மட்டும் இட வேண்டும் அதாவது 10 சென்டி மீட்டருக்கு மேல் ஆழமாக இட கூடாது. அவ்வாறு இட்டால் அதன் பயன் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது.
- வயலில் காணப்படும் பெரும்பான்மையான செடிகள் பூத்திருக்கும் தருணத்தில் ( விதைத்த 35 லிருந்து 40 நாட்கள்) ஜிப்சம் அதாவது கால்சியம் சல்பேட் இட வேண்டும்.
- போதுமான அளவு கால்சியம் சத்து கொடுத்தால் தான் சொத்தை கடலை வராமல் இருக்கும் அது மட்டுமின்றி ஜிப்சத்தில் இருக்கும் சல்பேட் நிலக்கடலையில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது.
- ஜிப்சம் நேரடியாக இலைகள் மீது பட்டால் இலைகள் எரிஞ்சது போன்று காணப்படும் இதனால் செடிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஜிப்சம் இட்டு மேல் மண்ணை சுமார் பத்து சென்டிமீட்டர் ஆழத்திற்கு கிளறி விட்டுப் பின்பு நீர் பாய்ச்ச வேண்டும்.
- நாம் விதைத்த ரகத்திற்கு ஏற்றவாறு நாற்பது முதல் 60 நாட்கள் இடைவெளியில் வயலில் காணப்படும் பெரும்பான்மையான பூக்கள் உதிர்ந்து விழுதுகள் நிலத்தை நோக்கி திரும்பும் தருணத்தில் கிழக்கு மேற்கு திசையில் ஒரு முறையும் தெற்கு வடக்கு திசையில் ஒரு முறையும் சுமார் 50 கிலோ மணலுடன் கூடிய ட்ரம்மை (drum) உருட்ட வேண்டும். உருட்டுவதற்கு முன்பு மிதமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- கடலை பயிரில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மற்ற ஊட்டச்சத்துக்களை விட இந்த மூன்றும் அதிகம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
- தலா நான்கு மடங்கு பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இரண்டு மடங்கு மெக்னீசியம் சத்துக்கள் நிலக்கடலைக்கு அத்தியாவசியமாகும்.
- ஏக்கருக்கு இரண்டு கிலோ போரான் சத்து இட வேண்டும். இது பூ பிடித்தலை அதிகரித்தல், ஒருமித்த பூப்பிடித்தல் திறன் மற்றும் கிழங்கு உருவாவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நிலக்கடலை பருப்பு உட்புறத்தில் காணப்படும் நிறம் மாற்றத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
- அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும் நிலத்தில் செடிகள் நன்கு வளர்வதை நாம் கவனிக்க இயலும் ஆனால் அதில் போதுமான அளவு பூ பிடித்தல் மற்றும் விழுதுகள் இறங்காது. அவ்வாறு இருக்கும் பயிர்களுக்கு வளர்ச்சியை தடை செய்யக்கூடிய வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும்.
- உதாரணத்திற்கு Cycocel/Maleic hydroxide ஏதேனும் ஒன்று தெளிக்க வேண்டும். இது செடி வளர்ச்சியை கட்டுப்படுத்தி பூ எடுத்தலை அதிகப்படுத்துகிறது.
- விழுதுகள் இறங்கி காய்கள் பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் இட வேண்டும். இது திரட்சியான காய்கள் பெற உதவி புரிகிறது.
- செடிகளை சுற்றி மண் அணைக்கும் போது செடிகளின் தண்டு பகுதி, கிளை பகுதி அல்லது இலைகள் மண்ணில் புதைய கூடாது அவ்வாறு புதைந்தால் அது பூஞ்சான நோய்கள் உருவாவதற்கு வழிவகை செய்யும்.
- இது மட்டும் இன்றி களைகளை கட்டுப்படுத்துதல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதால் நல்ல மகசூல் பெற முடியும்.