வாழையில் வாடல் (பனாமா/ Fusarium) நோயின் அறிகுறிகள்
|முன்னுரை:
- இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழ பயிரில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மொத்த பழங்களின் உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 40 சதவீதம் ஆகும். சந்தை மற்றும் ஏற்றுமதி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அரிசி, கோதுமை, பால் மற்றும் அதனைத் தொடர்ந்து வாழை திகழ்கிறது
- வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் காணப்பட்டாலும் விவசாயிகளுக்கு மிகவும் சவாலான ஒன்றாக பனாமா அல்லது Fusarium வாடல் நோய் திகழ்கிறது. இதனை பனாமா வாடல், வாஸ்குலர் வாடல் மற்றும் பனாமா நோய் என அழைக்கிறார்கள்.
- மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை, நோய் தீவிரம் மற்றும் சாகுபடி செய்யப்படும் ரகத்தினை பொறுத்து இதன் தாக்குதலால் சுமார் 40 முதல் 45 சதவீதம் வரை மகசூல் எப்படி ஏற்படுகிறது.
நோய் தாக்கும் பூஞ்சானத்தின் செயல்பாடுகள்:
- பனாமா வாடல் நோயை ஏற்படுத்தும் Fusarium oxysporum பூஞ்சானமானது மண்ணில் வாழ கூடியதாகும். இந்த வகை பூஞ்சானம் மண்ணில் பல வருடங்களுக்கு உறக்க நிலையில் காணப்படும்.
- எப்போது சாதகமான சூழ்நிலை மற்றும் செடிகளின் வேர் பகுதியில் காயங்கள் தென்படுகிறதோ அதன் வழியாக இதன் தாக்குதல் ஆரம்பமாகிறது.
நோய் பரவும் விதம்:
- இந்த பூஞ்சானமானது மண்ணில் வாழ்வதால் வாய்க்கால் வழியாக நீர் பாய்ச்சும் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.
- பண்ணையில் பயன்படுத்தும் உபகரணங்கள் வாயிலாகவும் நாம் பண்ணைப் பணி செய்யும் போதும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது. உதாரணமாக உழவு கலப்பை, மண்வெட்டி மற்றும் இதர...
- கன்றுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் களைகளை அகற்ற டிராக்டர் அல்லது பவர் டில்லர் போன்றவற்றை பயன்படுத்தும் போது இது வேர் பகுதியில் சேதத்தை ஏற்படுத்துகிறது. சேதம் அடைந்த வேர் வழியாகவும் இந்த பூஞ்சானம் நோயை ஏற்படுகிறது.
- இதைத் தவிர பாதிக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை நிலத்திலேயே விட்டு விடுவதால் அதன் மூலமாகவும் பரவுகிறது.
- வாழை கட்டைகளை வாங்கி நடவு செய்யும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் இதன் மூலமாக அதிகமாக பரவுகிறது வேறு வயலில் இருந்து கொண்டு வரப்படும் வாழை கட்டைகளை பூஞ்சான கொல்லி பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- பனாமா வாடல் நோய் பொதுவாக 4 முதல் 5 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய செடிகளை தான் தாக்குகிறது.
- ஒருவேளை தொடர்ச்சியாக ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றால் அந்தப் பயிர்களில் மூன்று மாத பயிர்களையும் இந்த பூஞ்சானம் தாக்கும்.
- நோயை தாக்கக்கூடிய பூஞ்சானங்கள் தாக்குதலின் தொடக்கத்தில் பயிர்களின் வேர்களை தாக்குகிறது. பின்னர் செடிகளின் கிழங்கு பகுதிக்கு சென்றடைகிறது. இதை நாம் எளிதில் கண்டறிய இயலாது.
- இதனால் வேர் மட்டும் கிழங்கு பகுதிகளின் உட் திசுக்களில் நிறம் மாற்றம் ஏற்படுகிறது.
- அடுத்தபடியாக இந்த பூஞ்சானங்கள் Pseudo-stem எனப்படும் தண்டுப் பகுதியை சென்றடையும். அங்கு தான் நோய் தாக்குதலின் ஆரம்ப நிலை அறிகுறிகள் நம் கண்களுக்கு தென்படும்.
- தண்டுப் பகுதியில் காணப்படும் வயதான வாழை உறையில் வெளிர் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டு திட்டாக நிறம் மாற்றம் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட மரங்களின் அல்லது செடிகளின் உண்ணக்கூடிய தண்டு பகுதியை வெட்டி பார்க்கும்போது அதில் நிற மாற்றம் காண இயலும் அதாவது இயல்பான நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு முதல் வெளிர் சிகப்பு நிற மாற்றத்தை காணலாம்.
- ஆரம்ப நிலையில் இலை காம்புகளின் அடிப்பகுதியில் வெளிர் பச்சை முதல் பழுப்பு நிற கோடுகள் காணப்படும். நாளடைவில் இலைக்காம்புகளுக்கு அடியில் காணப்படும் திசுக்கள் சிதைந்து சிகப்பு முதல் வெளிர் சிகப்பு நிறமாக மாறும்.
- வாஸ்குலர் திசுக்களை பாதிப்பதால் போதுமான நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செடிகளின் மேல் பகுதிகளுக்கு செல்வதில்லை.
- இதனால் செடிகளின் அடி இலைகளின் விளிம்புகளில் இருந்து மஞ்சள் நிற மாற்றம் இலைகளின் நடுப்பகுதி நோக்கி நகரும்.
- இவ்வாறு நிறமாற்றம் அடைந்த அடி இலைகள் ஒன்றன்பின் ஒன்றாக பழுப்பு நிறமாகி மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இலைகள் பிரியும் இடத்தில் ஒடிந்து தொங்கும்.
- இதனைப் பார்ப்பதற்கு புடவை கட்டியது போன்று தோன்றும்.
- நாம் எளிதில் காணக்கூடிய முதல் அறிகுறியாக தண்டின் அடிப்பாகத்தில் நீள் வட்ட வாக்கில் வெடிப்புகளை காண இயலும்.
- நோயின் தாக்குதல் தீவிரமடையும் போது அடி இலைகளிலிருந்து மேல் புறமாக இலைகள் காய்ந்து தொங்கும், நாளடைவில் வேர்கள், கிழங்கு பகுதி மற்றும் தண்டு பகுதியில் அழுகல் காணப்படும். கடைசியாக இரண்டு பகுதியில் முறிவு அல்லது செடிகள் வாடி இறந்துவிடும். அதனால் தான் இதனை வாடல் நோய் என்கிறார்கள்.
இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பல்வேறு வேளாண் தொடர்பான தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவின் இணைந்து பயன் பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக