google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழையில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 18 மார்ச், 2024

வாழையில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • ஒரே வயலில் தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வாழையை தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • கோடை காலத்தின் போது வயலை நன்கு ஆழமாக உழவு செய்து வயலில் உறக்கத்தில் இருக்கும்(40 வருடம் வரை கூட) பூஞ்சானங்களை அழிக்க முயற்சிக்கலாம்.
  • வாடல் நோய் தாக்குதலுக்கு மிகவும் உகந்த ரகங்களான கற்பூரவள்ளி, ரஸ்தாலி, சென்கதலி,மொந்தன், கதலி, பச்சலாடன் மற்றும் பல ரகங்கள் உள்ளன அவற்றை தொடர்ந்து பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பனாமா வாடல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம். உதாரணத்திற்கு பூவன், நேந்திரன், சக்கை மற்றும் ரோபஸ்டா.
  • வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வாழை கட்டை அல்லது கன்றுகள்  நோய் தாக்க வண்ணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இல்லையெனில் வாழை கட்டை அல்லது கன்றுகளை Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • இரசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம் பயன்படுத்தலாம். இதற்கு  கிழங்கு பகுதியை நன்றாக சுத்தம் செய்து அதனை களிமண் கரைசலில் நனைத்து பின்பு அதன் மேல் Carbofuran குருணையை தூவி விட்டு பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • கட்டை அல்லது கிழங்குகளை நடவு செய்யும் போது குழி ஒன்றிற்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதுடன் நூற் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சானம் மண்ணில் நீண்ட நாட்கள் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து விட்டு சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றுவதால் நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை கட்டுக்குள் வைக்கலாம்.
  • நடவு செய்யும் முன்னதாக இடப்படும் அடி உரத்தின் போது, போதுமான நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 3 கிலோ Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லியை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • நடவு செய்யப்பட்ட வயலில் பண்ணை பணிகளை மேற்கொள்ளும் போது செடிகளின் வேர்கள் பாதிப்படையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வாழைக் கட்டை அல்லது கன்றுகளை நடவு செய்த 45 முதல் 60 நாட்களுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை அதிகம் இடுவதால் அதன் உள்ள மூலக்கூறுகள் வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு தன்மையை பெறுகிறது.
  • களைகள் மற்றும் முந்தைய பயிர்களின் எச்சங்கள் வயலில் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்கவும்.
  • பண்ணை கருவிகளை பயன்படுத்தும் முன்பு நன்றாக சுத்தம் செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
  • நோய் தாக்குதலை தவிர்க்க Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லியை தலா 25 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • மேற்கண்ட வழிமுறையை நான்காம் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில்.
  • வாழை மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்வதால் நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts