நிலக்கடலையில் சிலந்திப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் உள்ளது. அதில் சில இடங்களில் 20 முதல் 30 நாட்கள் பயிராகவும் சில இடங்களில் 70 முதல் 80 நாட்கள் ஆன நிலையில் பயிர்கள் காணப்படுகிறது.
- நிலக்கடலையை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சிலந்திப்பேன் பூச்சி தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் நிலக்கடலையில் சிலந்திப்பேன் தாக்குதல் மிகவும் குறைவு. ஆனால் தொடர்ச்சியாக நிலவும் காலநிலை மாற்றத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தாக்குதலுக்கு தேவையான தகுந்த சூழ்நிலை:
- அதிகப்படியான வறட்சி நிலவுதல்
- அதிக வெப்பம் மற்றும் அதிக காற்று இருப்பது நிலவும் போதும்
- செடிகள் நீர் பற்றாக்குறையை சந்திக்கும்போது
- சாதகமான பயிர்கள் அருகில் சாகுபடி செய்யும் போதும் இதன் தாக்குதல் எளிதில் நிலக்கடலையை பாதிக்கிறது.
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
- சாறு உறிஞ்சும் பூச்சியான சிலந்திப்பேனில் பல்வேறு வகைகள் காணப்படுகிறது.
- அதில் மிகவும் பொதுவான ஒன்று Tetranychus இனமாகும். இந்த இனம் தான் நிலக்கடலையை பாதிக்கிறது.
- இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்படுகிறது. முட்டையில் இடப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்களில் இளம் புழுக்கள் தோன்றி பின்னர் மிகுந்த புழுக்களாக மாற்றமடைகிறது.
- இதன் மொத்த வாழ்நாள் அதிகபட்சமாக 18 லிருந்து 20 நாட்கள் ஆகும்.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
- சிலந்தி பேன்களின் Nymphs என்று கூறப்படுகிற இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலைகளின் அடி புறத்தில் சாறுகளை உறிஞ்சுவதால் இலையின் மேற்புறத்தில் மிகச் சிறிய வெண்மை நிற புள்ளிகள் காணப்படும்.
- தொடர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் இலையின் மேற்பரப்பில் மிக நெருக்கமான வெள்ளை நிற புள்ளிகள் தென்படும். மேலும் இலையின் கீழ்பகுதி வெளிர் சிகப்பு நிறத்தில் மாற்றமடையும்.
- இலையின் அடிப்பகுதி மற்றும் தண்டுப் பகுதியில் சிலந்தி பேன்களின் வலை பின்னல்கள் அதிகமாக காணப்படும்.
- இதனால் இலை மற்றும் செடிகள் குஷ்டம் வந்தது போல் தென்படும்.
- சாகுபடி பரப்பின் ஒரு பகுதியில் மட்டும் தென்படும் இவ்வகையான அறிகுறிகள் நாளடைவில் வேகமாக பரவும்.
- தீவிர நிலை தாக்குதலின் போது செடிகள் பழுப்பு நிற மாற்றத்துடன் சுருங்கிய இலைகள், இலை உதிர்வு, குன்றிய வளர்ச்சி, வலை பின்னல்கள் என பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படக்கூடிய சிலந்தி பேனை தாங்கி வளரக்கூடிய ரகங்கள் கிடையாது.
- கோடைகாலத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள போதுமான நீர் வசதி வேண்டும் இல்லை எனில் தவிர்க்கலாம்.
- பொதுவாக 50 நாட்களுக்கு மேற்பட்ட செடிகள் எளிதில் சிலந்திப்பேன் தாக்குதலுக்கு உட்படுவதால் கோடை பருவத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ பயிரிடலாம்.
- கோடை பருவத்தில் பயிரிடும் போது போதுமான காற்றோட்ட வசதி இருக்குமாறு பயிர் இடைவெளி விட வேண்டும்.
- தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் உகந்தது.
- பயிர்களை அல்லது சாகுபடி நிலத்தை மிகவும் வறட்சி நிலைக்கு விடாமல் அவ்வப்போது நீர் பாய்ச்சவும்.
- நிலத்தை தொடர்ச்சியாக வயல் ஆய்வு செய்து இலைகளின் அடிப்பகுதியில் பூச்சி தாக்குதல் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அப்புறப்படுத்தவும்.
- வயலில் வேட்டையாடும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட கவர்ச்சி பொறி பயிர்கள் பயன்படுத்தலாம்.
- பேன் தாக்குதலின் ஆரம்ப நிலையின் போது Bacillus மற்றும் verticillum போன்ற உயிர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
- வேப்ப எண்ணெய் 10 லிட்டர் தண்ணீருக்கு மூன்று முதல் ஐந்து மில்லி என்ற விதத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
- கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளை ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
Spiromesifen -3 ml/ lit water |
|
Abamectin - 7 ml/ lit water |
|
Hexythiazox - 1 ml/ lit water |
|
Chlorfenapyr - 1 ml/ lit water |
|
Fenpropathrin - 5 ml/ lit water |
|
Spirotetramat - 1 ml/ lit water |
|
Propargite - 1 ml/ lit water |
|
Fenpyroximate - 3 ml/ lit water |
மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp இருந்து பயன்படுத்தலாம்...
0 Comments:
கருத்துரையிடுக