google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 12 டிசம்பர், 2023

லாபகரமான எண்ணெய் பனை சாகுபடி

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாக கொண்ட எண்ணெய் பனை சிவப்பு எண்ணெய் பனை எனவும் அழைக்கப்படுகிறது. தற்பொழுது இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்தல் விவசாயிகளுக்கு         எவ்வாறு லாபகரமான பயிராக திகழ்கிறது:

  • எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் தற்சமயம் குறைந்த செலவில் தோட்டம் அமைக்க சரியான தருணம் இது.
  • ஊடு பயிர் செய்தல் மற்றும் பராமரிப்பிற்கும் அரசிடமிருந்து போதுமான சலுகைகள் தற்பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
  • விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் இதன் இடுபொருள்களை சார்ந்து இயங்கக்கூடிய தொழில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
  • எண்ணெய் பனை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை நோக்கி பயணிப்பதால் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சமையல் எண்ணெய் கிடைக்கப்பெறும்.
  • விவசாயிகள் இதனை முதன்மை பயிராகவும் மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஊடுபயிர் செய்வதால் வருமானம் இரட்டிப்பாகும்.
  • பெரிய விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் செய்திட ஏதுவானதாக எண்ணெய் பனை திகழ்கிறது.
  • குறைந்தபட்ச ஆதார விலை போன்று இந்தப் பயிருக்கு VGF-Viability Gap Funding என்ற முறையில் ஆதார விலை கிடைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே இப்பயிரினல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • 30 வருடங்கள் வரை குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.
இவற்றையெல்லாம் எவ்வாறு நேரடியாக உறுதி செய்வது:
  • சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தில் மட்டும் கீழ்க்கண்ட இனங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் தரமான எண்ணெய் பனை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
  • ஊடு பயிர் செய்வதற்கும் பராமரிப்பு மேற்கொள்வதற்கும் மானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விதைத்தோட்டம் மற்றும் நாற்றங்கால்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைத்திடவும், மழை நீர் சேகரிப்பு குளங்கள் வெட்டிடவும் மானியம் தரப்படுகிறது.
  • மண்புழு உர கூடாரங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் உதவுகிறது.

  • இதைத் தவிர பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல இனங்களில் அரசு உதவி புரிகிறது.

அரசின் உதவிக்கரம் நீட்டப்படுமா? எண்ணெய் பனை லாபகரமான பயிர் தான் என்பதை உறுதி செய்திட சில மறைமுக அதிகாரப்பூர்வ தகவல்கள்:
 

  • சமையல் பயன்பாட்டிற்கு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனவே இதன் தேவை எப்பொழுதும் குறைய போவதில்லை.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் எண்ணெய் பனைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய்யின் பயன்பாடு சுமார் 55 லிருந்து 60% ஆகும். பயன்பாட்டின் சதவீதம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
  • பல்லாண்டு எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் அதிகமாக மகசூல் தரக்கூடியது இப்பயிராகும்.
  • இந்தியாவின் ஆண்டு பாமாயில் எண்ணெய் தேவை சுமார் 250 லட்சம் டன் உள்ளது.
  • தற்பொழுது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 125 முதல் 130 லட்ச டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள தேவைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது இதன் சராசரி மதிப்பு சுமார் 80000 கோடியாகும். எனவே இதன் தேவை குறைந்தாலும் மதிப்பு குறைய போவதில்லை.
  • மேலும் மறைமுகமாக பாமாயில் பல்வேறு எண்ணெய்களில் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
  • 2015- 16 ஆண்டுகளில் இந்தியாவில் வசிக்கும் தனி நபருக்கு ஆண்டுக்கு 19.10 கிலோ வரை பாமாயில் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது இது 18 புள்ளி 20 கிலோவாக குறைந்துள்ளது. எனவே சாகுபடி செய்வது லாபகரமானது.
  • பாமாயிலில் உள்ள Vit-A, Oleic acid, Linoleic acid மற்றும் Beta carotene சரியான அளவில் பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு உகந்ததே ஆகும்.
  • இது மட்டும் அல்லாமல் எண்ணெய் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது சோப்பு, சலவை பவுடர், தலைக்கழுவு உதவும் நீர்மம், அழகு சாதன பொருட்கள் மற்றும் சில நாடுகளில் பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது.
  • இவைகளின் தேவையை உணரும் போது குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதால் இப்பயிரை சாகுபடி செய்தல் முக்கியமானதாகும். சுமார் 4-5 டன் பாமாயில் மற்றும் 0.4-0.5 டன் எண்ணெய் பனை கர்னல் எண்ணெய் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறலாம்.
  • மற்ற எண்ணெய் வித்து பயிர்களை விட இதில் சுமார் ஐந்து மடங்கு அதிகமான விளைச்சல் பெறப்படுகிறது. எனவே அரசு இப்பயிரை ஊக்குவிப்பதில் தவறில்லை.

கவனிக்கப்பட வேண்டியவை:

  • தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • இப்பயிரின் நீர் தேவை சற்று அதிகம் அதாவது 200 - 300 லிட்டர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
  • நடவு செய்த 3-4 வருடங்களுக்கு மகசூல் பெற இயலாது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் காய்ப்பு திறன் மிகவும் முக்கியமானதாகும்.
  • வளமான செடிகளை உருவாக்கிட முதல் மூன்று வருடங்களுக்கு பயிரில் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும்.
  • சந்தைப்படுத்துதல்.

மேற்கொள்ளப்பட வேண்டியவை:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக கன்றுகளை பெறும் போது அவற்றின் தரம் உறுதியானதாக இருக்கும்.
  • பயிரின் நீர் தேவையை சரியாக பூர்த்தி செய்திட சொட்டுநீர் பாசனத்தை அமைத்து சரியாக பராமரித்தால் மட்டுமே போதுமானதாகும்.
  • இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு ஊடு பயிர் செய்திட உதவுகிறது.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு பண்ணையில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் வண்டுகளை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதை சரியான முறையில் மேற்கொள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம்.
  • அரசு, விவசாயி மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை:

இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இதன் பயன்பாட்டினை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கும் போதும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போதும் மேலும் கிடைக்கப்பெறும் கிடைக்கபெறும் தகவல்களை கூர்ந்தாய்வு செய்யும்போதும் எண்ணெய் பனை சாகுபடி செய்தல் ஒரு லாபகரமான பயிராகவே கருதப்படுகிறது.

திங்கள், 11 டிசம்பர், 2023

கத்தரியில் இலை உண்ணும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை

கத்தரியில் இலை உண்ணும் ஹட்டா (Hadda) வண்டு : 

காய்கறி பயிர்களின் அரசன் என அழைக்கப்படும் கத்தரியானது தெற்காசிய நாடுகளில் மிகவும் முக்கியமான காய்கறி பயிராக கருதப்படுகிறது.
இந்தியாவில ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் எக்டர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தியில் ஏற்படும் பல்வேறு பூச்சி தாக்குதல்களில் மிகவும் முக்கியமானதாகவும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இது திகழ்கிறது. இப்புழுத் தாக்குதலால் மகசூல் இழப்பு சுமார் 30 முதல் 70% வரை ஏற்படுகிறது.

உகந்த பயிர்கள்:

வெள்ளரி, சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் மற்றும் முலாம்பழம்.  

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை

-

மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகள் இலையின் அடிப்புறத்தில் கொத்தாக காணப்படும். இதன் ஆயட்காலம் 3-4 நாட்கள்.

முட்டை புழுக்கள்

-

வெளிர் மஞ்சள் முட்டைப்புழுக்கள் முதுகுப்புறத்தில் அடர் மஞ்சள் முதல் இளஞ்சிவப்பிலான நிறத்தில் கூர்மையான முள் போன்ற அமைப்புடன் காணப்படும். இதன் ஆயுட்காலம் 10-15 நாட்கள்.

கூட்டுப்புழு  

-

இலையின் அடிப்புறம் அல்லது மண்ணில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 3-4 நாட்கள்.

வண்டு

-

சற்று நீள்வட்ட வடிவில் மந்தமான பழுப்பு முதல் சிகப்பு நிறத்தில் காணப்படும். இதன் முதுகு பகுதியில் 28 கரும்புள்ளிகள் இருக்கும்.

அறிகுறிகள்  

  • இலையின் மேற்பகுதியில், இலை நரம்புகளுக்கிடையே காணப்படும் பச்சையத்தை உண்ணும்.

  • இலைகள் எலும்பு கூடு போல் காட்சியளிக்கும்

  • இதனால் செடிகள் போதுமான உணவை உற்பத்தி செய்ய இயலாமல் குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகள் நாளடைவில் உதிர ஆரம்பிக்கும்.

  • பூ மற்றும் காய்ப்பிடிப்பு திறன் குறையும்.

  • காய்களின் மீது ஆழமில்லாத துளைகள் காணப்படும்.

  • கடுமையான இலை உதிர்வு மற்றும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இரககங்களை தேர்வு செய்து பயிரிடுதல்.

  • நல்ல நீர்ப்பாசனம் செய்வதால் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கலாம்.

  • அடுப்பு சாம்பலை ஆரம்ப கால கட்டத்தில் தெளிப்பதால் தாக்குதலை குறைக்கலாம்.

  • முட்டை, முட்டைப்புழு மற்றும் வண்டுகள் காணப்படும் இலைகளை சேகரித்து அப்புறப்படுத்துவதால் பூச்சி தாக்குதல் குறைக்கப்படும்.

  • நீரினால் செடிகளை நன்கு நனைப்பதால் செடிகளில் உள்ள பூச்சிகளின் பல்வேறு பருவநிலை மண்ணிற்கு சென்றடையும். பின்பு எக்டருக்கு 5 கிலோ குளோரிபைரிபாஸ் குருணைகளை தெளித்து நீர்பாய்ச்சுவதால் 60-70 % வரை பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

  • கத்தரி, சுரை, பூசணி மற்றும் பரங்கி போன்ற பயிர்களை தொடர்ந்து செய்வதை தவிர்க்கவும்.

  • விளக்குபொறி 2 எண்கள்/ எக்டர் என்ற எண்ணிற்கு வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். 

  • ஏக்கருக்கு 10 எண்கள் பறவை கூடுகள் வைப்பதால் வண்டுகளை அழிக்கலாம். மற்றும் முட்டைப் புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

  • ஒட்டுண்ணி குழவிகளை பயன்படுத்துவதால் இவ்வண்டுகளை அழிக்கலாம்.

  • உயிரியல் பூச்சிகொல்லிகளான பேசில்லஸ், துரிஞ்ஜின்சியஸ் (பாக்டீரியா) அல்லது ஆஸ்பெர்ஜில்லஸ் பூஞ்சாணத்தைத் தெளிக்கலாம்.

  • ஆமணக்கு எண்ணெய் + எருக்கு இலைச்சாறு  + கரு ஊமத்தை இலைச்சாறை கலந்து தெளிப்பதால்  நல்ல பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

  • வேப்ப எண்ணெய் 1 லி. + 60 கி சலவை பவுடர்  + 400 கி நொறுக்கப்பட்ட பூண்டு ஆகியவற்றில் 20 லி. தண்ணீர் கலந்து பயன்படுத்துதல் நல்ல பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

  • கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.

  1. Neem oil- 1500 ppm - 1-1.5ml /1 lit  

  2. NSKE 5% - 3ml/lit. 

  3. Beauveria bassiana, Metarhizium anisopliae - 5-10 ml/lit  

  4. Bacillus thuringiensis Var. Kurstaki - 3-5 ml/lit. of water.

  5. Deltamethrin - 1-1.5ml /1 lit. 

  6. Cypermethrin - 1-1.5ml /1 lit.  

  7. Quinalphos -2 ml/1 lit.

  8. Dimethoate -1.5 ml/1 lit.

  9. Emamectin benzoate -1g/1 lit.

  10. Thiodicarb -0.7 g/1 lit.




           

   

சனி, 9 டிசம்பர், 2023

வாழையில் சாம்பல் சத்து உர மேலாண்மை

வாழையில் சாம்பல் சத்து மேலாண்மை : 

வாழை இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழ பயிர்களில் முக்கியமான ஒன்றாகும். சுமார் 4முதல் 5 எக்டர் நிலப்பரப்பில் இந்தியாவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழை சாகுபடியில் சாம்பல் சத்தின் பங்கு இன்றியமையதாதாகும்.

எக்டர் ஒன்றிற்கு சுமார் 1500 கிலோ வரை சாம்பல் சத்து தேவைப்படுகிறது. இயற்கையாக இந்தியாவில் காணப்படும் பல்வேறு மண் வகைகளில் சாம்பல் சத்து போதுமானதாக காணப்பட்டாலும் பல்வேறு மண் மற்றும் சாகுபடி தொழில்நுட்ப காரணங்களால் சாம்பல் சத்து பயிர்களுக்கு கிடைக்கப்பெறுவது இல்லை.

இரசாயன பொட்டாஷ் (Chemical Potash) எளிதில் கரையக் கூடியதாகவும் பயிர்கள் விரைவில் எடுத்துக் கொள்ள கூடியதாகவும் திகழ்கிறது. இருப்பினும் மண்ணில் இருப்பதால் ஏற்படும் வேதியல் நிகழ்வுகளால்  பொதுவாக கரையகூடியதாக மாறுகிறது.

சாம்பல் சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • செடிகளின் அடிப்பகுதியில் காணப்படும் இலைகள் சற்று ஆரஞ்சு முதல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.

  • இந்த இலைகள் சற்று நீர் பற்றாக்குறையால் துவண்டு குருங்கி காட்சியளிக்கும்.

  • நாளடைவில் இலையின் பரப்பளவு மற்றும் ஆயுட்காலம் குறைவதால் வளர்ச்சி பாதிப்படையும்.

  • இலையின் நுனிப்பகுதி கீழ்வாட்டில் வளையும்.

  • இலைகளின் ஓரங்களில் கருகுதல்.

  • இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு மட்டும் பொட்டாஷ் குறைபாட்டினால் பூவைத் தாமதப்படுத்துதல்.

  • மகசூல் குறைவு ஏற்படும்.

  • பழங்களில் தரம் சற்று குறைவாகவே காணப்படும்.

  • வாழை பழங்களின் வடிவம் சற்று மாறுபட்டு இருக்கும்.

  • தார்களில் வாழை காய்கள் சரியாக நிரப்பப்படாமல் இருக்கும்.

  • நடுநரம்புகள் வளைந்து முறிவதால் இலைக்காம்பு இலையின் பாதியில் தொங்கும்.

  • இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் ஊதா முதல் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.

  • நாளடைவில் இப்புள்ளிகள் சிதைந்து இலைகள் மடியும்.

இதர குறைபாடுகள் :

  • N, P, Ca, Mg, Na, Cu  மற்றும் Zn மண்ணிலிருந்து செடிகளுக்கு எடுத்து செல்ல உதவுவது பொட்டாசியம் ஆகும். பொட்டாசியம் குறைப்பாட்டினால் மேற்கண்ட ஊட்டச்சத்துகள் போதுமான அளவு சென்றடைவதில்லை. 

  • வாழை தார்களின் வளர்ச்சி மற்றும் எடை குறைந்தே காணப்படும். 50% வரை கட்ட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

  • பொட்டாசியம் குறைபாடு பயிர்களின் சுவாதித்தல் நிகழ்வை மட்டுப்படுத்துவதால் வாழை உற்பத்தி திறன் குறைகிறது.

  • இதனால் நேரடியாக வாழை தார்களின் எடை குறைகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • செடி ஒன்றிற்கு மண்ணின் தன்மையை பொருத்து சுமார் 600-1500 கி பொட்டாசியம் இட வேண்டும்.

  • இதனை 3 முதல் 4 தவணைகளில் இடுவதால் ஊட்டச்சத்து இழப்பு தவிர்க்கப்படுகிறது.

  • தவணை முறையில் உரமிடும்போது 8 மாதங்களுள் மொத்த உர அளவீட்டை இடுதல் வேண்டும்.

  • கடைசி தவணையின் போது தேவையான மெக்னீசயம் மற்றும் சல்பேட் உரங்களை கலந்து இடுவதால் தார்களின் எடை கூடுவதுடன் பழங்களின் சுவை அதிகரிக்கும்.

  • நன்கு மட்கிய தொழு உரங்களை கடைசி உழவின் போது ஏக்கருக்கு 8-10 டன்களை இடுதல் வேண்டும்.

பப்பாளியில் உச்சி மற்றும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

 

பப்பாளியில் பைட்டோப்தோரா கிரிடம்/ உச்சி மற்றும் வேர் அழுகல்

பைட்டோப்தோரா இனத்தில் உள்ள பல்வேறு வகையான மண்ணில் பரவும் நோய்க்கிரிமிகள் கிரிடம் (Crown)  மற்றும்  வேர் அழுகல் நோயை ஏற்படுத்துகிறது.

பைட்டோப்தோரா பால்மியேரா மற்றும் நிக்கோட்டியானே இவற்றின் முதன்மை நோய்க் கிருமிகளாகும். இவ்வகை பைட்டோப்தோரா பப்பாளி சாகுபடி செய்யப்படும் அநேக இடங்களில் காணப்படுகிறது.

நோய்த் தாக்கும் சூழ்நிலை :

  • அதிகப்படியான மண் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் இந்நோய் தாக்குதலுக்கு உகந்தது.
  • பாதிக்கப்பட்ட விதை / செடிகளை நடவு செய்வது.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி பயிரிடுவது.

பாதிக்கப்படும் மற்ற பயிர்கள் :

மிளகாய், பூசணி, திராட்சை, முலாம்பழம், பாகற்காய் மற்றும் இதர.

அறிகுறிகள்  

  • செடிகள், இலையின் காம்புகள் மற்றும் இலைகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

  • இலைகள் அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.

  • குறைந்த பூ மற்றும் காப்புத் திறன்.

  • தரைமட்ட அளவில் தண்டுகளில் வெண்ணிற பூஞ்சாணங்கள் காணப்படும்.

  • காய் மற்றும் கனிகளில் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டுக்களாக நோய் பூஞ்சாணத்தை காணலாம். நாளடைவில் இவை அழுகிய நிலையில் விழும். இவ்வகை அறிகுறி முதலில் முதிர்ந்த காய்களிலிருந்து பின்பு பிஞ்சுகளுக்கு பரவும்.

  • தரை மட்ட அளவில் தண்டுகளில் புண்கள்/ சொறி போன்று காணப்படும். நாளடைவில் இவை பெரிதாகி அழுகி முறிந்து விழும்.

  • பகுதியாக பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டுகளில் ஒருபுறம் அழுகியும் மறுபுறம் நன்றாகவும் தென்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • கோகோ சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலங்களுக்கு அருகில் பப்பாளி பயிரிடுவதை தவிர்க்கவும்.

  • சரியான நீர்பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதியுள்ள நிலத்தை தேர்வு செய்து பயிரிடவும். 

  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி பயிரிடுவதை தவிர்க்கவும்.

  • பப்பாளி விதைகள் / நாற்றுகளை ஆநவயடயஒலட அல்லது சூடோமோனஸ் கொண்டு நேர்த்தி செய்து பின்பு நடவு மேற்கொள்ளவும். 

  • டிரைக்கோடெர்மா மற்றும் பேசில்லஸ்ஸை கலந்து தொழு உரங்களை ஊட்டமேற்றி அடியுரமாக இடுவதால் தாக்குதல் மட்டுப்படுத்தப்படுகிறது.

  • நடவு செய்த ஒரு மாத காலங்களிலிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை டிரைக்கோடெர்மா ஹர்சியானம்  கலந்து வேரில் ஊற்றுவதால் தாக்குதல் குறைக்கப்படும்.

  • உதிர்ந்த இலைகள், பழங்கள் சாய்ந்த மரங்களை சேகரித்து அழிக்கவும்.

  • நுனி குருத்துகள் வாடி பின்பு செடிகள் இறந்துவிடும்.

  • தழைச்சத்து உர பயன்பாட்டினை குறைத்து நுண்ணூட்டசத்துகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதால் பயிர்கள் எதிர்ப்பு சக்தி பெறும்.

  • வயல்களை சுத்தமாக பராமரித்தால் நோய்த் தாக்குதலை தவிர்க்கலாம்.

  • கீழ்க்காணும் பூஞ்சாணங் கொல்லிகள் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் பயன்படுத்துவதால் பரவுதல் தடுக்கப்படுகிறது.


1.Copper hydroxide–500 g/acre.

2.Copper hydroxide + Metalaxyl -250g/acre.

3. Metiram+Pyraclostrobin–600 g/acre.

4.Chlorothalonil – 250g/ ace.

5.Azoxystrobin(300g)+Metalaxyl(250g)- 1acre.

6. Fosetyl AIuminium-250g/ acre.

7. Thiophenate Methyl – 250g / acre.


               

   

வெள்ளி, 8 டிசம்பர், 2023

வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்


வெங்காயத்தில் இலைப்பேன் : 

சின்ன வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடம் வகித்து வருகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் உற்பத்தியில் மிகவும் சவாலான சாறு உறிஞ்சு பூச்சிகள் திகழ்கிறது.  

வாழ்க்கைச் சுழற்சி :

முட்டை

-

வெள்ளை முதல் மஞ்சள் நிறத்தில் சிறுநீரக வடிவில் காணப்படும். இதன் வாழ்நாள் சுமார் 5-10 நாட்கள் இருக்கும்.

புழு

-

இவை வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் நிறத்திலும்,  நீளமான மெல்லிய உடலுடன் முதிர்ந்த பேன் போன்று காணப்படும். 10 முதல் 14 நாட்கள் வரை நீடித்து இருக்கும்.

கூட்டுப்புழு

-

வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் மண் அல்லது கிழங்குகளின் கழுத்துப்பகுதி காணப்படும். இதன் ஆயுட்காலம் 5-10 நாட்கள் இருக்கும்.

முதிர்ந்த பூச்சி

-

பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் மெல்லிய உடலுடன் விளிம்பு இறக்கைகளுடன் காணப்படும்.

அறிகுறிகள்  

  • இலைப் பேன்கள் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் ஆங்காங்கே வெண்ணிறத் திட்டுக்கள் காணப்படும். 

  • நாளடைவில் இத்திட்டுக்கள் விரிவடைவதால் ஒளிச்சேர்க்கை குறைக்கப்படுவதுடன் பிற நோய்த் தாக்குதல்களுக்கு உந்து கோலாக அமைகிறது. 

  • பின்னர் இலைகள் வெளிர் முதல் பழுப்பு நிறத்திற்கு மாற்றமடைவதுடன் இலைகளின் நுனியிலிருந்து ஊதுபத்தி சாம்பல் போன்று பச்சையம் இன்றி காணப்படும்.

  • இலைகள் மற்றும் கிழங்குகளின் வளர்ச்சி குன்றி காணப்படும். 

  • தளிர்களின் அடிப்பாகத்தில் பேன்கள் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட கருப்பு நிற சாணங்களுடன் காணப்படும்.

  • மகசூலை குறைப்பதுடன் அறுவடை பின் சேமிப்பு நாட்களை குறைக்கும்.

  • 25 முதல் 45%  வரை இழப்பீட்டை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • எதிர்ப்பு சக்தி வாய்ந்த இரககங்கள் பயன்படுத்துதல்

  • சரியான இடைவெளியில் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இலைப்பேன்கள் பரவுதல் வீதம் மாறுபடும். 

  • தழைச்சத்து உரங்களின் பயன்பாட்டை குறைப்பதுடன் சாம்பல் சத்து உரங்களை அதிகப்படுத்துதல் அவசியம்.

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் தாவர குப்பைகள் மற்றும் களைகளை அகற்றுவதுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.

  • ஆரம்பகால தாக்குதலின் போது நீல நிற ஒட்டுப் பொறிகளை நிறுவி விட்டு தெளிப்பான்கள் மூலம் நீரை தெளிக்கும்போது பெரும்பாலான பேன்கள் ஒட்டும் பொறிகளில் சிக்கி இறந்து விட வாய்ப்புகள் அதிகம்.

  • தெளிப்புநீர் பாசனத்தில் நீர் பாய்ச்சுவதனால் இலைப் பேன்கள் பரவுதல் மட்டுப் படுத்தப்படுகிறது.

  • நெருக்கு நடவு, ஒரே பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்தல் மற்றும் தக்காளி, வெள்ளரி, பரங்கி, தர்பூசணி போன்ற பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்கவும். 

  • விதை கிழங்குகளை விதைப்பதற்கு 30 நாட்கள் முன்பே வயலைச் சுற்றி இரண்டு வரிசையில் மக்காச்சோளத்தை தடுப்பு பயிராக பயிரிடுவதால் 80% வரை பூச்சித் தாக்குதலின் பரவுதல் தடுக்கப்படும். 

  • போதுமான பயிர் இடைவெளி, நிலப்போர்வை பயன்படுத்துதல், பூண்டுக் கரைசலுடன் ஒரு பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துதல் மற்றும் வேப்ப எண்ணெய் 5% தௌித்தல் போன்ற ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை பயன்படுத்தலாம்.

  • Spinosad - பூச்சிக் கொல்லியை பயன்படுத்தினால் நன்மை பயக்கும் இயற்கை பூச்சி விழுங்கிகளின் நடமாட்டம் குறையும். 

  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

  1. Spinosad - 0.5 ml/1 lit. 

  2. Lambda cyhalothrin - 2.5 ml/ 1 lit.

  3. Fibronil - 1-2 ml / 1 lit.

  4. Quinalphos - 1-2.5 ml/ 1 lit.

  5. Actamapride + Imidacloprid - 1 ml/1 lit.

  6. Spirotetramet + Imidacloprid -1 ml/1 lit

Recent Posts

Popular Posts