வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
|வெங்காயத்தில் இலைப்பேன் :
சின்ன வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடம் வகித்து வருகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் உற்பத்தியில் மிகவும் சவாலான சாறு உறிஞ்சு பூச்சிகள் திகழ்கிறது.
வாழ்க்கைச் சுழற்சி :
அறிகுறிகள்
இலைப் பேன்கள் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் ஆங்காங்கே வெண்ணிறத் திட்டுக்கள் காணப்படும்.
நாளடைவில் இத்திட்டுக்கள் விரிவடைவதால் ஒளிச்சேர்க்கை குறைக்கப்படுவதுடன் பிற நோய்த் தாக்குதல்களுக்கு உந்து கோலாக அமைகிறது.
பின்னர் இலைகள் வெளிர் முதல் பழுப்பு நிறத்திற்கு மாற்றமடைவதுடன் இலைகளின் நுனியிலிருந்து ஊதுபத்தி சாம்பல் போன்று பச்சையம் இன்றி காணப்படும்.
இலைகள் மற்றும் கிழங்குகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
தளிர்களின் அடிப்பாகத்தில் பேன்கள் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட கருப்பு நிற சாணங்களுடன் காணப்படும்.
மகசூலை குறைப்பதுடன் அறுவடை பின் சேமிப்பு நாட்களை குறைக்கும்.
25 முதல் 45% வரை இழப்பீட்டை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
எதிர்ப்பு சக்தி வாய்ந்த இரககங்கள் பயன்படுத்துதல்
சரியான இடைவெளியில் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இலைப்பேன்கள் பரவுதல் வீதம் மாறுபடும்.
தழைச்சத்து உரங்களின் பயன்பாட்டை குறைப்பதுடன் சாம்பல் சத்து உரங்களை அதிகப்படுத்துதல் அவசியம்.
தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் தாவர குப்பைகள் மற்றும் களைகளை அகற்றுவதுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்பகால தாக்குதலின் போது நீல நிற ஒட்டுப் பொறிகளை நிறுவி விட்டு தெளிப்பான்கள் மூலம் நீரை தெளிக்கும்போது பெரும்பாலான பேன்கள் ஒட்டும் பொறிகளில் சிக்கி இறந்து விட வாய்ப்புகள் அதிகம்.
தெளிப்புநீர் பாசனத்தில் நீர் பாய்ச்சுவதனால் இலைப் பேன்கள் பரவுதல் மட்டுப் படுத்தப்படுகிறது.
நெருக்கு நடவு, ஒரே பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்தல் மற்றும் தக்காளி, வெள்ளரி, பரங்கி, தர்பூசணி போன்ற பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
விதை கிழங்குகளை விதைப்பதற்கு 30 நாட்கள் முன்பே வயலைச் சுற்றி இரண்டு வரிசையில் மக்காச்சோளத்தை தடுப்பு பயிராக பயிரிடுவதால் 80% வரை பூச்சித் தாக்குதலின் பரவுதல் தடுக்கப்படும்.
போதுமான பயிர் இடைவெளி, நிலப்போர்வை பயன்படுத்துதல், பூண்டுக் கரைசலுடன் ஒரு பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துதல் மற்றும் வேப்ப எண்ணெய் 5% தௌித்தல் போன்ற ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை பயன்படுத்தலாம்.
Spinosad - பூச்சிக் கொல்லியை பயன்படுத்தினால் நன்மை பயக்கும் இயற்கை பூச்சி விழுங்கிகளின் நடமாட்டம் குறையும்.
கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
Spinosad - 0.5 ml/1 lit.
Lambda cyhalothrin - 2.5 ml/ 1 lit.
Fibronil - 1-2 ml / 1 lit.
Quinalphos - 1-2.5 ml/ 1 lit.
Actamapride + Imidacloprid - 1 ml/1 lit.
Spirotetramet + Imidacloprid -1 ml/1 lit
0 Comments:
கருத்துரையிடுக