google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழையில் சாம்பல் சத்து உர மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 9 டிசம்பர், 2023

வாழையில் சாம்பல் சத்து உர மேலாண்மை

வாழையில் சாம்பல் சத்து மேலாண்மை : 

வாழை இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழ பயிர்களில் முக்கியமான ஒன்றாகும். சுமார் 4முதல் 5 எக்டர் நிலப்பரப்பில் இந்தியாவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழை சாகுபடியில் சாம்பல் சத்தின் பங்கு இன்றியமையதாதாகும்.

எக்டர் ஒன்றிற்கு சுமார் 1500 கிலோ வரை சாம்பல் சத்து தேவைப்படுகிறது. இயற்கையாக இந்தியாவில் காணப்படும் பல்வேறு மண் வகைகளில் சாம்பல் சத்து போதுமானதாக காணப்பட்டாலும் பல்வேறு மண் மற்றும் சாகுபடி தொழில்நுட்ப காரணங்களால் சாம்பல் சத்து பயிர்களுக்கு கிடைக்கப்பெறுவது இல்லை.

இரசாயன பொட்டாஷ் (Chemical Potash) எளிதில் கரையக் கூடியதாகவும் பயிர்கள் விரைவில் எடுத்துக் கொள்ள கூடியதாகவும் திகழ்கிறது. இருப்பினும் மண்ணில் இருப்பதால் ஏற்படும் வேதியல் நிகழ்வுகளால்  பொதுவாக கரையகூடியதாக மாறுகிறது.

சாம்பல் சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • செடிகளின் அடிப்பகுதியில் காணப்படும் இலைகள் சற்று ஆரஞ்சு முதல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.

  • இந்த இலைகள் சற்று நீர் பற்றாக்குறையால் துவண்டு குருங்கி காட்சியளிக்கும்.

  • நாளடைவில் இலையின் பரப்பளவு மற்றும் ஆயுட்காலம் குறைவதால் வளர்ச்சி பாதிப்படையும்.

  • இலையின் நுனிப்பகுதி கீழ்வாட்டில் வளையும்.

  • இலைகளின் ஓரங்களில் கருகுதல்.

  • இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு மட்டும் பொட்டாஷ் குறைபாட்டினால் பூவைத் தாமதப்படுத்துதல்.

  • மகசூல் குறைவு ஏற்படும்.

  • பழங்களில் தரம் சற்று குறைவாகவே காணப்படும்.

  • வாழை பழங்களின் வடிவம் சற்று மாறுபட்டு இருக்கும்.

  • தார்களில் வாழை காய்கள் சரியாக நிரப்பப்படாமல் இருக்கும்.

  • நடுநரம்புகள் வளைந்து முறிவதால் இலைக்காம்பு இலையின் பாதியில் தொங்கும்.

  • இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் ஊதா முதல் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.

  • நாளடைவில் இப்புள்ளிகள் சிதைந்து இலைகள் மடியும்.

இதர குறைபாடுகள் :

  • N, P, Ca, Mg, Na, Cu  மற்றும் Zn மண்ணிலிருந்து செடிகளுக்கு எடுத்து செல்ல உதவுவது பொட்டாசியம் ஆகும். பொட்டாசியம் குறைப்பாட்டினால் மேற்கண்ட ஊட்டச்சத்துகள் போதுமான அளவு சென்றடைவதில்லை. 

  • வாழை தார்களின் வளர்ச்சி மற்றும் எடை குறைந்தே காணப்படும். 50% வரை கட்ட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

  • பொட்டாசியம் குறைபாடு பயிர்களின் சுவாதித்தல் நிகழ்வை மட்டுப்படுத்துவதால் வாழை உற்பத்தி திறன் குறைகிறது.

  • இதனால் நேரடியாக வாழை தார்களின் எடை குறைகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • செடி ஒன்றிற்கு மண்ணின் தன்மையை பொருத்து சுமார் 600-1500 கி பொட்டாசியம் இட வேண்டும்.

  • இதனை 3 முதல் 4 தவணைகளில் இடுவதால் ஊட்டச்சத்து இழப்பு தவிர்க்கப்படுகிறது.

  • தவணை முறையில் உரமிடும்போது 8 மாதங்களுள் மொத்த உர அளவீட்டை இடுதல் வேண்டும்.

  • கடைசி தவணையின் போது தேவையான மெக்னீசயம் மற்றும் சல்பேட் உரங்களை கலந்து இடுவதால் தார்களின் எடை கூடுவதுடன் பழங்களின் சுவை அதிகரிக்கும்.

  • நன்கு மட்கிய தொழு உரங்களை கடைசி உழவின் போது ஏக்கருக்கு 8-10 டன்களை இடுதல் வேண்டும்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts