கத்தரியில் இலை உண்ணும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை
|கத்தரியில் இலை உண்ணும் ஹட்டா (Hadda) வண்டு :
இந்தியாவில ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் எக்டர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தியில் ஏற்படும் பல்வேறு பூச்சி தாக்குதல்களில் மிகவும் முக்கியமானதாகவும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இது திகழ்கிறது. இப்புழுத் தாக்குதலால் மகசூல் இழப்பு சுமார் 30 முதல் 70% வரை ஏற்படுகிறது.
உகந்த பயிர்கள்:
வெள்ளரி, சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் மற்றும் முலாம்பழம்.
வாழ்க்கைச் சுழற்சி:
அறிகுறிகள்
இலையின் மேற்பகுதியில், இலை நரம்புகளுக்கிடையே காணப்படும் பச்சையத்தை உண்ணும்.
இலைகள் எலும்பு கூடு போல் காட்சியளிக்கும்
இதனால் செடிகள் போதுமான உணவை உற்பத்தி செய்ய இயலாமல் குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.
தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகள் நாளடைவில் உதிர ஆரம்பிக்கும்.
பூ மற்றும் காய்ப்பிடிப்பு திறன் குறையும்.
காய்களின் மீது ஆழமில்லாத துளைகள் காணப்படும்.
கடுமையான இலை உதிர்வு மற்றும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இரககங்களை தேர்வு செய்து பயிரிடுதல்.
நல்ல நீர்ப்பாசனம் செய்வதால் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கலாம்.
அடுப்பு சாம்பலை ஆரம்ப கால கட்டத்தில் தெளிப்பதால் தாக்குதலை குறைக்கலாம்.
முட்டை, முட்டைப்புழு மற்றும் வண்டுகள் காணப்படும் இலைகளை சேகரித்து அப்புறப்படுத்துவதால் பூச்சி தாக்குதல் குறைக்கப்படும்.
நீரினால் செடிகளை நன்கு நனைப்பதால் செடிகளில் உள்ள பூச்சிகளின் பல்வேறு பருவநிலை மண்ணிற்கு சென்றடையும். பின்பு எக்டருக்கு 5 கிலோ குளோரிபைரிபாஸ் குருணைகளை தெளித்து நீர்பாய்ச்சுவதால் 60-70 % வரை பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கத்தரி, சுரை, பூசணி மற்றும் பரங்கி போன்ற பயிர்களை தொடர்ந்து செய்வதை தவிர்க்கவும்.
விளக்குபொறி 2 எண்கள்/ எக்டர் என்ற எண்ணிற்கு வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
ஏக்கருக்கு 10 எண்கள் பறவை கூடுகள் வைப்பதால் வண்டுகளை அழிக்கலாம். மற்றும் முட்டைப் புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
ஒட்டுண்ணி குழவிகளை பயன்படுத்துவதால் இவ்வண்டுகளை அழிக்கலாம்.
உயிரியல் பூச்சிகொல்லிகளான பேசில்லஸ், துரிஞ்ஜின்சியஸ் (பாக்டீரியா) அல்லது ஆஸ்பெர்ஜில்லஸ் பூஞ்சாணத்தைத் தெளிக்கலாம்.
ஆமணக்கு எண்ணெய் + எருக்கு இலைச்சாறு + கரு ஊமத்தை இலைச்சாறை கலந்து தெளிப்பதால் நல்ல பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.
வேப்ப எண்ணெய் 1 லி. + 60 கி சலவை பவுடர் + 400 கி நொறுக்கப்பட்ட பூண்டு ஆகியவற்றில் 20 லி. தண்ணீர் கலந்து பயன்படுத்துதல் நல்ல பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.
கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.
Neem oil- 1500 ppm - 1-1.5ml /1 lit
NSKE 5% - 3ml/lit.
Beauveria bassiana, Metarhizium anisopliae - 5-10 ml/lit
Bacillus thuringiensis Var. Kurstaki - 3-5 ml/lit. of water.
Deltamethrin - 1-1.5ml /1 lit.
Cypermethrin - 1-1.5ml /1 lit.
Quinalphos -2 ml/1 lit.
Dimethoate -1.5 ml/1 lit.
Emamectin benzoate -1g/1 lit.
Thiodicarb -0.7 g/1 lit.
0 Comments:
கருத்துரையிடுக