google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழையில் மெக்னீசியம் (Mg) சத்து குறைபாடு – அறிகுறிகள் மற்றும் மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 4 ஜூலை, 2026

வாழையில் மெக்னீசியம் (Mg) சத்து குறைபாடு – அறிகுறிகள் மற்றும் மேலாண்மை

 

மெக்னீசியம் என்பது தாவர வளர்ச்சிக்கு தேவையான இரண்டாம் நிலை பேரூட்டச்சத்து (Secondary Macronutrient) ஆகும். இது குளோரோபில் மூலக்கூறின் மைய அணுவாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மற்றும் மாவுச்சத்து  உருவாக்கத்தில் நேரடியாகப் பங்கு வகிக்கிறது.

மெக்னீசியம் தாவரத்தில் இடம்பெயரும் (Mobile nutrient) தன்மை கொண்டது. எனவே, குறைபாடு ஏற்பட்டால் முதலில் வயதான இலைகளிலிருந்து Mg இளம் இலைகளுக்கு நகர்ந்து விடுகிறது. இதனால் கீழ் இலைகளிலேயே முதற்கட்ட அறிகுறிகள் தோன்றுகின்றன.

மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பிரதான செயல்பாடுகள்:

1. குளோரோபில் உருவாக்கம்

ü குளோரோபில் மூலக்கூறின் மையத்தில் Mg உள்ளது.

ü Mg இல்லாமல் ஒளிச்சேர்க்கை நடைபெறாது.

2. ஒளிச்சேர்க்கை

ü  சூரிய ஒளியை வேதியியல் ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

ü  CO-ஐ கார்போஹைட்ரேட்டாக மாற்றும் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது.

3. ATP உருவாக்கம்

ü Mg இல்லாமல் ATP செயல்படாது. ATP என்பது தாவரத்தின் "ஆற்றல் நாணயம்" ஆகும்.

4. நொதிகளின் (Enzymes) செயல்பாடு

ü 300-க்கும் மேற்பட்ட நொதிகள் Mg இருப்பினால்தான் சிறப்பாக செயல்படுகின்றன.

5. சர்க்கரை கடத்தல்

ü இலைகளில் உருவாகும் சர்க்கரை பழம் மற்றும் குலைக்கு நகர Mg உதவுகிறது.

வாழையில் மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:

  • முதலில் வயதான இலைகளில் தோன்றும்.
  • இலை நரம்புகள் பச்சையாக இருந்து, நரம்புகளுக்கு இடையிலான பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும் (Interveinal Chlorosis).
  • குறைபாடு அதிகரித்தால் இலை ஓரங்கள் பழுப்பு நிறமாகி காய்ந்து விடும்.
  • பச்சையத்தின் அளவு குறைந்து உணவு உற்பத்தி குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும். இதற்கு நீல நோய் என்ற பெயர் உண்டு
  • பற்றாக்குறை அதிகரித்தால் மட்டைகள் தண்டு பகுதியில் இருந்து விலகி காணப்படும்.
  • தண்டின் வலிமை குறையும்
  • குலை எடை மற்றும் பழத்தின் தரம் குறையும்.
  • பழங்கள் சிறியதாக இருத்தல்

Magnesium deficiency in BananaHorticulture :: Deficiencies and Disorders-Banana-Magnesium

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

o   மணற்பாங்கான மண்

o   அமில மண் (pH < 5.5)

o    கரிமப்பொருள் குறைவு

o   அதிக மழையால் Mg கழுவிச் செல்லுதல்

o   அதிக தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் கால்சியம் இடுதல்

மேலாண்மை:

1. மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல்

2. அடி உரமாக ஏக்கருக்கு 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

3. குறைபாட்டு அறிகுறியின் ஆரம்ப நிலையில் செடி ஒன்றுக்கு 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.

4. அதிக தழைச்சத்து,  சாம்பல் சத்து மற்றும் கால்சியம் தவிர்க்க வேண்டும்.

5. 1% மெக்னீசியம் சல்பேட் இலைத் தெளிப்பு: 2–3 முறை

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறவும். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts