மா தண்டு துளைப்பான் மேலாண்மை
|
மே 01, 2026
In பூச்சி மேலாண்மை |
முன்னுரை:
- மா மரங்களை பல்வேறு பூச்சிகள் தாக்கினாலும் மா தண்டு துளைப்பான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது.
- ஏனெனில் மறைமுகமாக தாக்கி மரங்களை அழித்துவிடும்.
- மா தண்டு துளைப்பான் காரணமாக சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும்.
🪲 வாழ்க்கை சுழற்சி :
- வண்டுகள் பெரிதாகும் கடினமான இறக்கைகளைக் கொண்டிருக்கும். முன் இறக்கையில் இருபுறமும் சிகப்பு புள்ளிகள் காணப்படும்.
- இதன் உணர் கொம்புகள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும்.
- மரத்தின் தண்டு பகுதியில் காணப்படும் வெடிப்புகள் சிறு சிறு காயங்கள் போன்ற இடங்களில் வண்டுகள் தனது முட்டைகளை தனித்தனியாக இடும்.
- சுமார் 15- 25 நாட்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6-8 மாத காலம் வரை மரத்தின் தண்டு அல்லது கிளை பகுதியில் உள்ள திசுக்களை துளைத்து உண்டு வாழும்.
- கூட்டுப் புழுக்கள் பாதித்த இடங்களில் காணப்படும்.
- வண்டுகளின் நடமாட்டம் மே முதல் ஜூன் மாதங்களில் அதிகமாக காணப்படும். இதனால் புழு தாக்குதலை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை எப்படி பார்க்கலாம்.
தாக்குதலின் அறிகுறிகள் :
- வண்டுகள் நேரடியாக பதிப்பை ஏற்படுத்தாது.
- இளம் புழுக்கள் மரத்தின் தண்டு அல்லது கிளைப் பகுதியில் துளையிட்டு தொடர்ச்சியாக உண்டு பல்வேறு அறைகளை ஏற்படுத்தும்.
- திசுக்களை உண்டு மரத்தூள் சக்கைகளை வெளியேற்றும்.
- சில நேரங்களில் மரத்தில் தண்டுப் பகுதியில் இருந்து சாறு வெளியேறுவதை காண இயலும்.
- கிளை அல்லது தண்டைத் துளைத்து உண்ணுவதால் ஊட்டச்சத்து மற்றும் நீர் மரங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் ஒரு ஒரு பகுதியாக இறந்துவிட்டது.
- சரியாக கவனிக்கவில்லை எனில் மரம் இறந்துவிடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- முறையான பராமரிப்பு அவசியம். பராமரிப்பு இல்லாத தோப்புகளில் வண்டு தாக்குதல் அதிகம் காணப்படும்.
- வண்டு தாக்குதல் குறைவாக இருக்கும் நிலம் போன்ற ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
- இந்த வண்டுகள் தாக்கும் இதர பயிர்களான பப்பாளி, அத்தி, முருங்கை, ரப்பர், மல்பரி போன்றவற்றை ஊடுபயிராகவோ அல்லது அருகிலோ சாகுபடி செய்யக்கூடாது.
- மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இறந்த மரங்களை வேரோடு அகற்றி எரித்து விட வேண்டும்.
- மே மற்றும் ஜூன் மாதங்களில் மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மோனோகுரோட்டாபாஸ் கலந்து தடவ வேண்டும்.
- இதனால் முட்டையிடும் சதவீதம் குறையும்.
- வண்டுகள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக விளக்கு பொறி வைத்து அதனை கவர்ந்து அழிக்க வேண்டும்.
- மே முதல் ஜூன் மாத இரவில் வரை மரத்தின் தண்டு பகுதியில் நைலான் வலைகளை கட்டி வைக்கலாம். இதில் முட்டையிடும் வண்டுகள் எளிதில் மாட்டிக் கொள்ளும்.
- புழு தாக்குதல் இருப்பின் துளையிலிருந்து புழுக்களை அகற்றி விட்டுப் பின்னர் மோனோகுரோட்டாபாஸ் அல்லது Dichlorovos மருந்தில் பஞ்சை நனைத்து துளையில் வைக்க வேண்டும்.
- Arka borer control (ABC) பொருளை மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் தடவுவதன் மூலம் முட்டையிடுதல் தடுக்கப்படுவதுடன் தாக்கப்பட்ட புழுக்களும் இறந்துவிடும். இது சுமார் 4 மாத காலம் வரை புழு தாக்குதல் இல்லாமல் பாதுகாக்கும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE
0 Comments:
கருத்துரையிடுக