மஞ்சள் பயிரில் இலை கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- மஞ்சள் பயிரில் பிரதானமாக தோன்றும் நோய்களாக இலைப்புள்ளி நோய், கருகல், கொப்புள நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் திகழ்கிறது.
- நாம் ஏற்கனவே இலைப்புள்ளி நோயைப் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் நடப்பு பருவத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு முக்கியமான நோயான இலை கொப்புள (Leaf blotch)நோயைப் பற்றி விரிவாக காணலாம்.
நோயின் அறிகுறிகள்:
- இந்த நோயானது பெரும்பான்மையாக பயிரின் அடி பகுதியில் காணப்படும் இலைகளில் ஆரம்பமாகும். சுமார் ஒரு மில்லி மீட்டர் அகலம் உள்ள மிகச் சிறிய புள்ளி அடியில காணப்படும். இதனை இலையின் இரு புறங்களிலும் காண இயலும்.
- ஆரம்பத்தில் புள்ளிகள் பழுப்பு நிறத்தில் உருவானாலும் பின்னர் சிகப்பு நிறமாக மாறும். எண்ணற்ற சிறு சிறு புள்ளிகள் மிக நெருக்கமாக இடையில் காணப்படுவதால் பார்ப்பதற்கு கருகல் நோய் போன்று தெரியும்.
- எண்ணற்ற புள்ளிகள் இலையின் பெரும்பான்மையான பகுதியை சென்றடைவதால் இலைகளின் உற்பத்தித்திறன் பாதிப்படைந்து கண்டிப்பாக மகசூல் இழப்பீடு ஏற்படும். நன்கு பராமரிப்பு உடைய வயல்களில் இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம் அதில் சுமார் 20% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாத வயல்களில் 50% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.
- இலையில் காணப்படும் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலைகள் கருகி இறந்து விடும். இந்த நோய் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மிக அதிக அளவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த காலத்தில் திகழும் அதிக காற்று ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு இந்த பூஞ்சை உறக்க நிலையில் இருந்து வெளிவந்து மிக வேகமாக பெருக்கம் அடைய சாதகமாக திகழ்கிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- இந்த நோயை கட்டுப்படுத்த தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- நிலத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் மேலும் பயிர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி அடிமட்ட இலைகள் வரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- இந்த நோயானது பாதிக்கப்பட்ட கிழங்குகளில் இருந்து மற்றொரு வயலுக்கு செல்வதால் விதைக் கிழங்குகளை தேர்வு செய்யும் போது கவனம் தேவை. அதேபோன்று பாதிக்கப்பட்ட பயிரின் எச்சங்களில் இந்த பூஞ்சானம் நீண்ட நாட்கள் இருப்பதால் ஒரு முறை சாகுபடி செய்த பிறகு நிலத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
- பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர் செய்வதால் இந்த நோய் பரவுதலை தடுக்க இயலும்.
- நோய் தாக்குதலை தடுக்க அல்லது ஆரம்ப நிலையின் போது உயிர் பூஞ்சான கொல்லிகலான Pesudomonas மற்றும் Trichoderma ஆகியவற்றை தொடர்ச்சியாக தெளித்தும் பாசன நீர் வழியாகவும் கொடுத்து வர வேண்டும்.
- வெங்காயம் ஊடுபயிராக இருக்கும் வயல்களில் அல்லது வெங்காய இலையை அரைத்து தெளிக்க கூடிய பயிர்களில் இந்த நோய் தாக்குதல் மிக மிக குறைவாகத்தான் காணப்படுகிறது எனவே இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.
- பல்வேறு வகையான ரசாயன மருந்துகள் இந்த நோய்களுக்கு எதிராக திறன் பட செயல்படும் உதாரணத்திற்கு.. Azoxstrobin+ Tebuconazole, Triclostrobin +Tebuconazole, Flusilazole + Carbendazim போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் அல்லது இதுபோன்று பல மருந்துகள் உள்ளது அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்.
- இலையில் ஈரப்பதம் இருக்கும் போது வயலில் புகுந்து ஒரு வேலையும் செய்ய வேண்டும் இது மேலும் நோய் பரவுதலை அதிகப்படுத்தும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக