இயற்கை முறையில் பயிர்களில் பூ பிடித்தலை ஊக்குவிக்கவும் வழிமுறைகள்
| இயற்கை முறையில் பயிர்களில் பூ பிடித்தலை ஊக்குவிக்கவும், பூ உதிர்வை தடுத்து காய் பிடித்தலை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
தேமோர் கரைசல்:
- தேங்காய் பால் மற்றும் புளித்த மோர் ஆகியவற்றின் கலவையை தேமோர் கரைசல் ஆகும்.
- இதனை தயாரிக்க மூன்று முதல் ஐந்து தேங்காய்களை அரைத்து அதை ஐந்து லிட்டர் கலவையாக மாற்ற வேண்டும்.
- அதேபோன்று ஐந்து லிட்டர் மோர் ஆகிய இரண்டையும் கலந்து மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாலியில் ஊற்றி வைத்து அதன் வாய் பகுதியை துணி வைத்து நன்கு கட்டிவிட வேண்டும்.
- சுமார் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்த கலவை நன்கு புளித்து விடும். இதிலிருந்து 500 மில்லி தேமோர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
- இந்த கரைசலில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான வளர்ச்சி ஊக்கிகள் பூ பிடித்தலை தூண்டுவதுடன் பூ உதிர்வையும் தடுத்து காய் பிடித்தலை அதிகரிக்கிறது.
அரப்பு மோர் கரைசல்:
- தேமோர் கரைசல் போன்ற அரப்பு மோர் கரைசல் தயாரிக்க இரண்டு கிலோ அரப்பு இலை அல்லது ஊசி இலை மரம் என்று அழைக்கப்படும் மரத்தின் இலையை சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இதனை ஐந்து லிட்டர் கரைசலாக தயார் செய்து ஐந்து லிட்டர் மோர் உடன் கலந்து ஏழு நாட்கள் நொதிக்க விட வேண்டும் பின்பு கரைசல் தயாராகிவிடும்.
எருக்கு கரைசல்:
- எருக்கு இலை, தண்டு மற்றும் பூ ஆகியவற்றை சுமார் ஐந்து கிலோ எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை 200 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து ஐந்து நாட்கள் கழித்து வடிகட்டி இலை வழியாக தெளிக்கலாம்.
- மேம்படுத்தப்பட்ட இயற்கை கரைசல் தயாரிக்க சுமார் 20 லிருந்து 30 கிலோ எருக்கு இலைகள், மூன்று முதல் ஐந்து லிட்டர் கோமியம் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து சுமார் ஒரு மாத காலம் வைத்திருந்து பின்னர் வடிகட்டி தெளிக்கலாம்.
இளநீர்:
- இளநீரில் அதிக அளவு வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்து இருப்பதால் இதனை தனிப்பட்ட முறையில் கூட பூ பிடித்தலை மேம்படுத்த இலை வழியாக தெளிக்கலாம்.
- இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸின், ஜிப்ரலின், சைடோகைனின் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்து இருப்பதால் பயிர்களுக்கு தெளிப்புதான் இது ஊட்டச்சத்து பொருளாகவும் பூப்பிடித்தலை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இருந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக