சேப்பங்கிழங்கில் Phytophthora இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|- தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை அமையும் பொழுது இலை கருகல் நோய் தாக்குதல் காணப்படும். Phytophthora எனப்படும் பூஞ்சையினால் ஏற்படும் எந்த இலைக் கருகல் நோய் கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- மண் மற்றும் பாதிப்படைந்த கிழங்குகளில் மிக நீண்ட நாட்கள் உயிர் வாழும் திறன் படைத்த இந்த பூஞ்சைகள், தண்ணீர் மண் கிழங்கு மற்றும் காற்றினால் ஒரு செடிகளில் இருந்து மற்றொரு செடிகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நோயின் அறிகுறிகள்:
- பயிரின் நுனி அல்லது நடுப்பகுதியில் திகழும் இலையின் மேற்பரப்பில் அடர் பழுப்பு முதல் ஆலிவ் பச்சை நிறத்தில் புள்ளிகள் அல்லது புண்கள் காணப்படும்.
- இந்த புள்ளிகளை சுற்றி வெளிர் மஞ்சள் நிறைய வளையம் காணப்படும்.
- நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி இதிலிருந்து மஞ்சள் அல்லது வெளிர் சிகப்பு நிற திரவம் வெளியேறுவதை காண இயலும்.
- சில நேரங்களில் இந்த புண்களை சுற்றி வெள்ளை நிற பூஞ்சைகள் காண இயலும். இந்த புண்களின் நடுப்பகுதி சிதைந்து உதிர்வதை காணலாம்.
- இலை மற்றும் தண்டுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிர்களில் 50 சதவீதம் இலைப்பரப்பை நாம் இலக்க நேரிடும்.
- தீவிர தாக்குதலின் போது புண்கள் இலை காம்புகளில் காணப்படும். இதனால் பாதிப்படைந்த இடத்தில் சிதைந்து இலை ஒடிந்து தொங்கும்.
- நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களில் கிழங்குகளிலும் தாக்குதலை காண இயலும் இதனால் கிழங்கு அழுகல் அல்லது ரப்பர் போன்று மாறுதல் காணப்படும்.
- இந்த நோய் தாக்குதலால் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- ஒரே வயலில் தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகை அல்லாத இதர பயிர்களை சுழற்சி பயிராக பயிரிடுவது சிறந்தது.
- நோய் தாக்குதல் இல்லாத கிழங்குகளை தேர்வு செய்தல் மிக அவசியம். அதற்கு எந்தப் பகுதியில் இந்த நோய் தாக்குதல் இல்லையோ அங்கிருந்து கிழங்குகளை பெற்று நடவு செய்யலாம்.
- தேர்வு செய்த கிழங்குகளை இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து பின்பு விதைக்க வேண்டும். இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்திட Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தலாம் ரசாயன முறைக்கு Carbendazim+Mancozeb மருந்தை பயன்படுத்தலாம்.
- நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகத்தினை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
- பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் போது இந்த நோய் தாக்குதல் பெரிதளவு இல்லாததால் அதற்கு ஏற்றவாறு பருவத்தினை தேர்வு செய்து நடவு மேற்கொள்ளலாம்.
- ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- வாய்க்கால் வழி நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம் ஏனெனில் இவை இரண்டுமே நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை அதிகப்படுத்தும்.
- போதுமான இடைவெளி பயன்படுத்தி நடவு செய்வதால் நல்ல காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் இதனால் நோய் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது.
- பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கவும் திசுக்களின் திட தன்மையை மேம்படுத்தவும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் கொடுக்க வேண்டும்.
- வயலை சுற்றி இதர பயிர் குறிப்பாக சோளம் பயிரிடுவதால் நோய் தாக்குதல் மட்டுப்படுத்தப்படுகிறது.
- இயற்கை முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum என்ற உயிர் கட்டுப்பாட்டு காரணியை தொடர்ச்சியாக மண்ணில் கொடுத்து வர வேண்டும்.
- ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து தெளிக்கலாம்.
- Metalaxyl + Mancozeb
- Copper oxychloride
- Mettiram
- Mancozeb
- Fluxapyroxad + Pyroclostrobin
- Fosetyl aluminium
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக