பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த முறையில் உரம் இடுதல்...
|- பொதுவாக பயிர் சாகுபடியில் இரண்டு வகையான முறையில் விவசாயிகள் ஊட்டச்சத்து மேலாண்மையை மேற்கொள்கின்றனர்.
- ஒன்று முழுக்க முழுக்க ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தல் மற்றொன்று முழுமையாக ரசாயன உரங்களை இடாமல் சாகுபடி செய்வது. தொடர்ச்சியாக இந்த இரண்டு முறையில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக பயிரின் சராசரி விளைச்சல்/ உற்பத்தி திறனை நம்மால் பெற இயலாது.
- எனவேதான் ஒருங்கிணைந்த முறையில் உரம் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது.
- மிகவும் பொதுவான முறையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியது ஐந்து தொழில்நுட்பங்கள்.
பயிறு வகை பயிர்களை பயிரிடுதல்...
- நமது பகுதிகளில் பயிரிடப்படும் பயிர் வகை பயிர்களில் ஏதேனும் ஒன்றினை வருடம் ஒரு முறை தனிப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ கண்டிப்பாக பயிரிட வேண்டும்.
- வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உடன் இணைந்து பயிர்களின் வேர்களில் நிலை நிறுத்துகிறது.
- இதனால் ஏக்கருக்கு சுமார் ஒரு மூட்டை யூரியா இட்டது போன்ற சத்து கிடைக்கும், மண் தன்மையை மாற்றுகிறது, மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களை பெருக்கத்தை தூண்டுகிறது, களை வளர்ச்சியை மட்டுப்படுத்துதல் என எண்ணற்ற பயனுள்ளது.
இயற்கை உரங்களை பயன்படுத்துதல்...
- எந்த ஒரு பயிர் சாகுபடியாக இருந்தாலும் இயற்கை உரங்களை இடுவது அடிப்படை.
- இயற்கையாக கிடைக்கக்கூடிய கழிவுகள், பண்ணை கழிவுகள் , மக்குப் பொருட்கள், தொழு உரங்கள் என பல உள்ளது இவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
- இதனால் மண்ணின் கார அமிலத்தன்மை நிலை நிறுத்தப்படுதல், அனைத்து சத்துகளையும் கிடைக்க பெறுதல், மண் தன்மை மற்றும் அமைப்பு மாறுபடுதல், நீர் பிடிப்பு மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்துதல், மண் ஊட்டச்சத்து சுழற்சியை உறுதி செய்தல் என எண்ணற்ற பயன்கள் உள்ளது.
ரசாயன உரங்களை பயன்படுத்துதல்...
- பெரும்பான்மையாக நாம் வீரிய ஒட்டு பயிர்களை பயிரிடுவதால், இதன் உணவு தேவை அதிகம் மேலும் வீரிய ஓட்டுக்களின் அடிப்படை முறையான பராமரிப்பு அதற்கேற்ற மகசூல் என்பதை ஆகும்.
- நாட்டு ரகம் அல்லது வீரிய ஒட்டு ரகம் எதுவாக இருந்தாலும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை இயற்கை உரங்களால் முழுமையாக கொடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
- அதனாலதான் ரசாயன உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தேவையின் அடிப்படையில் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
உயிர் உரங்களை பயன்படுத்துதல்...
- உயிர் உரங்கள் எந்தவித ஊட்டச்சத்துக் கொள்ளவும் பயிர்களுக்கு தருவதில்லை என்பது நாம் அறிந்ததே.
- இருப்பினும் மண்ணில் இருக்கக்கூடிய மற்றும் நாம் இடக்கூடிய ஊட்டச்சத்துக்களை வீணடிக்காமல் பயிர்களுக்கு எடுத்து தர மட்டுமே உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
- பாக்டீரியா, புஞ்சை மற்றும் பாசி வகை உயிர் உரங்களை பயன்படுத்துவதால் வளிமண்டல தழைச்சத்தை நிலை நிறுத்துதல், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்தல் மற்றும் நுண்ணூட்ட சத்தை கிடைக்க செய்தல் என்பது தான் இதன் அடிப்படை தொழில்நுட்பம்.
புண்ணாக்கு வகைகளை பயன்படுத்துதல்...
- சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்தை கொடுப்பதற்கும் மண்வளத்தை நிலையாக பேணுவதற்கும் இது உதவுகிறது.
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்... https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக