பயிர் சாகுபடியில் சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம்
|1.மண்ணின் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், பயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டச்சத்தை எடுத்து விளைச்சலை கொடுப்பதற்கும் மேலும் மண்ணை சார்ந்து வாழும் நன்மை செய்யும் உயிரினங்களுக்கு மண்ணில் இருக்க கூடிய சரிவிகித ஊட்டச்சத்து அடிப்படை ஆதாரமாக திகழ்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
2.வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுருங்கி வரும் சாகுபடி நிலப்பரப்பு என பல்வேறு காரணங்களால் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலை நாம் விடுவிக்க கூடிய சூழ்நிலையில் தான் ரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
3.இதனால் ஆரம்ப காலத்தில் பயிர்களில் நல்ல மகசூல் கிடைத்தது என்பது உண்மைதான் அதாவது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மகசூல் ஆனால் நாளடைவில் இது படிப்படியாக குறைந்து தான் வருகிறது.
4.மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு காரணங்களினால் தான் உர பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகின்றது என்பது என்னுடைய கருத்து ஆனாலும் உரங்களுக்கு என வழங்கப்படும் மானியத்தினால் தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில உரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது உதாரணத்திற்கு யூரியா.... இதனாலும் கூட குறிப்பிட்ட சில உரங்கள் தொடர்ச்சியாக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
5.அளவுக்கு அதிகமான அதாவது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உரம் இடுதல் மண்ணின் தன்மை மாறுதல் அதாவது கார அமிலத் தன்மையில் மாற்றம், மண் வளம் குன்றுதல் அதாவது அதிக அளவு குறிப்பிட்ட சில சத்துக்களை கொடுப்பதால் இதர சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறுதல், மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்கள் அழிதல், நீர்நிலைகள் பாதிப்பு, பயிர்கள் மூலமாக ரசாயனங்கள் மனிதர்களுக்கு கால்நடைகளுக்கும் செல்வதால் எண்ணற்ற தீங்கு ஏற்படுகிறது.
6.இது மட்டும் இன்றி உரங்களிலிருந்து வெளியிடப்படும் நச்சுக்களால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதைத்தான் உண்மை
7.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் ஒருங்கிணைந்த முறையில் உரங்களை பயன்படுத்துதல் அல்லது முற்றிலும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வழியில் சாகுபடி மேற்கொள்வது நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்த இயலும்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் நாம் கடைபிடிக்க வேண்டியவை:
1.ரசாயன முறையில் பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து விட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு படிப்படியாக மாறலாம்.
2.அவ்வாறு மாறும் பொழுது சரிவிகித ஊட்டச்சத்தை மண்ணில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் இல்லை எனில் மகசூல் இழப்பீடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
3.இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்திற்காக தொழு உரம், மண்புழு உரம், கோழி எரு, பசுந்தாள் மற்றும் பசுந்தழை பயிர்கள், ஊடு பயிரிடுதல், கலப்பு பயிர் இடுதல், பயிர் சுழற்சி, வேளாண் மட்கு பொருட்கள், புண்ணாக்கு வகைகள், அமிர்த கரைசல், ஈயம் கரைசல், வேஸ்ட் டீ கம்போசர், உயிர் உரங்கள், ஜீவாமிர்தம், பஞ்சகாவியா, மீன் அமிலம் கடல்பாசி உரங்கள் என பல்வேறு வகையான இடுபொருட்கள் நமக்கு உள்ளது.
4.நம் பகுதியில் திகழும் மண், தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் பயிர்களுக்கு ஊட்டச்சத்து தேவையின் அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு இடு பொருட்களை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தும் பொழுது மண்ணின் ஊட்டச்சத்து வளம் குறையாமலும், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆரோக்கியமான உணவும் கிடைக்க வழிவகை செய்யலாம்.
5.ஒருங்கிணைந்த முறையில் பயிர் சாகுபடியே மேற்கொள்ள நினைக்கும் விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் குறைந்தபட்ச ரசாயன உரங்களையும், அதிக அளவு மற்றும் தொடர்ச்சியாக இயற்கை இடு பொருட்களையும் பயன்படுத்துவதால் மகசூல் குறையாமல் பயிர் சாகுபடி மேற்கொண்டு கொள்ளலாம்.
6.இதே வழிமுறைகளில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை யுக்திகளையும் கடைபிடிக்கலாம் சரியான திட்டமிடனும் செயல் திறனும் இருந்தால்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக