google-site-verification: googled5cb964f606e7b2f.html நிலக்கடலையில் இலை சுரங்க ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 4 ஜூன், 2024

நிலக்கடலையில் இலை சுரங்க ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • எண்ணெய் வித்து பயிர்களின் அரசன் என்று அழைக்கப்படும் நிலக்கடலை தற்போது தமிழ்நாட்டில் பரவலாக விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • எண்ணெய் வித்து பயிர்களில் பணப்பயிராகவும், உணவு பயிராகவும் அதிக அளவு எண்ணெய் விளைவிக்கக்கூடிய பயிராகவும் நிலக்கடலை பார்க்கப்படுகிறது.
  • பொதுவாக வருடம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யும் நிலக்கடலையில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக இதன் மகசூல் மற்றும் உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருகிறது. 
  • அந்த வகையில் இலை சுரங்க ஈக்களின் தாக்குதல் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இதன் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதை நாம் கவனத்தோடு கையாள்வது சால சிறந்தது.
  • நிலக்கடலையை பாதிக்கக்கூடிய இந்த வகை இலை சுரங்க ஈக்கள் பயிறு வகை பயிர்களையும் தாக்கும் வல்லமை படைத்தது. ஆரம்ப நிலையில் கவனிக்கப்படவில்லை எனில் இதன் தாக்குதலால் சுமார் 50% மேல் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

முட்டை: 

தாய் அந்து பூச்சிகள் இலையின் கீழ் புறத்தில் மிகச் சிறிய முட்டைகளை கொத்தாக அதாவது 150 முதல் 200 எண்கள் இடுகிறது.

இளம் புழுக்கள்: 

முட்டையிலிருந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் கழித்து இளம் புழுக்கள் வெளிவரும். வெளிர் பழுப்பு நிற பொருட்கள் 10 முதல் 15 நாட்கள் வரை இருக்கும். இதன் அளவு சுமார் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவாகத்தான் இருக்கும்.

கூட்டுப் புழு: 

வெளி சிகப்பு முதல் பழுப்பு நிற கூட்டுப் புழு இலைகள் சுருட்டி அதனுடன் காணப்படும். இது ஆயுட்காலம் 5 முதல் 7 நாட்கள் ஆகும்.

தாய் அந்து பூச்சி:

  • பழுப்பு நிற தாய் அந்து பூச்சிகள் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சிறிதாக இருக்கும். இதன் வாழ்நாள் ஐந்து முதல் ஏழு நாட்களாகும்.
  • இலை சுரங்க ஈக்களின் மொத்த வாழ்நாள் சுமார் ஒரு மாத காலம் ஆகும். இதன் இளம் புழுக்கள் மற்றும் தாய் அந்து பூச்சி ஆகிய இரண்டும் பயிர்களை தாக்கும் திறன் படைத்தது.

தாக்குதலின் அறிகுறிகள்: 


  • பிரதானமாக பயிர்களின் ஆரம்ப நிலையில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.

  • பொதுவாக மானாவாரி பயிர்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. நாட்டு ரக நிலக்கடலையில் இதன் தாக்குதல் அதிகம் தென்படுவதில்லை.
  • இளம் புழுக்கள் இலைகளை துளைத்து உண்பதால் இலையின் இரு புறங்களிலும் வளைந்து நெளிந்த சுரங்கங்கள் காணப்படும்.
  • சுரங்கங்களின் மேல் பகுதி வெளிர் நிறத்திலும் அதன் உட்புறத்தில் புழுக்களால் உண்ணப்பட்ட பயிர் எச்சங்களும் காணப்படும். 
  • இதனால் இலைகளின் உணவு உற்பத்தி திறன் குறைந்து பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். நாளடைவில் இலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து சுருண்டு காணப்படும். 
  • இலைகள் முதிர்ச்சி அடையும் முன்னராகவே உதிரும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நாட்டு ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம் இது இலை சுரங்க ஈக்களுக்கு எதிராக எதிர்ப்பு திறன் கொண்டது.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் நிலக்கடலை சாகுபடி செய்வதை தவிர்த்து பயிர் சுழற்சி முறையை பின்பற்றலாம். 
  • பயிரை ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். 
  • அடி உரமாக ஏக்கருக்கு 100 கிலோ விதம் இடித்த வேப்பங்கொட்டை இடலாம்.
  • இது மட்டுமின்றி தொழு உரம் பயன்படுத்தும் பொழுது அதனுடன் உயிர் பூச்சிக் கொல்லியான மெட்டாரைசியம் பயன்படுத்தி ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • வரப்பு பயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடுவதால் இலை சுரங்க ஈக்களின் தாக்குதலை எளிதில் கணிக்க இயலும். 
  • மஞ்சள் விட்டு பொறி ஏக்கருக்கு எட்டு வீதம் பயன்படுத்தலாம். வாய்ப்புகள் இருந்தால் விளக்கு பொறி பயன்படுத்தியும் தாய் அன்பு பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம்.
  • பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். இது இளம் புழுக்களின் வளர்ச்சியை தடை செய்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துகிறது.
  • இந்த பூச்சி தாக்குதல் குறிப்பாக மானாவாரி பயிரில் அதிகம் தென்படுவதால் பயிர்களை வறட்சி நிலைக்கு விடாமல் பராமரிப்பதால் பூச்சி தாக்குதலை மட்டுப்படுத்தலாம்.
  • பூச்சி தாக்கல் தீவிரம் அடையும் போது கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.(10 லிட்டர் தண்ணீருக்கு கீழ்க்கண்ட அளவை பயன்படுத்த வேண்டும்)
  • Lambda cychlothrin - 25 மில்லி
  • Fibronil - 25 மில்லி 
  • Imidacloprid - 10-15 மில்லி
  • Acephate+ imidacloprid - 25 கிராம்
  • Quinalphos - 25-40 மில்லி
  • Spinetoram -5-10 மில்லி
  • Cartap hydrochloride -10-15 கிராம் 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA




0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts