நிழல் வலை கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வதன் நன்மைகள்
ஜூன் 24, 2024
In மற்றவைகள் |
|
முன்னுரை:
- பெரும்பான்மையான காய்கறிப் பயிர்கள் குறிப்பிட்ட பருவம் மற்றும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதால் பருவமற்ற காலத்தில் இதன் சாகுபடி பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரம் குறைந்து விலையில் அதிக மாற்றம் திகழ்கிறது.
- விவசாயிகள் பருவ மற்ற தருணத்தில் சாகுபடி மேற்கொள்ளும் பொழுது அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, மழை மற்றும் வெப்பநிலை காரணத்தால் இதன் உற்பத்தி பெரிதும் பாதிப்படைகிறது. குறிப்பாக தீவிர குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை காரணத்தால் பெரும்பான்மையான காய்கறி பயிர்களில் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு காய் பிடிப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு விலை ஏற்றத்தை காண இயலுகிறது.
- பல்வேறு உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் பயிர் சாகுபடியில் ஏற்படும் சவால்களை சரி செய்திடவும், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், பருவ மற்ற தருணத்தில் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்திடவும், நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை வழங்கிட நிழல்வலைக் கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வது ஒரு சிறந்த முறையாகவே கருதப்படுகிறது.
நிழல் வலை கூடாரம் என்றால் என்ன:
இதில் நிழல் வலை கூடாரம் என்பது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளியை குறிப்பாக அல்ட்ரா வயலட் கதிர் வீச்சை தடை செய்தும், வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதத்தை பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியும், காற்று உள் புகுந்து எளிதில் வெளி வரக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.
நிழல் வலை கூடாரத்தில் நிறங்கள்:
பச்சை மற்றும் கருப்பு - இந்த நிற நிழல் வலை கூடாரங்கள் ஒளியின் அளவு மற்றும் தரத்தை மாற்றி அமைத்து கொடுக்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.
வெள்ளை- ஒளியின் அளவை சற்று குறைத்து மட்டும் கொடுக்கிறது தரத்தில் எந்த மாற்றமும் செய்யாது. இதனால் பயிர் வேகமாக வளரும்.
நிழல் வலை கூடாரத்தின் நன்மைகள்:
- கூடாரத்தின் உட்பகுதியில் வெப்பநிலையை 50 சதவீதம் வரை குறைத்துக் கொடுக்கக்கூடியது.
- அனைத்து பருவத்திலும் காய்கறி பயிர் சாகுபடி செய்ய உகந்தது.
- அதிக வெப்பநிலை மழைப்பொழிவு காற்று போன்ற அசாதாரண சூழ்நிலையில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது. இதனால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படாமல் அதிக அளவு பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
- வீரிய விட்டு ரகங்களை சாகுபடி செய்ய உகந்த சூழ்நிலை ஏற்படுத்தும்.
- கிடைக்கப்பெறும் குறைந்த இடத்தில் பயிர்களை செங்குத்தாக வளர்த்து அதிக மகசூலை ஈட்ட இயலும். எனவே இதன் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கும்
- நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படுகிறது.
- இதனால் மகசூலின் தரம் மேம்பட்டு காணப்படும்.
- இதர வேளாண் நவீன தொழில் நுட்பங்களான நிலப் போர்வை அமைத்தல், சொட்டுநீர் பாசனம் /தெளிப்பு நீர் பாசனம், பல்வேறு பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தரமான காய்கறிகளை பெறலாம்.
- தக்காளி, கத்தரி, வெள்ளரி, மிளகாய், குடைமிளகாய், கீரை வகைகள் மற்றும் அனைத்து கொடி காய்கறி வகைகள் என நாம் விரும்பிய பயிரை இதில் சாகுபடி செய்து பயன்பெறலாம்.
- இது மட்டும் இன்றி களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளுக்கு தேவைப்படும் வேலை ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதால் உற்பத்தி செலவும் குறைகிறது.
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக