சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்:
|முன்னுரை:
- சமையலறையின் அரசி என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் 20 முதல் 30 நாட்கள் வயது உடைய பயிராகவும், ஒரு சில இடங்களில் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிரின் ஆரம்ப நிலையில் தற்போது நிலவும் மந்தமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சில இடங்களில் நுனி கருகல் காணப்படுகிறது.
- Stemphylium எனப்படும் ஒரு வகை பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது Stemphylium இலை கருகல் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
பூஞ்சானத்தின் வாழ்க்கை சுழற்சி:
- நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சையானது மண், முந்தைய பயிர்களின் எச்சம், களைகள் மற்றும் இதர குப்பைகளில் நீண்ட காலமாக உறக்க நிலையில் இருக்கும். சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் பயிர் நிலவும் பொழுது பூஞ்சையானது பயிர்களில் நோயை ஏற்படுத்துகிறது.
- நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் மற்றும் பண்ணை பணிகளால் பயிர்களில் ஏற்படும் காயங்கள் வழியாக பூஞ்சானமானது நோயை ஏற்படுகிறது.
நோய் பரவும் விதம்:
தாக்கப்பட்ட பயிரிலிருந்து மற்ற பயிர்களுக்கு பூஞ்சானமானது காற்று மற்றும் பாசனம் வழியாக பரவுகிறது. இது மட்டுமின்றி மாலை நேரத்தில் செடிகளை ஈரப்பதம் இருக்கும் பொழுது நாம் பண்ணைப் பணிகளை மேற்கொள்வதால் மேலும் நோய் பூஞ்சானம் பரவும்.
சாதகமான சூழ்நிலை:
- மிதமான வெப்பநிலை
- அதிக காற்று ஈரப்பதம்
- மழைப்பொழிவு அல்லது அதிகை மண் ஈரப்பதம்
- அதிக பனிப்பொழிவு
- நெருங்கிய நடவு மேற்கொள்ளுதல்
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- நீள் வட்ட வடிவில் வெள்ளை முதல் பழுப்பு நிற புண்கள் இலையில் காணப்படும்.
- ஆரம்ப கட்டத்தில் செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகளில் தான் அறிகுறிகள் தென்படும்.
- நாளடைவில் புண்கள் நீர்த்த வெளிர் சிகப்பு முதல் கருப்பு நிறத்தில் மாற்றம் அடையும்.
- சாதகமான சூழ்நிலை நிலவும் பொழுது அடுத்தடுத்த இலைகளுக்கு நோய் பரவுதல் காணப்படும்.
- நோய் தாக்குதல் தீவிரமடையும் பொழுது புண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அதன் அளவு அதிகரித்து ஒன்றுடன் ஒன்று சிதைந்து கருகி காணப்படும்.
- புண்கள் தென்பட்ட இடத்தில் தாள்கள் எளிதில் உடைந்து தொங்கும்.
- இதனால் இலைகளின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு மகசூல் அளவு குறையும்.
- கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- நோயால் பாதிக்கப்படாத விதை கிழங்குகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
- இந்த நோய்க்கு எதிராக எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்து அதனை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
- தொடர்ச்சியாக ஒரே வயலில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதை தவிர்க்கலாம்.
- தொடர்ச்சியாக இந்த நோயின் பாதிப்புகள் தென்படும் வயலில் பயிர் சுழற்சி அல்லது மாற்று பயிரிடுதல் மிகவும் உகந்தது.
- நடவு செய்யும்போது வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
- வயலில் போதுமான அளவு வடிகால் வசதி இருக்க வேண்டும். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் இருக்கக் கூடாது.
- அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
- களைகள் அதிகம் வளராமல் கட்டுப்படுத்த வேண்டும் மேலும் முந்தைய பயிர்களின் குப்பைகள் கண்டிப்பாக வயலில் இருக்கக் கூடாது.
- நோயின் அறிகுறிகள் பரவலாக தென்படும் போது தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- மேலும் நோயின் தாக்குதல் தென்படும் வேளையில் ஏக்கருக்கு 25 கிலோ சல்பேட் இட வேண்டும் இது நோய் பரவுதல் கட்டுப்படுத்தும்.
- பனிப்பொழிவு அல்லது மழை பெய்த நேரங்களில் காலை நேரத்தில் பண்ணைப் பணிகளை செய்வதை தவிர்க்கவும்.
- Trichoderma harzianum எனும் பூஞ்சான கொல்லி இந்த நோய்க்கு எதிராக நல்ல செயல் திறன் கொண்டுள்ளதால் நோயின் ஆரம்ப காலத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும்.
- இந்த வழிமுறையை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என நோய் தாக்குதலின் ஆரம்ப காலத்தில் தெளிப்பதால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
- ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.(பத்து லிட்டர் தண்ணீர் காண அளவு)
- Carbendazim+ mancozeb - 25 கிராம்
- Azoxystrobin+ mancozeb - 50 கிராம்
- Zineb- 25 கிராம்
- Tebuconazole - 10-25 மில்லி
- Azoxystrobin+Difenaconazole - 10 மில்லி
- Tebuconazole+ Trifloxystrobin - 10 கிராம்
- Mettiram+ pyraclostrbin - 50 கிராம்
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக