தென்னையில் போரான் ஊட்டச்சத்து மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை
|தென்னையில் போரான் ஊட்டச்சத்து மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை:
- அனைத்து வகையான மண்ணிலும் இதன் குறைபாடு தென்படும்.
- எந்த வயதுடைய தென்னம் பிள்ளை அல்லது மரமாக இருந்தாலும் போரான் ஊட்டச்சத்து குறைபாடு கண்டிப்பாக தெரியும்.
- நமது வயலில் போரான் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய கண்டிப்பாக மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
- மண் பரிசோதனையில் போரான் அளவு 0.30 ppm என்ற அளவிற்கு குறைவாக இருந்தால் மட்டுமே அதனை பற்றாக்குறை உள்ள மண் என்று தீர்மானிக்கலாம்.
- போரான் பற்றாக்குறை உள்ள மண்ணில் இருக்கும் தென்னை மரங்கள் அல்லது பிள்ளைகள் உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 மட்டுமே இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இல்லை அதிகமாக இருக்கும் மண்ணில் கண்டிப்பாக போரான் ஊட்டச்சத்துக் குறைபாடு தென்படும்.
- எனவே கார அமிலத்தன்மையை நடுநிலையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது போரான் ஊட்டச்சத்து மண்ணிற்கு அடியில் செல்வதால் அதனை தடுக்க ஏதுவாக போதுமான வடிகால் வசதி மற்றும் நீரை சேமித்து வைத்திருக்க கூடிய மண்புழு உரம், நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
- மண்ணை இறுக விடுவதால் அதில் இருக்கக்கூடிய சத்து செடிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அதற்கேற்றவாறு ஏதேனும் பயிர் சாகுபடி செய்து குறிப்பாக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்தால் மண்வளம் பெருகும்.
- இயற்கையாகவே மண்ணில் போரான் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் அதனை செடிகளுக்கு கிடைக்க ஏதுவாக வேஷ்டி கம்போசர் அல்லது இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான ஈ எம் கரைசல், ஜீவாமிர்தம் பஞ்சகாவியா போன்றவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
- பொதுவாக நமது வயலில் வளரக்கூடிய அனைத்து களை செடிகளும் ஊட்டச்சத்து மிகுந்தது எனவே அவற்றை பிடுங்கி சிறு துண்டுகளாக வெட்டி செடிகளுக்கு இட்டு நீர் பாய்ச்சலாம்.
- மண் அல்லது பயிர்களுக்கு அதிக அளவு பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்து கொடுத்தாலும் போரான் பயிர்களுக்கு கிடைக்காது. எனவே சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும்.
- எருக்கு கரைசல் அல்லது எருக்கு செடிகளை சிறு துண்டுகளாக வெட்டி தென்னையின் தண்டுப் பகுதியிலிருந்து ஒரு மீட்டர் தள்ளி மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம்.
- போரான் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் எந்த ஒரு பாகமும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பாது.
- அதேபோன்று இழை வழியாகவோ அல்லது வேர் வழியாகவோ போரான் ஊட்டச்சத்து கொடுத்த பிறகு உடனடியாக அதன் செயல்பாடு இருக்காது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் பயிரில் அதன் குறைபாட்டால் தோன்றும் அறிகுறிகள் குறையும்.
- உரக்கடைகளில் பல்வேறு வடிவங்களில் போரான் ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது உதாரணத்திற்கு Disodium octaborate, Boric acid, Sodium tetraborate மற்றும் பல.
- இந்த வகை போரான் வடிவத்தை ரசாயன உரம் அல்லது மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம் அல்லது மண்ணில் இடலாம்.
- தென்னை மரங்களை அதிக அளவு காய்ச்சலில் விட்டாலும் போரான் ஊட்டச்சத்து பயிர்களுக்கு கிடைக்காது. எனவே போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது இதனை இடுவது சிறந்தது.
- அதிக அளவு போரான் ஊட்டச்சத்து கொடுப்பதும் தவறான செயலாகும் இது பயிர்களில் நச்சுத்தன்மை அறிகுறியை ஏற்படுத்தும் அது போன்ற தருணத்தில் போதுமான அளவு துத்தநாகம் பயன்படுத்தினால் போரான் செயல்பாட்டை குறைக்கலாம்.
- குருணை பவுடர் மற்றும் திரவ வடிவில் போரான் ஊட்டச்சத்தை கிடைக்கப்பெறுகிறது அதனை பரிந்துரைக்கப்பட்ட செடிகளுக்கு இடுவதால் வெகுவாக இதன் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம்.
இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக