பயிர்கள் வறட்சியை தாங்கி வளர உதவும் பிபிஎப்எம்(PPFMs) திரவ நுண்ணுயிர் உரம்
ஏப்ரல் 14, 2024
In மற்றவைகள் |
|
பிபிஎப்எம் (PPFMs) என்றால் என்ன...?
- பிபிஎப்எம் என்பதை ஆங்கிலத்தில் Pink Pigmented Facultative Methylotrophs என்பார்கள்.
- தமிழில் கூற வேண்டுமென்றால் இளம் சிகப்பு நிற மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியாக்களை கொண்ட நுண்ணுயிர் திரவம் என்று கூறுவார்கள்.
- நுண்ணுயிர்கள் என்பது கண்ணுக்கு புலப்படாத மிகச் சிறிய உயிரினங்கள். உதாரணத்திற்கு பூஞ்சானங்கள், பாக்டீரியாக்கள், நுண் பாசிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இதில் அடங்கும். இதில் நன்மை செய்யும் மற்றும் தீங்கு செய்யும் ஆகிய இரண்டும் அடங்கும்.
- பல்வேறு நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் பயிர்களின் வேர் பகுதியில் பயிர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து பயிர்களுக்கு நன்மை பயக்கும் என கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வேர் மண்டல நுண்ணுயிர்கள் என்கிறோம் அதனை ஆங்கிலத்தில் Rhizosphere என்பார்கள்.
- அதேபோன்று சில வகை பாக்டீரியாக்கள் பயிர்களின் இலைப் பகுதிகளில் பயிர்களின் உதவியால் வாழும் தன்மை படைத்தது பயிர்களின் அந்த இலை பகுதியை ஆங்கிலத்தில் Phyllosphere பகுதி என்று கூறுவார்கள்.
- இந்த பாக்டீரியாக்கள் இளம் சிகப்பு நிறத்தில் இருப்பதால் இதற்கு Pink Pigmented என்ற பெயரையும் கூடுதலாக அழைக்கிறோம்.
இதன் பணிகள்:
- பயிர்களின் இலைப் பகுதியில் வாழும் இந்த பாக்டீரியாக்கள் பயிர்களின் வளர்ச்சியின் போது வெளியேறும் கரிம வாயுக்கள், மெத்தனால் மற்றும் ஆல்கஹாலை எடுத்துக் கொண்டு உயிர் வாழ்கிறது.
- இது கார்பன் ஊட்டச்சத்துக்களை நுண்ணுயிரிகளுக்கு கொடுக்கிறது. எனவே தான் இந்த வகை பாக்டீரியாக்களை நாம் மெத்தைலோட்ரோபிக் (Methylotropic) பாக்டீரியா என்று கூறுகிறோம்.
- பதிலுக்கு இந்த வகை பாக்டீரியாக்கள் பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளான ஆக்ஸிஜன்(Auxin), ஜிப்ரலின்(Gibberellin) சைட்டோகைகின்(Cytokinin) ஆகியவற்றை கொடுக்கிறது.
பயன்கள்:
- இதை விதைகளின் முளைப்பு திறன் மற்றும் ஒருமித்த தருணத்தில் விதைகள் முளைப்பதை மேம்படுத்துகிறது.
- பயிர்களின் வேர், தண்டு மற்றும் இலை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
- பயிர்கள் அதிக வறட்சி, அதிக வெப்பநிலை, மிகவும் குறைந்த வெப்பநிலை போன்ற பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளை தாங்கி வளர உதவி புரிகிறது.
- பூ பிடித்தலை அதிகப்படுத்தி பூ உதிர்வை குறைக்கிறது. விளை பொருட்களின் தரம், எடை, சுவை, நிறம் முதலியவற்றை மேம்படுத்துகிறது.
- பல்வேறு நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் பெறுகிறது.
- ஒட்டுமொத்தமாக பயிர்களின் மகசூலை 10 - 20% அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் விதம்:
- விதை/நாற்று நேர்த்தி - தேவையான அளவு
- இலை வழியாக தெளித்தல் - ஏக்கருக்கு 150 முதல் 200 மில்லி
- நீர் வழியாக கொடுத்தல் - ஏக்கருக்கு 500 மில்லி
- பயிர்களின் தன்மை மற்றும் வாழ்நாள் பொறுத்து 40 முதல் 50 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல் மற்றும் பயிர் சாகுபடி தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக