google-site-verification: googled5cb964f606e7b2f.html மாவு பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

மாவு பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

முன்னுரை:

  • தொடர்ச்சியாக நிலவும் மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக நாளுக்கு நாள் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. அதில் விவசாயிகளுக்கு மிகவும் சவாலாக இருப்பதில் மாவு பூச்சி தாக்குதலும் ஒன்று.
  • மாவு பூச்சி என்பது ஒரு வகை சாறு உறிஞ்சும் பூச்சி. அதாவது மனிதர்களை கடிக்கும் கொசுக்களை போன்று வாய் பாகங்களை கொண்டிருக்கும். 
  • இதன் வாய் பகுதியில் இருக்கும் ஊசி போன்ற அமைப்பை  செடிகளில் செலுத்தி சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தும்.

பூச்சியின் உடல் அமைப்பு:

  • இது முட்டை வடிவில் சுமார் 4 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். இதன் உடம்பு மேல் சிறிய உரோமங்கள் காணப்படும். அதன் மேல் வெள்ளை நிற மெழுகு போன்ற அமைப்பு சூழ்ந்திருக்கும்.
  • இதனால்தான் நாம் தெளிக்கும் எந்த ஒரு வகை மருந்துகளும் நேரடியாக பூச்சிகளை தாக்குவதில்லை. ஏனெனில் உடம்பு மேல் இருக்கும் போர்வை போன்ற வெள்ளை நிற மெழுகு நாம் அடிக்கும் மருந்துகளால் கரைவதில்லை அதனால் மருந்துகள் பூச்சிகளை சென்றடைவதில்லை.

தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:

  • மிதமான வெப்பநிலையில் இருந்து அதிக வெப்ப நிலைக்கு சூழ்நிலை மாறும் போது இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  • செடிகளில் தளிர் வளர்ச்சியின் போது அதிகம் காணப்படும்.

எந்தெந்த பயிர்களை இது தாக்கும்:

  • ஆரம்பத்தில் ஒரு சில பயிர்களை மட்டும் உண்டு வாழ்ந்த மாவு பூச்சிகள் தற்போது காய்கறி பயிர்கள், பழ பயிர்கள், தானிய வகைகள், சிறுதானிய பயிர்கள்,  அலங்கார தாவரங்கள், மலர் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள், பயிர் வகை பயிர்கள் மர பயிர்கள் மற்றும் பல்வேறு வகையான களைகளையும் உண்டு வாழ்கிறது.
  • சொல்ல வேண்டும் என்றால் இது தாக்காத பயிர்களை தான் நாம் கணக்கிடுவது எளிது.

மாவு பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • மாவு பூச்சியில் பல்வேறு வகைகள் உள்ளன உதாரணத்திற்கு மா மாவு பூச்சி, எலுமிச்சை மாவு பூச்சி, பருத்தி மாவு பூச்சி, நீண்ட வால் மாவு பூச்சி, அன்னாசி மாவு பூச்சி, கரும்பு மாவு பூச்சி என பல்வேறு பெயர்களில் எண்ணற்ற இனங்கள் இதில் காணப்படுகிறது.
  • முட்டை: முதிர்ந்த பெண் மாவு பூச்சிகள் பை போன்ற அமைப்பு கொண்ட உருவத்தில் சுமார் 500 முதல் 600 வெள்ளை முட்டைகளை செடிகளின் குருத்துப் பகுதி, இலை பின் புறம், தண்டு, கிளை மற்றும் தண்டு பட்டை பகுதியில் இடுகிறது. சில நேரங்களில் மண்ணிலும் வேர் பகுதியிலும் இடம்.
  • இளம் பூச்சி: சுமார் நான்கில் இருந்து எட்டு நாட்கள் ஆன முட்டைகள் வெடித்து அதில் இருந்து வரும் இளம் புழுக்களை நிம்ஸ் என்பார்கள். இது வெள்ளை முதல் இளஞ்சிகப்பு நிறத்திலும் காணப்படும். முட்டையில் இரந்து வெளிவரும்  பெரும்பான்மையான இளம் புழுக்கள் பெண்ணாக இருப்பதால் இதன் இனப்பெருக்கம் அதிவேகமாக இருக்கும்.
  • இந்தப் புழுக்கள் வேகமாக நகர்ந்து வேறு இடங்களுக்கு செல்லும். இதன் வாழ்நாள் சுமார் 20 லிருந்து 25 நாட்கள்.
  • கூட்டுப் புழு மற்றும் முதிர்ந்த புழுக்கள்: சுமார் இரண்டு முதல் மூன்று நாட்கள் கூட்டிட்டு புழுவாக இருந்து பின்னர் முதிர்ந்த புழுக்களாக மாறும். வருடத்திற்கு சுமார் 12-13 தலைமுறைகளை நாம் காண இயலும்.
தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்கப்படும் பயிர்களின் தன்மையைப் பொறுத்து அறிகுறிகள் சற்று வேறுபடும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பொதுவான ஒன்றாகும்.
  • இளம் மற்றும் முதிர்ந்த புழுக்கள் செடிகளின் பல்வேறு பகுதிகளில் சாற்றை உறிஞ்சும்.

  • இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இது சாறு உறிஞ்சும் இடத்தில் அதிக எண்ணிக்கையில் குழுக்களாக புழுக்கள் இருப்பதை காணலாம்.
  • ஒரு சில பயிர்களில் இலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சுவதால் இதன் மூலம் சுரக்கப்படும் தேன் கீழ் இருக்கும் இலையின் மேற்பரப்பில் படலமாய் படர்கிறது.
  • இதனால் இலையின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சி காணலாம். இது இலைகளின் உற்பத்தி திறனை பாதித்து மேலும் செடி வளர்ச்சியை தடை செய்கிறது.
  • இந்தத் தேன் போன்ற திரவங்களை சுவைக்க எறும்புகளும் செடிகளை வந்தடைகிறது.
  • மேலும் இந்த எறும்புகள் புழுக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று தாக்குதலின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் எறும்புகள் பல்வேறு வகையான இயற்கை எதிரிகளிடமிருந்து மாவு பூச்சியை பாதுகாக்கிறது.
  • பயிர்களின் அனைத்து பகுதிகளையும் தாக்கி செடிகளை சோர்வடையச் செய்து உற்பத்தியை 100 சதவீதம் வரை கூட தடை செய்கிறது.
  • ஒரு சில பயிர்களில் இது தீங்கு விளைவிக்கக் கூடிய திரவங்களைச் செடிகளுக்கு அனுப்பி விரைவில் அதனை இறக்கச் செய்கிறது.
  • மேலும் விவரம் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts