வாழையில் கண்ணாடி இறக்கை பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பல்வேறு பழ பயிர்களில் மிகவும் முக்கியமானதாக வாழை கருதப்படுகிறது.
- வாழை உற்பத்தி மற்றும் சாகுபடி பரப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
- வாழை பயிரை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் சில நோய் மற்றும் பூச்சிகள் பெரிய அளவில் சேதாரங்களை ஏற்படுத்தாவிட்டாலும் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
இப்பூச்சி தாக்குதலுக்கு ஏற்ற பயிர்கள்:
சீத்தாப்பழம், லவங்கப்பட்டை, மஞ்சள், செம்பகம் மரம், தென்னை, கருணை கிழங்கு, எண்ணெய் பனை, இஞ்சி, ஏலக்காய் போன்ற பல பயிர்களை தாக்கக்கூடிய வல்லமை படைத்தது.
பூச்சியின் வாழ்க்கை முறை:
முட்டை:
வாழை இலைகளின் கீழ்பகுதியில் கொத்துக் கொத்தாக இடப்படுகிறது.
இளம் புழுக்கள்:
இலை அடி புறத்தில் நரம்புகளுக்கு அருகில் மிகச் சிறிய கருமை நிறத்தில் காணப்படும். பார்ப்பதற்கு அஸ்வினி போன்று தோன்றும்.
முதிர்ந்த பூச்சிகள்:
இதன் தலை மற்றும் உடல் பகுதி வெளிர் பழுப்பு முதல் மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்ணாடி போன்று முன் இறக்கைகள் காணப்படும். இலையின் அடி புறத்தில் கூட்டம் கூட்டமாக வாழும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இதன் தாக்குதல் பருவ மலைக்கு பின்னதாக காணப்படும்.
- இளம் மற்றும் முதிர்ந்த புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் முக்கிய நரம்புக்கு அருகில் ஒருங்கிணைந்து காணப்படும்.
- இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இதை நடிப்புரத்தில் சாறுகளை உறிஞ்சுவதால் மிகச்சிறிய கருமை நிற சற்று பள்ளமான புள்ளிகள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.
- இதனால் இலை மேற்பரப்பில் எண்ணற்ற வெள்ளை நிற சிறு புள்ளிகள் காணப்படும்.
- தாக்குதல் தீவிரம் அடையும்போது வெள்ளை நிற புள்ளிகள் விரிவடைந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து கருகல் நோய் போன்று காணப்படும்.
- இந்த இலைகள் நாளடைவில் சுருங்கி காய்ந்து உதிர்ந்து விடும்.
- சில நேரங்களில் பூக்கள் மற்றும் இளம் காய்களையும் தாக்கக்கூடியது.
- இந்த வகை பூச்சிகள் பெரிய அளவில் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தாவிட்டாலும் செடிகளின் வளர்ச்சியை தடை செய்கிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகள், பூக்கள், அல்லது காய்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
- வாழை மரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் காணப்படும் களைச் செடிகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அல்லது இந்த பகுதிகளில் ஊடுபயிர் பயிரிடலாம்.
- இயற்கை பூச்சி கொல்லிகளை/விழுங்கிகளை வயலில் அதிகப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு எட்டுக்கால் பூச்சி, கரும்புள்ளி செவ்வண்டு, கண்ணாடி இறக்கை பூச்சி மற்றும் பல்வேறு வகை வண்டுகள் இதனை உண்டு அழிக்கும்.
- ஆரம்ப நிலை தாக்குதலின் போது வேப்பங்கொட்டை விதை கரைசல் 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 50 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
- இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கரைசல் இரண்டு சதவீதம் பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் இதனை விரட்டலாம்.
- அல்லது கீழே காணும் ஏதேனும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்தினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
- ஏக்கருக்கு எட்டு எண்கள் என்று அளவில் மஞ்சள் ஒட்டு பொறியை காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பொருத்த வேண்டும்.
- Dimethoate - 30 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Quinalphos- 40 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Lambda cyclathrin- 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Phenthoate - 25 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- propoxur - 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
For more details join with our WhatsApp group
0 Comments:
கருத்துரையிடுக