வேர் புழு/ சாணி புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
|வேர் புழு (கோலோட்ரைக்கியா) (White/ root Grub):
சுமார் ஒரு வருடம் ஆயுட்காலம் கொண்ட இப்புழுவானது முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டு ஆகிய நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளது. இவற்றின் புழு மற்றும் வண்டு நிலைகள் மட்டுமே பயிரைத் தாக்கக் கூடியது ஆகும்.
மற்ற வகை புழுக்களில் இருந்து வேர்புழுக்களை கண்டறிய புழுக்களின் அடிப்புறத்தில் இரண்டு வரிசைகளில் சிறிய முடி போன்ற வளர்ச்சி இருப்பதை கொண்டு உறுதி செய்யலாம். இதனால் 40-80% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.
வாழ்க்கைச் சுழற்சி :
உகந்த பயிர்கள்
நிலக்கடலை, கொய்யா, எலுமிச்சை, கத்தரி, வெண்டை, மரவள்ளி, சர்க்கரை வள்ளிகிழங்கு, மா, மாதுளை, ஆப்பிள், திராட்சை, கரும்பு, பாக்கு, தென்னை, உருளைகிழங்கு மற்றும் பல எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறி பயிர்கள் வேர்களைத் தாக்கும்.
அறிகுறிகள்
பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
பயிர்களில் இலைகள் பரவலாக மஞ்சள் நிறத்தில் மாற்றமடையும்.
நாளடைவில் இவ்விலைகள் முதிர்வு அடையும் முன்னே உதிர ஆரம்பிக்கும். மரப் பயிர்களை குலுக்கும் போது பழுத்த இலைகள் சலசல வென கொட்டும்.
பயிர் வேர்ப் பகுதியை காணும் போது வேர்களின் நுனிப்பகுதி துண்டிக்கப் பட்டிருக்கும்.
மேலும் நிலத்தில் குழி போன்ற ஓட்டைகள் காணப்படும் (மண்ணிற்கு அடிப்பகுதியில் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு செல்லும் திறன் படைத்தவை).
பாதிக்கப்பட்ட பயிர்களை பிடுங்கினால் எளிதாக கைகளில் வந்துவிடும்.
பாதிக்கப்பட்ட மரப்பயிர்கள் மிதமான காற்று வீசும் போது கூட சாய்ந்து விடும்.
பூ மற்றும் பழங்கள் உதிர ஆரம்பிக்கும்.
வண்டுகள் இலைப் பாகங்களையும் கூட்டுப் புழு வேர் அல்லது கிழங்கு பகுதிகளை உண்ணக் கூடியது.
எனவே, கூட்டுப் புழுக்களின் தாக்குதல் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
இவ்வகை புழுக்கள் வசிக்கக் கூடிய குப்பைகள் மற்றும் செடிகளை வயல்களிலிருந்து அகற்றுதல்.
பூச்சிகளை சேகரித்து அழித்தல், பொறி பயிரான வேம்பு, ஆய்லாந்தஸ் மற்றும் அகேஸியா பயன்படுத்தலாம்.
விளக்கு பொறி ஏக்கருக்கு 1 முதல் 2 வைப்பதால் வண்டுகளின் நடமாட்டத்தை குறைக்கலாம்.
பூச்சிக்கொல்லி தௌித்த வேம்பு இலைகளின் பாகங்களை வயல்களில் ஆங்காங்கே நட்டு வைப்பதால் வண்டுகள் இதை உண்டு இறந்துவிடும்.
கோடைப்பருவத்தில் ஆழமான உழவின் மூலம் நிலத்திற்கு அடியில் உள்ள கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை வெளிக்கொண்டு வந்து பறவைகள் மற்றும் நாள்களுக்கு இரையாக்கலாம்.
மண்புழு உரங்களை மெட்டாரைசியம் அனிசோபிளே பயன்படுத்தி ஊட்டமேற்றி விடுவதால் பயிர்கள் இறப்பதை தடுக்கலாம்.
தழைச்சத்து உரப்பயன்பாடுகளை குறைத்து பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களை அதிகம் பயன்படுத்தும் போது வேர் வளர்ச்சி மிகுந்து காணப்படும். எனவே, இவை புழுக்களின் பாதிப்பிலிருந்து தாங்கி வளரும்.
பருவ மழை தருணங்களில் உழவிற்கு முன்பு எக்டருக்கு 25 கிலோ போரேட் அல்லது 33 கிலோ கார்போபியுரான் குருணைகளை தௌித்து விட்டு உழவு செய்வதால் பருவ மழையின்போது கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
நன்கு மக்கிய தொழு உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
செஞ்சோளம் மற்றும் கம்பு போன்ற பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்வது நல்லது.
தீவிரமாக தாக்கப்பட்ட வயல்களில் நீரை தாங்கி வளரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம். (நெல், வாழை)
பேவேரியா ப்ராங்காரியார்டி எனும் பூச்சிக்கொல்லி பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 1000 எண்கள் எனும் விதத்தில் நிலத்திலிட்டு நீர் பாய்ச்சுவதால் பூச்சித் தாக்குதல் குறையும்.
கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
Imidacloprid - 1 ml / 1 lit.
Clothianidin - 120g/hac.
Fibronil + Imidacloprid - 300 g / hac.
0 Comments:
கருத்துரையிடுக