நெற்பயிரில் துத்தநாக குறைபாடு/ Khaira நோய் மேலாண்மை....
|முன்னுரை:
நெற்பயிரில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் Khaira நோய் என்று அழைக்கப்படும் துத்தநாகம் நுண்ணூட்டச்சத்தின் குறைபாடு பொதுவாக காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் நோய் போன்று காட்சியளிப்பதால் இதனை கண்டறிவது சற்று கடினமே. இந்த நுண்ணூட்டச்சத்தின் குறைபாட்டு அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் பூஞ்சானத்தால் ஏற்படும் நோய் என கருதப்பட்டது. எனவே தான் இது Khaira நோய் என்று அழைக்கப்படுகிறது.
ஏன் இந்த குறைபாடு காணப்படுகிறது?
1. துத்தநாகம்
நுண்ணூட்டத்தின் குறைபாட்டால் இதன் அறிகுறிகள்
தென்படுகிறது.
2. மண்ணின்
கார அமிலத்தன்மை அதிகமாக
காணப்படும் களர் அல்லது
உவர் நிலங்களில் நெல்
சாகுபடி செய்யும் போது.
3. தொடர்ச்சியாக
நெல் பயிரை சாகுபடி
செய்வதாலும்...
4. நெல்
வயலில் தொடர்ச்சியாக நீரை
தேக்கி வைப்பதாலும்...
5. அடர்
நடவு மேற்கொள்வதாலும், மண்ணில்
அல்லது பயிர்களுக்கு அதிக
மணிச்சத்து மற்றும் சிலிகான் உரத்தினை
இடுவதாலும்...
6. மண்ணில்
குறைந்த அளவு சாம்பல்
சத்து, மெக்னீசியம் மற்றும்
கால்சியம் நிலவும் போதும்...
6. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் சாகுபடி மேற்கொள்வதாலும் ஏற்படுகிறது.
குறைபாட்டின்/ நோயின் அறிகுறிகள்:
1. இதன்
அறிகுறிகள் நெற்பயிர்கள் தூர் கட்டும்
தருணத்தில் தொடங்கி கதிர்கள் வெளிவரும்
வரை காணப்படும்.
2. ஆரம்பத்தில்
இலைகள் வெளிர் மஞ்சள்
நிறத்தில் மாறும்.
3. பின்னர்
காவி நிற சிறு
சிறு புள்ளிகள் இலைகளில்
பரவலாக காணப்படும்.
நாளடைவில் இது இலை
முழுவதும் பரவி இலைகள்
பழுப்பு நிறத்தில் மாறிவிடும்.
4. இதனால்
அடி இலைகளில் போதுமான
பச்சையம் இல்லாததால் உணவு உற்பத்தி
பாதித்து வளர்ச்சி குன்றிய செடிகளாக
காணப்படும்.
5. தீவிரமாக
பாதிக்கப்பட்ட செடிகளின் சல்லி வேர்கள்
பாதிப்பு அடைவதுடன் புதிய வெள்ளை
உற்பத்தி மிக குறைவாக
காணப்படும்.
6.இதனால் போதுமான தூர்கள் வெளி வராமல் வளர்ச்சி குன்றுவதுடன் மகசூல் பாதிப்பு ஏற்படும்.
ftdpf;fg;gl Ntz;bait>>>>>>>>
Jj;jehfk; Ez;Z}l;l rj;jpd; FiwghL ghf;Bupay; ,iy fUfy; Neha; kw;Wk; Edp fUfy; Neha; Nghd;Nw fhzg;gLk;. vdNt mij Muha;e;J mjw;Nfw;wthW eltbf;if Nkw;nfhs;tJ cfe;jJ.
மேலாண்மை யுக்திகள்:
1. உழவுக்கு
முன் 15 டன் மக்கிய
தொழு உரம் அல்லது
தேவையான அளவு பசுந்தாள்
உரம்/கம்போஸ்ட் /மண்புழு
உரம் இடவேண்டும்.
2. அடி
உரமாக ஏக்கருக்கு 8 கிலோ
ஜிங் சல்பேட் இடவும்.
3. மண்ணின்
கார அமிலத்தன்மை மற்றும்
ஜிங்க் பற்றாக்குறைகளை தாங்கி
வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து
பயிரிடலாம்.
4. தேர்வு
செய்த ரகங்கள் அல்லது
நாற்றுகளை இரண்டு சதவீத
ஜங்க் சல்பேட் கரைசலில்
15 நிமிடம் வைத்திருந்து பின்னர் நடவு
மேற்கொள்ளலாம்.
5. மண்ணின்
கார அமிலத்தன்மை அதிகமாக
இருக்கும் பட்சத்தில் தழைச் சத்துக்காக
யூரியா இடுவதை தவிர்த்து
அம்மோனியம் சல்பேட் இடவும்.
6. நெல்
வயலுக்கு காய்ச்சலும் பாய்ச்சலமாக தண்ணீர்
விடுவது உகந்தது.
7. ஜிங்
சல்பேட் மற்றும் நீர்த்த
சுண்ணாம்பு பவுடர் ஆகியவற்றை
1:2 கிலோ என்ற விகிதத்தில்
கலந்து ஒரு ஏக்கருக்கு
தெளிக்கலாம். நடவு மேற்கொண்டு
15, 30 மற்றும் 45 நாட்களில் இவற்றை தெளிப்பதால்
இப்பற்றாக்குறையை தவிர்க்கலாம்.
0 Comments:
கருத்துரையிடுக