google-site-verification: googled5cb964f606e7b2f.html பயிர்களில் காணப்படும் எறும்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 15 நவம்பர், 2023

பயிர்களில் காணப்படும் எறும்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

 

எப்போது எறும்புகள் பயிர்களில் காணப்படுகிறது?

சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை , அஸ்வினி, மாவு பூச்சி மற்றும் scale insect பயிர்களை தாக்கும் போது நமது பயிர்களில் எறும்புகள் காணப்படுகிறது. இந்த வகை பூச்சிகள் பயிர்களை தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுவதால் தேன் போன்ற திரவத்தை சுரக்கிறது

இந்த திரவத்தை உண்ண எறும்புகள் கூட்டம் கூட்டமாக செடிகளை வந்தடைகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகள் பொதுவாக கோடை காலங்களில் அதிகமாக தாக்கும். இது சுரக்கும் தேன் போன்ற திரவத்தினால் பயிர்களின் இலைகள் மற்றும் காய்களில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சி காண முடிகிறது. இதனால் செடிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிப்பு அடைவதுடன் மகசூல்களின் தரம் குறைகிறது.

ஏன் எறும்புகளை கட்டுப்படுத்த வேண்டும்?

1. சாறு உறிஞ்சும் பூச்சிகளை தாக்கி அளிக்க  கூடிய  நன்மை செய்யும் பூச்சிகளை இந்த எறும்புகள் அழிக்கிறது.

2.எறும்புகள் காணப்படும் பயிர்களில் நாம் அன்றாட பணிகளை மேற்கொள்வது சற்று கடினம். உதாரணத்திற்கு களை எடுத்தல், மகசூலை அறுவடை செய்தல், உரம் இடுதல் மற்றும் கவாத்து செய்யும் தருணத்தில் இது மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.


3.சில நேரங்களில் எறும்புகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு எடுத்துச் சென்று பூச்சி தாக்குதலின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4.இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

1. சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க அல்லது அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்க்கண்ட பொறிகளை பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் அல்லது நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ள பதிவுகளில் உள்ள இயற்கை/ பூச்சிமருந்துகளை பயன்படுத்தலாம்.

  வெள்ளை                   - மஞ்சள் ஒட்டுப்பொறி/Acetamprid/Afidopyrofen etc...

   இலைப்பேன்கள்         - ஊதா ஒட்டுப்பொறி/Fibronil etc..

    அஸ்வினி                       - Imidacloprid/Acephate etc...

    பச்சை ஈக்கள்               -Imidacloprid/Acephate/Acetamprid etc..

2. சாறு உறுஞ்சும் பூச்சிகளால் உருவான தேன் போன்ற திரவம் மற்றும் கருப்பு நிற பூஞ்சாணங்களை அகற்ற ஏக்கருக்கு 250 கிராம்  வீதம் மைதா பவுடரை தெளிக்கவும். இது 4-5   நாட்களுக்குப் பிறகு தேன் மற்றும் கருப்பு நிற பூஞ்சானத்தை அகற்றி செடிகளில் இருந்து உதிர்ந்து விடும்.

3. தீவிரமாக பாதிக்கப்பட்ட செடி அல்லது மரங்களில் எறும்புகள் இலைகளை ஒருங்கிணைத்து தனது வாழ்விடத்தை உருவாக்கி இருக்கும். இதனை சேகரித்து அழிப்பது நல்லது.


4. எலுமிச்சை/ நார்த்தை போன்ற சிட்ரிக் அமிலம் உடைய பழங்களின் சாறுகள் பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் சாற்றை நீரில் கலந்து தெளிப்பதால் எறும்புகளை விரட்டலாம்.

5. எறும்புகள் நிறைய இருப்பின் எலுமிச்சை அல்லது நார்த்தையின் தோள் பகுதியை 15 நிமிடம் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி பின்னர் அவற்றை செடிகளுக்கு தெளிப்பதால் எறும்புகளை கட்டுப்படுத்தலாம்.

6. ஒரு டீ ஸ்பூன் boric அமிலம், பத்து ஸ்பூன் சர்க்கரை உடன் சற்று நீர் கலந்து கொள்ள வேண்டும். இதில் பஞ்சுகளை முக்கி செடிகளுக்கு அருகில் வைப்பதால் எறும்புகள் விரட்டப்படும்.

7. வெதுவெதுப்பான நீரில் சோப்பு கரைசலை தயார் செய்யவும் அதில் சிறிதளவு புதினா இலையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது அதன் எண்ணையை கலந்து தெளிப்பதால் செடிகளில் இருந்து எறும்புகள் விரட்டி அடிக்கப்படுகிறது.

8. கிராம்பு அல்லது லவங்கப்பட்டை இலைகளை சற்று கசக்கி செடிகளில் வைப்பதால் அதிலிருந்து வரும் வாசம் எறும்புகளை விரட்டியடிக்கும்.

9. மிளகுத் தூளை  தண்ணீரில் கலந்து தெளிப்பதாலும் எறும்புகளை செடிகளில் இருந்து விரட்டலாம்.

10. கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைந்து தெளிப்பதால் எறும்புகளை விரட்டலாம் ஆனால் கரைசலின் சதவீதம் சற்று அதிகமானால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

11. மா செடிகள், கொய்யா கன்றுகள், மாதுளை, பப்பாளி போன்ற இதர பயிர்களில் எறும்புகளை கட்டுப்படுத்த அதன் தண்டுப் பகுதியில் மஞ்சள் ஒட்டுப் பொறியை கட்டுவதால் எறும்புகள் அதனைத் தாண்டி செல்ல முடியாமல் ஒட்டுப் பொறியில் சிக்கி இறந்துவிடும்.

12. பத்து லிட்டர் தண்ணீருக்கு 20 முதல் 25 கிராம் சோப்பை கரைத்து செடிகளை நன்று நனைத்து பிடிப்பதால் சோப்பு கரைசலில் உள்ள பொட்டாசியம் கொழுப்பு அமிலம் எறும்புகளை அழிக்கும் வல்லமை படைத்தது. இதனை தெளிப்பதால் பயிர்களுக்கும்  மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.

13. ஒரு சிறிய கிண்ணத்தில் சமையல் சோடா உடன் சர்க்கரை கலந்து நிலத்தில் அங்கங்கே வைப்பதால் இதை உண்டு எறும்புகள் இறந்துவிடும்.

14. Abamectin/Chlorpyriphos/Permethrin என்ற மருந்தை நீரில் கலந்து தெளிப்பதாலும் எறும்புகளை அழிக்கலாம்.

இது போன்று எண்ணற்ற வழிமுறைகள் எறும்புகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. தேவையின் சூழல் மற்றும் அவசியத்தின் அடிப்படையில் இதனை பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts