google-site-verification: googled5cb964f606e7b2f.html பல தானிய பயிர் விதைப்பு முறை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 13 நவம்பர், 2023

பல தானிய பயிர் விதைப்பு முறை

முன்னுரை:

    இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு மண் வளத்தை மேம்படுத்திடவும் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்திடவும் மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான விகிதத்தில் செடிகளுக்கு கொடுத்திட முக்கிய கருவியாக பல தானிய விதைப்பு முறை பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பல தானிய விதைப்பு முறையை கடை பிடித்தால் போதும் நிலத்தின் வளத்தை மேம்படுத்தலாம்.


    இதை நாம் இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் ஒன்று மானாவாரி நிலத்திற்கு மற்றொன்று நீர்ப்பாசன  வசதியுடைய நிலத்திற்கு எவ்வாறு விதைப்பு மேற்கொள்ள வேண்டுமென.


    மானாவாரி நிலத்தில் விதைப்பு மேற்கொள்ள நினைப்பவர்கள் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிரின் அறுவடை சமயத்தில் கண்டிப்பாக மழை பெய்யும். அப்போது ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை தெளித்து விட வேண்டும். பின்னர் இதனை கோடை மழை பெய்யும் போது மடக்கி உழவு செய்ய வேண்டும். இதில் நாம் வழக்கத்திற்கு மாறாக உழவு செய்யாமல் விதைப்பதால் விதையின் அளவு சற்று அதிகமாக தேவைப்படும். சரியான தருணத்தில் மழை பெய்தால் நிலத்தின் வளத்தை திறன் பட மேம்படுத்தலாம்.

    நீர்ப்பாசன வசதி உள்ள வயல்களில் பயிர் அறுவடை முடிந்து நாம் உழவு செய்து காத்திருக்கும் காலத்தில் பல தானிய பயிரை விதைத்து 45 நாட்களுக்கு பிறகு உழவு செய்தால் நன்மை பயக்கும்.

பல தானிய விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது...

        நமது சுற்றுச்சூழலில் விளையக்கூடிய விதைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்..


1. ஏதேனும் நான்கு தானிய வகை விதைகள் (உதாரணத்திற்கு கம்பு சோளம் திணை வரகு சாமை....)


2.ஏதேனும் நான்கு பயிர் வகை விதைகள் (உதாரணத்திற்கு உளுந்து, பாசிப்பயறு, தட்டப்பயிறு, கொண்டைக்கடலை...)


3. ஏதேனும் நான்கு பசுந்தாள் பயிர் விதைகள் (உதாரணத்திற்கு சனப்பை, தக்க பூண்டு, கொள்ளு, நரிப்பயிர், கொத்தவரை...)


4. ஏதேனும் நான்கு நறுமண பயிர் விதைகள் (உதாரணத்திற்கு கொத்தமல்லி, சீரகம் வெந்தயம், கடுகு....)


        ஒவ்வொரு விதைகளில் தலா 1/2 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து விதைக்க வேண்டும். விதைப்பு செய்த 45 - 50 நாட்கள் கழித்து மடக்கி உழவு செய்ய வேண்டும் பின்னர் 20 - 30 நாட்கள் காத்திருந்து பயிர் செய்யலாம்.


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts